தினமும் 1 மீன் ! குழம்பு வைத்து சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயங்கள் ! இனிமேல் நாமும் சாப்பிடலாமா....?
Fish benefits in tamil தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். இதன் பயன்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.;
மீன்கள், நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.
இதனை மீனவர்கள் பிடித்து நமக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றன.இதனால் நமக்கும் பயன் மீனவர்களுக்கும் பயன்.இதனை விற்றால் கிடைக்கும் பணத்தால் மட்டும் பயன் தரவில்லை உடலுக்கும் நல்ல ஊட்டச்சத்துக்களை தருகின்றன.பெரும்பாலும் மீனை அதிகம் விரும்பி குழம்பாகவும், சில்லியாகவும் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் குழம்பில் போடும் மீன் தான் மிகவும் சத்தானது.எனவே அதன் நன்மைகளை பற்றி பார்ப்போம். தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் என்ன மாற்றம் நடக்கும் ? | What happens when you eat fish every day?
மீன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் / Benefits of eating fish
1. மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது.இதனால் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கும்.
2. மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. முக்கியமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது.
3. தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம். மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால் மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
4. மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எனவே தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகை மீனை சேர்த்து கொள்ளுங்கள்.
5. சிலருக்கு காரணமின்றி மனசோர்வு ஏற்படும், அப்பொழுது மீன் சாப்பிடுவதனால் மனசோர்வு குறைகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டிஹெச்ஏ முதல் வைட்டமின் டி வரை, மீன்களின் அனைத்து கூறுகளும் மனநலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவும். மீன் ஒரு இயற்கையான மன அழுத்த எதிர்ப்பு, மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை தடுக்க உதவுகிறது.
6. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.கெட்ட கொழுப்புகளை குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொழுப்புக்கள் சேர்வதையும் தடுக்கிறது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
7. நீங்கள் தவறாமல் மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படும். சாதாரணமாக மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட வீக்கத்தின் காரணமாகத் தான் முடக்குவாதம் ஏற்படுகிறது. இந்த முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க வேண்டும் என்றால் உணவில் மீனை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒரே ஒரு மூலமாகும். இது உங்கள் உடலில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கிறது. மேலும் அனைத்து வகையான பெரிய நோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது.
8. நன்மைகளைத் தவிர, மீன் சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றம், தூக்கத்தின் தரம், சருமத்தின் தரம், செறிவு ஆகியவற்றை அதிகப்படுத்துவதுடன் வீக்கத்தைக் குறைக்கும். இவ்வாறு நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய மீனை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது சிறந்த உணவுப்பழக்கத்தில் ஒன்று.எனவே தினமும் மீன் உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.