யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 25 ரயில்கள் ரத்து-ரயில்வே
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 29 ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது;
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 29 ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தடையில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறிப்பிட்ட தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருவதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு பயணம் மேற்கொள்ளமுடிந்தது.
கொரோனா பாதிப்பு, முழுஊரடங்கு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அந்த புயல் தாக்கி ஒரு வார காலத்திற்குள் வங்கக் கடலில் யாஸ் என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 24 (இன்று முதல்) 29ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. கொரோனா ஒருபக்கம் புயல் மறுபக்கம் மக்களை வாட்டி வதை்து வருகிறது.