பெண்களின் கருப்பை தொடர்பான அனைத்து கோளாறுகளையும் ஓட ஓட விரட்டும் உளுந்த கஞ்சி...!வாங்க இன்னும் தெரிஞ்சிக்கலாம்....!
உளுந்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, ஜிங்க், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.இதனால் இதை தினமும் பருகினால் உடல் வலிமை பெறும்.இடுப்பு, முதுகு, கை கால், மூட்டு வலி நிரந்தரமாக நீங்க உளுந்தங்கஞ்சியை காய்சி குடித்தால் வேலை செய்யும்போது சோர்வடையாமல் உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.இதில் இன்னும் சில செய்திகளை காணலாம்.;
கஞ்சி குடிக்கவே கஷ்டம் ஆனா இந்த உளுந்தங்கஞ்சி ( Ulunthanganji health benefits in tamil ) குடுச்சா மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் .இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பர். உளுந்தங்கஞ்சியை சர்க்கரை,வெல்லம், நாட்டுச்சக்கரை & பனங்கற்கண்டு போன்ற சத்தான பொருட்களை கொண்டு கஞ்சியில் சேர்த்து சுவையாக குடிக்கலாம்.உடலுக்கும் மிகவும் சத்தானது.பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானது.
உளுந்தங்கஞ்சி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் | Ulunthanganji health benefits in tamil
1.உளுந்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, ஜிங்க், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.இதனால் இதை தினமும் பருகினால் உடல் வலிமை பெறும்.
2. இடுப்பு, முதுகு, கை கால், மூட்டு வலி நிரந்தரமாக நீங்க உளுந்தங்கஞ்சியை காய்ச்சி குடித்தால் வேலை செய்யும்போது சோர்வடையாமல் உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
பெண்களின் கர்ப்பப்பைக்கு நன்மை தரும் | Beneficial for women's uterus
பொதுவாக உளுந்தை பெண்கள் பருவம் அடையும்போதும் பேறுகாலத்திற்குப் பின்பும் அதிகம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதற்குப் பின் பல மருத்துவ காரணங்கள் உள்ளன. அதாவது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், கருப்பையைப் பலப்படுத்தவும், குழந்தைப் பேறினை அதிகரிக்கவும் உளுந்து பயன்படுகிறது.
ஆகையால் தான், இட்லி மாவு, தோசை மாவு, வடை, கஞ்சி தயாரிப்பில் முக்கிய பகுதிப் பொருளாக உளுந்து உள்ளது. வாரம் ஒருமுறை இந்த உளுந்தங்கஞ்சியை குடித்து வந்தால் கருப்பை கோளாறு இல்லாமல் தடுக்கலாம். இந்த உளுந்தங்கஞ்சியானது பெண்களுக்கு வலு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.குழந்தை இன்மைக்கு ஒரு சிறந்த தீர்வு அளிக்கிறது.ஆனால் அந்த உளுந்தங்கஞ்சியை சிலருக்கு செய்யும் செய்முறை தெரியவில்லை.ஆகையால் செய்முறையை பார்ப்போம்.
செய்முறை :
1.முதலில் உளுந்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
2.உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
3.இரண்டும் நன்கு உறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4.பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்துவைக்கப்பட்ட உளுந்து மற்றும் வெந்தயத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஊற்றிக்கொள்ளவும்.
5.பிறகு அதில் நுணுக்கிய ஏலக்காய், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.அடுத்து அதில் 2 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து 15 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
6.கஞ்சி தயாராகியவுடன் மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய் சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்த்து இறக்கினால் சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.