இரும்புச்சத்து குறைபாடா? சூப்பர் 10 காய்கள் போதுமே.. 6 மாசத்துல அட்டகாச மாற்றம் கிடைக்கும்..!

vegetables for iron deficiency இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மிக அதிக அளவில் இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன, இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.;

Update: 2024-11-19 10:00 GMT

vegetables for iron deficiency இரும்புச்சத்து நம்ம உடலுக்கு தேவையான மிக முக்கியமான கனிம சத்தா இருக்கு . ஆனால் , இது இந்தியால தான் அதிகமா இருக்கு. குறிப்பா பெண்கள் தான் மிக அதிக அளவுல இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு வராங்க. இதற்கு காரணம் என்ன, இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன, வெஜிடேரியன்களுக்கு ஏன் அதிகமாக இந்த பிரச்சனை வருகிறது, இரும்புச்சத்து அதிகமாக உள்ள வெஜிடேரியன் உணவுகள் என்னென்ன என்பது பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு | Iron Deficiency in India

இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாட்டால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகம். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின் படி,

6 - 59 மாத குழந்தைகளில் 67 சதவீதம் பேரும்,

15 - 49 வயதுடைய ஆண்களில் 25 சதவீதம் பேரும்,

15 - 49 வயதுடைய பெண்களில் 57 சதவீதம் பேரும் ,

இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். | vegetables for iron deficiency

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் | Effects of Iron Deficiency

குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நரம்பியல் வளர்ச்சியை பாதிக்கிறது.இதனால் கவனக் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, உடல் வளர்ச்சி ஆகியவையும் பாதிக்கப்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு உண்டாகக் காரணங்கள் | Causes of Iron Deficiency 

இரும்புச்சத்துள்ள உணவுகள் பற்றாக்குறை - இந்தியாவை பொருத்தவரையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் அதிகம் என்பதால் கீரைகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் போதிய அளவு எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இரும்புச்சத்தை உறிஞ்சுதல் - எவ்வளவு தான் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலும் கூட உடல் போதிய அளவு இரும்புச்சத்தை உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போகும்போது இந்த குறைபாடுகள் உண்டாகும்.

மாதவிடாய் கால ரத்தப்போக்கு - பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்காலும் இரும்புச்சத்து பற்றாக்குறையாலும் அனீமியாவாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பமாக இருக்கும்போது - கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வழக்கத்தை விடவும் அதிகமாக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதனாலும் இந்த பற்றாக்குறை ஏற்படுகிறது.

உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்படுவது - மலேரியா, குடல் புழுக்கள், மலச்சிக்கல் போன்ற கிருமித் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன.

பிரச்சனைகள் - வறுமை, போதுமான சத்துணவு இல்லாமை, சுகாதார சேவைகளைப் பெற முடியாத நிலை ஆகியவை இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

இரும்புச்சத்தின் முக்கியத்துவம் | Importance of Iron

ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி :

ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் என்பது ரத்த செல்களில் உள்ள புரதமாகும். இதுதான் உடலின் எல்லா பகுதிகளுக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது.

சோர்வு, பலவீனத்தை தடுக்கும்:

இரும்புச்சத்து குறைபாடு அதிகமான சோர்வு, ஆற்றல் குறைவு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். ஆகவே, போதுமான அளவு இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தவிர்க்கலாம்.

மூளை செயல்பாடுகளுக்கு உதவும் :

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க, இரும்புச்சத்து அவசியம். அது குறையும்போது கவனக்குறைபாடு மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வெப்பநிலையை சமன்படுத்தும்:

இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது உடலின் வெப்பநிலையை சமன்படுத்தும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

இரும்புச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது குறையும்போது தொற்று நோய்கள் உண்டாகக் காரணமாகிவிடும்.

கர்ப்பகாலத்தில் முக்கியம்:

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் தாதுக்கள் கிடைக்கவும் இரும்புச்சத்து அவசியம்.

உடல் வளர்ச்சிக்கு :

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் வளர்ச்சிக்கும், உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கும் இரும்புச்சத்து மிக அவசியம்.இரும்புச்சத்து குறைபாட்டால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து அதனால் உடலின் வேலைத்திறனும் குறையும். பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது அதிகப்படியாக உடல் சோர்வு, எனர்ஜி குறைபாடு, ஹீமோகுளோபின் பற்றாக்குறை, கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்கள், பேறுகால மரணங்கள் ஆகியவை இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன.

இரும்புச்சத்து குறைபாட்டை தீர்க்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் | Steps Taken by the Indian Government to Address Iron Deficiency

இந்தியா இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கும் நாடாக உள்ளது. இதை குறைக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அனீமியா இல்லாத இந்தியா (anemia free india) என்கிற குறிக்கோளை மையமாக வைத்து, குழந்தைகள், இளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலங்கள் உள்ள மாத்திரைகளை கொடுப்பது, டி-வோர்மிங் மாத்திரைகள் கொடுப்பது, உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை செய்ய அறிவுறுத்தல் போன்றவற்றை முன்னெடுக்கிறார்கள்.

விழிப்புணர்வை ஏற்படுத்துதல் - பொதுமக்களுக்கு இரும்புச்சத்தின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

செறிவூட்டப்பட்ட உணவுகள் - அரசாங்கத்தால் வழங்கப்படும் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் இரும்புச்சத்து மற்றும் பிற கனிமங்கள் செறிவூட்டப்பட்டு வழங்குதல் ஆகிய நடிவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்கிறது.

இரும்புச்சத்து நிறைந்த வெஜிடேரியன் உணவுகள் | Iron-Rich Vegetarian போஒட்ஸ்

பசலைக்கீரை - பசலைக்கீரையில் இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது. இதை சாலட், கூட்டு, மசியல் என பலவிதங்களில் செய்து சாப்பிட முடியும்.

முருங்கைக்கீரை - இரும்புச்சத்து கொட்டிக் கிடக்கும் கீரைகளில் முதன்மையானது இந்த முருங்கை கீரை தான். இதை சூப், கூட்டு, பொரியல், ஸ்மூத்தி, பொடி உள்ளிட்ட முறைகளில் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அரைக்கீரை - அரைக்கீரையிலும் இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது. இதில் கூட்டு, பொரியல், கடையல் ஆகியவையாக செய்து எடுத்துக் கொள்ளலாம்.

வெந்தயக் கீரை - வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றன. இதை கூட்டு, சப்பாத்தி போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

எள் விதைகள் - இரும்புச்சத்து அதிகம் உள்ள விதை இந்த எள் விதை. இதில் இரும்புச்சத்தோடு கால்சியமும் சேர்ந்து மிகுந்து இருக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உளள்வர்கள் தினமும் ஒரு எள் உருண்டை வீதம் எடுத்துக் கொள்ளலாம். அதுதவிர துவையல், சாலட் போன்றவற்றில் தூவி சாப்பிடலாம்.

கொண்டைக்கடலை - கொண்டைக்கடலையில் புரதங்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக்கடலை எடுத்துக் கொள்வது நல்லது.

பருப்பு வகைகள் - எல்லா வித பருப்பு வகைகளிலும் புரதத்துடன் இரும்புச்சத்தும் நிறைந்து இருக்கிறது. துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை உங்களுடைய சாம்பார், ரசம் உள்ளிட்ட தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெல்லம் - வெல்லம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் மிக முக்கியமானது. உங்களுடைய இனிப்புகளில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

பீட்ரூட் - பீட்ரூட் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் மிக முக்கியமான உணவாக இருக்கிறது. பீட்ரூட்டை பொரியலாகவோ ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

மாதுளை பழம் - மாதுளை பழத்தில் இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது. இதை பழமாகவோ ஜூஸாகவோ தினசரி எடுத்துக் கொண்டு வர இரும்புச்சத்து குறைபாட்டை தவிர்த்து ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்ய முடியும்.

Tags:    

Similar News