ஏழே பொருள்தான்.. கூட 25 நிமிஷம் ஒர்க்அவுட்...எளிதில் ஸ்லிம்மாக சூப்பர் பிளான் இது...!

பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டன. உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை பழம் மிகவும் உதவும் என எவ்வாறு உடல் எடை குறைப்போம் என்பதை பார்க்கலாம்.

Update: 2024-11-19 06:30 GMT

உடல்பருமன் ( Obesity) என்பது நாம் சாப்பிடும் உணவை பொறுத்து தான் வரும். உடலுக்கு சேராத எண்ணெய் பலகாரங்கள் , கடை உணவுகள் என கண்ட உணவுபொருட்களை சாப்பிடுவதால் கொழுப்பு அதிகமாகி உடலில் எடை கூடுகிறது. இதனால் உடலில் பல நோய்கள் ஏற்பட ஆரம்பம் ஆகிறது. இதனால் சிலர் பல வழிகளை செய்கிறனர். அதற்கு நாம் வாயை கட்டுப்படுத்தி சத்தான உணவை மட்டும் சாப்பிட்டால் உடல் எடையை சீக்கிரம் குறைக்கலாம்.சிறந்த முறையில் உடல்பருமனை குறைக்க சில வழிகளை பார்ப்போம்.

என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உடல்பருமன் (Obesity) குறையும் | What do you eat in weight loss ? 

1.பெர்ரி பழங்கள்:

பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டன.  உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிட உகந்தது.

2.எலுமிச்சை:

உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை பழம் மிகவும் உதவும் சற்று மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர உடலில் சேர்ந்து கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கழிவுகள் நீங்கிவிடும். இது ஒரு எளிமையான மற்றும் நல்ல பலன் தரக்கூடிய வழியாகும்.

3.பசலைக்கீரை :

பொதுவாக உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா கீரைகளும் சாப்பிட உகந்தது தான். இருப்பினும் பசலைக்கீரையை குறிப்பிட்டு கூறலாம். பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. பசலைக்கீரை பல்வேறு நன்மைகளை தருகிறது. கலோரிகளின் அளவு குறைவாகவே இருக்கும். கூடுதலாக இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பசலைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

4.கறிவேப்பிலை:

உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை அற்புதமான வகையில் உதவுகின்றது. இந்த கறிவேப்பிலையின் அருமை தெரியாமல் பலரும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால் இந்த கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதை பொடியாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் அல்லது இலைகளை ஒதுக்காமல் மென்று சாப்பிடுவது உகந்தது. இது தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே பலனை பார்க்கலாம்.

5.தண்ணீர்:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற அற்புதமான வழியாகும். சாதாரண தண்ணீர் தானே என்று மட்டும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

6.கிரீன் டீ:

தினமும் கிரீன் டீ தயாரித்து பருகலாம். இந்த கிரீன் டீ அதிக அளவு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ அருந்துவதால் பல்வேறு  ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

7.சூப்:

காய்கறி மற்றும் கீரை சூப்-களை சமைத்து சாப்பிடுவது உகந்தது. இந்த சூப் வகைகளில் தேவையான அளவு மிளகு சேர்க்க வேண்டும். கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிளகில் அதிக அளவு உள்ளது.

உடல் எடை(Obesity) குறைய  என்னென்ன மாற்றங்களை கடைபிடிக்கலாம் |  Weight loss tips

1.உடற்பயிற்சி:

உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும். தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.

2.சாப்பிடும் முறை:

சாப்பிடும்பொழுது டிவி, மொபைல் போன் போன்றவற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.  இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.

3.தூக்கம் தேவை:

சரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை கூடும்.

4.எண்ணெய் பண்டங்கள் கூடாது:

எண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது. சிக்கன் 65 , போண்டா, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.

5.இனிப்பு வேண்டாம்:

இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவே கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6.நடந்தே செல்லுங்கள்:

பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கு எல்லாம் வண்டியை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போங்கள். அதைப்போல மேல் தளங்களுக்கு செல்லும் லிஃப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளின் வழியே நடந்து செல்லுங்கள்.

7.மன அழுத்தம் வேண்டாம்:

வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது குறைகள் இருந்தால் அதற்காக  கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதிரியான தேவையில்லாத மன அழுத்தங்கள் உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன.

8.யோகாசனம்: 

உடல் எடையை குறைப்பதற்கு என்றே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாக கற்றுக்கொண்டு நாள் தவறாமல் செய்வதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

Tags:    

Similar News