இந்தியாவுடன் இணையும் முழுகாஷ்மீர்- சீனாவிற்கு சிக்கல்..! நழுவும் நிலையில் பாக்.,!

காஷ்மீர் முழுவதையும் கைப்பற்ற இந்தியா மாஸ்டர் ப்ளான் அமல்படுத்த உள்ளது. இதனால் சீனாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-22 05:17 GMT

இந்தியா, பாகிஸ்தான், சீன நாடுகளைக்காட்டும் வரைபடம் 

இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து PoK வைத்தான் முதலில் கைப்பற்றும், பாகிஸ்தான் அதை தடுக்கும் நிலையில் இல்லை. சீனா அதை தடுக்கும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் மொத்த காஷ்மீரையும் ஒரே நேரத்தில் தட்டித்தூக்க ஒரு மாஸ்டர் பிளானை  இந்தியா போடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இப்போது அதுபோட்டுள்ள மாஸ்டர் பிளான் அப்படிப்பட்டது தான். ஆம், திபெத்தை சுதந்திர நாடாக பிரகடபடுத்தினால் சீனாவின் கையிலிருந்து தானாக காஷ்மீர் கைவிட்டுப்  போகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியா-சீனா இடையே கிட்டத்தட்ட எல்லைகள் பெருமளவில் இல்லாமல் போகும். மீதமிருக்கும் எல்லை என்பது ஜிங்யாங் தான். அப்போது சீனாவின் கைவசம் உள்ள காஷ்மீரும் நம் கைவசம் ஆகும்.

இந்தியாவின் முதல் மூவே சீனாவின் அடிமடியில் கைவைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதில் ஹைலைட்டே வெறும் திபெத் மட்டுமா, ஜிங்யாங்கும் சேர்த்து என்றால் அது மெகா பிளான் என்று தான் சொல்லவேண்டும். ஆம், திபெத், ஜிங்யாங் இரண்டும் போனால், சீனா 40% நிலத்தை இழக்க நேரிடும். அதற்கு இந்தியாவுடன் எல்லையே இல்லாமல் போய்விடும்.

ஆனால் இந்த மாஸ்டர் பிளான் ஒட்டு மொத்தமாக தட்டி தூக்கவா, அல்லது ராஜாவிற்கு செக் வைத்து ட்ரா செய்து கொள்ளவா? அது என்ன ட்ரா?

PoK ஐ கிட்டத்தட்ட பாகிஸ்தான் கைவிடும் நிலையில் உள்ளது. அதன் மிக மோசமான பொருளாதார நிலையில், அங்கே மக்கள் கடுமையாக எதிர்ப்பதால், அதை இந்தியாவிற்கு விட்டு விடும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் சீனா அங்கே பல முதலீடுகளையும் செய்துள்ளது. அங்கே மினரல்கள் பலவும் இருப்பதால் அதை விடாது என்பதால், அதற்கு இந்தியா இந்த அடிமடி வைத்தியம் செய்கிறதா?

சீனா, திபெத்தை விட்டால், அதன் ஆசிய வல்லரசு என்ற பட்டத்திற்கு பெரிய பங்கம் வரும். வந்தால் அண்டை நாடுகளிடம் மரியாதை போவது மட்டுமல்ல, தன் சொந்த நாட்டிலேயே ஜிங்பின்னுக்கு பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதால், சத்தமில்லாமல் PoK ஐ இந்தியாவிற்கு விட்டு கொடுத்து, கொஞ்ச நாள் இந்தியா திபெத்தை பெரியளவில் கைவைக்காமல் இருக்க சமரசம் செய்து கொள்ள முன் வரலாம்.

அதை செய்யாவிட்டால் திபெத் மக்களைத்  தாண்டி, சீனாவின் ராணுவம் இந்தியாவுடன் போரிட முடியாது என்பது அதற்கு தெரியாதா என்ன? இந்தியா 370 ஷரத்தையும் 35 A வையும் நீக்கிய பின்னால், காஷ்மீரில் பெருமளவில் பயங்கரவாதம் குறைந்தது. பெருமளவில் அமைதி திரும்ப, டூரிஸம் பெருகியது, துப்பாக்கி சத்தம் கேட்காத இந்த வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை தந்தது. அதனால் மக்களுக்கு ஒரு சுபிட்சமான வாழ்வு கிடைக்க, PoK ல் உள்ளவர்களும் அப்படிப்பட்ட ஒரு நல்வாழ்க்கை வாழ விரும்பினார்கள்.

ஆம், முன்பு வெறும் 20% மக்கள் இந்தியாவோடு இணைய விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை இப்பொழுது 60% ஆக உயர்ந்தது. மேலும் பாகிஸ்தானின் மோசமான பொருளாதாரத்தால் அவர்களின் அத்தியாவசிய தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இந்தியாவோடு இணைகிறோம் என்று பெருமளவில் போராடி வருகிறார்கள்.

அந்த போராட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இல்லை. ஏனெனில் முன்பு போல அகிம்ஷா வழியில் போராடாமல், ராணுவத்தை பலமாக தாக்குகிறார்கள். அவர்கள் மலைகளில் மறைந்திருந்து தாக்குவதால், அதை பாக் ராணுவம் கையாள முடியவில்லை. அதனால் பாதுகாப்பான இடத்தை விட்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை.

அதனால் பாகிஸ்தான் ராணுவம் அதை கைவிட்டுவிட தயாராகி விட்டது. ஆனால் அதை சீனா அனுமதிக்க மறுக்கிறது. ஏனெனில் அந்த காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது. மற்றொரு பகுதியான சீனா பிடித்து வைத்துள்ள காஷ்மீரும் சீனாவிடம் இருக்கிறது. இதை கொடுத்தால் நாளை அதையும் இந்தியா கேட்கும். PoK கைவிட்டுப்  போனால், பாகிஸ்தானுடன் நிலவழியாக நேரடி தொடர்பு இல்லாமல் போய்விடும். இது நடந்தால் சீனா அங்கு செய்த மிகப்பெரிய முதலீடுகள்? என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது.

சரி ஏன் பாக் இந்த முடிவுக்கு வரவேண்டும்? அதன் வாழ்வின் நாடித்துடிப்பே காஷ்மீர் தானே?

பாகிஸ்தான் சீனாவின் இரும்பு சகோதரனாக இருந்த அந்த நாடு. இன்று அது சீனாவிடம் வாங்கிய கடனால் ஒரு கொத்தடிமையாகி விட்டது. சீனா தான் கொடுத்த கடனுக்கு ஈடாக பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகத்தையும், அதை சுற்றியுள்ள ஒரு பெரிய நிலப்பரப்பையும் கேட்கிறது. அதாவது ஸ்ரீலங்காவில் ஹம்பந்தோட்டா ஞாபகம் வருகிறதா? அதே ஃபார்முலாத்தான்? ஆனால் இங்கே அது கோரும் நிலப்பரப்பு மிகப்பெரியது.

அதை செய்யாவிட்டால் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க நிர்பந்திக்கிறது. அதை கொடுக்கும் நிலையில் எல்லாம் பாகிஸ்தான் இல்லை. அதை கொடுக்க வேண்டுமெனில் அமெரிக்காவின் உதவி இல்லாமல் அது சாத்தியம் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு, பாகிஸ்தானுக்கு உதவ என்ன தேவை இருக்கிறது?

தைவான் விஷயத்தில் சீனா அதன்மீது போர் தொடுத்தால், அமெரிக்கா அதை தாக்கியே தீரவேண்டும். சீனாவுடனான ஒரு போரில் அமெரிக்கா வெல்லலாம் என்றாலும், அந்த போரினால், அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்த்திக்க வேண்டும். அதனால் அது தைவான் மீது போர் தொடுக்காமல் இருக்க வேண்டுமெனில் சீனாவிற்கு தலைவலி, திருகுவலி எல்லாம் கொடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, அமெரிக்காவின் டாலர் மதிப்பு பெருமளவில் வீழ்ந்து வருகிறது. சீனா, இந்தியா உற்பட பல நாடுகள் தங்கள் வர்த்தகத்தில் டாலரை உபயோகப் படுத்துவதில் இருந்து வெளியேறி வருகிற சூழலில், இப்போது அதனிடம் இருக்கும் டாலரை பாகிஸ்தானுக்கு கடனாக தலையில் கட்டினால் அது சீனாவிற்கு கொடுக்கும். அதனால் சீனாவிடம் டாலர் அதிகம் சேர்கிறது என்றால் அதை வைத்துக்கொண்டு பிஸினஸ் செய்தாக வேண்டிய சூழல் வரும்.

அங்கே இன்னொரு மத்யஸ்தம் நடக்கிறது. பாகிஸ்தானின் சீன கடனை இந்தியா அடைக்கும். அதற்கு பாக் PoK விட்டுகொடுக்கும். அதன் மூலம் அமெரிக்காவிடம் இருக்கும் மித மிஞ்சிய டாலரை, இந்தியாவிற்கு கடனாக கொடுக்கும். இந்தியா அதை பாக்கிற்கு கொடுக்க, பாகிஸ்தான் அதை சீனாவிற்கு கொடுக்கும். தலை சுத்துகிறதா?

அதையும் தாண்டி பாகிஸ்தான் போடும் கணக்கு, தன்னால் கடன் கட்ட முடியாது எனும்போது தனக்கு கடன் கொடுத்த சீனா பலமிழந்தால், அல்லது உடைந்தால் அதைவிட லாபம் வேறென்ன இருக்க முடியும்? அதாவது மேற்சொன்ன நடவடிக்கைகள் சீனாவை பலவீனப்படுத்தும் என்பது அதன் கணக்கு. அதனால் அது அமெரிக்காவின் பக்கம் சாயத்  தொடங்கி இருக்கிறது.

இந்த சூழலில் சீனாவை கட்டம் கட்ட இந்தியா- அமெரிக்கா இரண்டும் சேர்ந்து கார்னர் செய்ய திபெத்தை கையில் எடுத்துள்ளது. இன்றைய நிலையில் சீனா பயமுறுத்துவது மட்டுமல்ல, அமெரிக்கா, இந்தியாவுடன் ஒரு போரை சந்திக்க முடியாத பொருளாதர சூழலில் உள்ளது. அதனால் இந்த நகர்வு, சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை பெருமளவில் வீழ்ச்சியடையச் செய்யும். அதன் சில்க் ரோட்டின் நாடிதுடிப்பு, நசுக்கப்படும். அதன் மூலம் சீனாவின் ஆதிக்கம் மெதுவாக வீழ்ச்சியை சந்திக்கும்.

சரி, PoK ஐ கொடுத்துவிட்டால் பிரச்சினை அடங்கிவிடுமா?சீனா இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் கோர்கிறது. அதை சீனாவால் செய்யாமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளர வாய்ப்பை ஏற்படுத்தி விடும். அப்படியெனில் தன் பொருளாதார ஆதிக்கம் கை நழுவி போய்விடும் என்பதால் இதை ஏற்காது, ஏற்காமல் இருக்கவும் முடியாது.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் வாங்கிய இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் சீனாவின் கப்பற்படைக்கு பெரிய சவால். வியட்நாம் இந்தியாவுடன் நெருங்கி தென் சீனக்கடலில் எண்ணெய் எடுக்கிறது. ஜப்பான் மீண்டும் தன் சொந்த ராணுவத்தை பலப்படுத்துகிறது. மேலும் இந்தியா மங்கோலியாவுடன் நெருக்கம் காட்டுகிறது.

இது எல்லாம் வெற்று வேட்டு என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. சீனாவின் எல்லையில் இந்தியா பத்தாயிரம் டேங்குகளை நிறுத்தியுள்ளது. இந்தியா தனது முக்கிய போர் விமானங்களை இப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து சீன எல்லைக்கு நகர்த்தியுள்ளது.

மேலும் இந்தியா தனது தேஜஸ் போர் விமான உற்பத்திக்காக காத்திருக்காமல் 12 மிராஜ் ரக போர் விமானத்தை கத்தாரிடம் இருந்த அவசரமாக வாங்கியிருக்கிறது (நமது ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை கொடுத்து, பின்னர் விடுவித்ததே கத்தார், ஞாபகம் இருக்கிறா?)

இந்த சூழலில் சீனாவிற்கு இந்தியா வைத்துள்ள செக், PoK விஷயத்தில் தலையிடாதே, தலையிட்டால் நான் திபெத்தை மட்டுமல்ல ஜிங்யாங்கையும் சேர்த்தே கையில் எடுப்பேன் என்பதாகும்.

இரண்டாவதாக, தைவான் மீது நீ போர் தொடுத்தால், திபெத்தை இந்தியா சுதந்திர நாடாக மாற்றும். அதன் பின்னணியில் அமெரிக்கா உற்பட பல நாடுகள் பின்னால் மட்டுமல்ல முன்னாலும் இருக்கும் என்று தெளிவாக சொல்லி விட்டது.

Tags:    

Similar News