என்ன இது இது புதுசா இருக்கு..! இத சாப்பிட்டா சர்க்கரை நோய் சரி செய்ய உதவுதாமே..! | Sweet potato leaf benefits in tamil

சேப்பங்கிழங்கு இலைசாப்பிடுவதால் இன்சுலின் மேம்படுவதற்கு உதவியாக உள்ளது .

Update: 2024-11-21 11:00 GMT

முருங்கையிலை போலவே சத்துக்கள் நிறைந்தது சேப்பங்கிழங்கு இலைகளாகும் (Sweet potato leaf benefits in tamil). பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த சேப்பங்கிழங்கை விட இந்த கிழங்கின் இலைகள்(Sweet potato Leaves) அதிக சத்துக்கள் இருக்கிறது.வைட்டமின் A, E, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளன. கண்களுக்கும், பற்களுக்கும் எலும்புகளுக்கும், உறுதியையும், ஆரோக்கியத்தையும் இந்த கிழங்கு தரக்கூடியவை. 

இந்த இலை பெரும்பாலும் யாரும் உணவில் சேர்ப்பதில்லை ஆனால் இதை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி ஆக்கும்.உடலும் வலுப்பெரும். பெரும்பாலும் இது சந்தைகளில் இருக்கும். ஒரு முறை சாப்பிடுங்க மறுக்கா எப்போ சாப்பிடலா தோணும். அனைவரும் சாப்பிடும் கீரை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம். இதனால் சர்க்கரை குறைய வாய்ப்பு அதிகம்.இது சர்க்கரைக்கு மட்டுமல்ல இன்னும் பல மாற்றம் செய்கிறது. அதை இதில் பார்க்கலாம். 

சேப்பங்கிழங்கு இலைசாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of Eating Sweet potato Leaves

1.ஆண்மை குறைபாடு:

நார்ச்சத்து அதிகமுள்ள இந்த கிழங்கு செரிமான கோளாறை நிவர்த்தி செய்து குடல் புண்களையும் ஆற்றுகிறது. முருங்கை கீரையை போலவே இந்த சேப்பங்கிழங்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது. சேப்பங்கிழங்கு இவ்வளவு நன்மைகளை தந்தாலும் சேப்பங்கிழங்கு இலைகளில் கூடுதல் மருத்துவ தன்மைகள் நிறைந்துள்ளன. இதய வடிவில் காணப்படும் சேப்பங்கிழங்கு இலைகளில் வைட்டபின் B நிறைந்துள்ளன. எனவே நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகிறது இந்த இலைகள்.

2.புற்றுநோய் செல்கள்:

வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் (Sweet potato Leaves) நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு உண்டு. பெண்களை அதிக அளவு பாதிக்கும் மார்பக புற்று நோயையும் நெருங்க விடாமல் செய்ய இந்த சேப்பங்கிழங்கு இலைகள் துணைபுரிகின்றன. இலைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.

3.நார்ச்சத்து:

உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும் இந்த கீரையை(Sweet potato Leaves)  பயன்படுத்தலாம். முருங்கைக்கீரையை போலவே இந்த சேப்பங்கிழங்கு இலைகளிலும் (Sweet potato Leaves) இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. அதனால், அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

4. சர்க்கரை நோய் சரி செய்யும் :

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதுவொரு அருமருந்து எனலாம். ஏனென்றால், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் அனைத்துமே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய அம்சங்களாகும். இந்த இலைகளின்(Sweet potato Leaves) சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். எனவே, சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன் திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.

5.அலர்ஜி:

இந்த இலைகளை(Sweet potato Leaves)  ஒரு கைப்பிடி எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். அந்த நீரை வடிகட்டிவிட்டு வேக வைத்த இலைகளை வைத்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக இலையை சாப்பிடக்கூடாது. சிலருக்கு இந்த இலைகளால் தோலில் அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரக கற்களையும் உருவாக்கலாம். எனவே பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடலாம். இத்தனை சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு இலைகளை டாக்டர்களின் ஆலோசனையை பெற்று பயனடையலாம். 

Tags:    

Similar News