மேக்-அப் போடலைன்னாலும் முகம் அழகா இருக்கணும்னு நினைக்கிறீங்களா ?.. இந்த சில விஷயங்கள மட்டும் கண்டிப்பா மறக்காம பண்ணுங்க ..!

இயற்கையாக சருமத்தை பாதுகாக்க சரும பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சருமத்துக்கு செய்ய வேண்டிய முக்கிய பராமரிப்புகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.;

Update: 2024-11-21 06:00 GMT

மேக்-அப்( Makeup)  போடுவது யாருக்கு தான் பிடிக்காது . ஆனால் , சிலர் மேக்-அப்( Makeup)  போட்டால்  முகத்தில் எதாவது பிரச்சனை வந்து விடும் என்ற பயத்திலேயே மேக்-அப்( Makeup)  போடுவதை தவிர்த்து விடுகின்றன.அதனால் இயற்கையாக சருமத்தை பாதுகாக்க சரும பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையாக சருமத்தை பாதுகாப்பதன் மூலம் முகத்தை பொலிவாகவும், எந்த ஒரு முகப்பரு வராமலும் தடுக்கலாம். சருமத்துக்கு செய்ய வேண்டிய முக்கிய பராமரிப்புகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம். Skincare routine for all types of skin at home in tamil

முகம் அழகாக இருக்க மேக்- அப் தான் போட வேண்டும் என்று இல்லை. சரியான முறையில் சருமத்தை பராமரித்தாலே(Skincare)  சருமம் எப்போது அழகாக இருக்கும்.அதனால் நீங்கள் மேக்-அப்( Makeup)  போடுகிறீர்களோ இல்லையோ? இந்த ஐந்து சரும பராமரிப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வீட்டிலேயே சரும பராமரிப்பு | Skincare routine for all types of skin at home in tamil

நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தான் முகப்பருக்கள், திட்டுக்கள் போன்றவற்றால் முகம் பாதிக்கப்படாமல் இருக்கும். அதற்கு சில சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். சருமத்தை முறையாக பராமரிக்கும்(Skincare)  போது சருமத்தில் தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

இந்த சரும பராமரிப்பு(Skincare)  என்பது ஒவ்வொரு சருமத்துக்கும் ஏற்ப மாறுபடும். ஆனால் எல்லா சருமத்துக்கும் அடிப்படையான பராமரிப்பு என்பது பொதுவானது. அப்படியான பராமரிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை செய்வது முக்கியம்.

சரும பராமரிப்புக்கு க்ளென்சர் அவசியம் | A cleanser is essential for skincare

சரும ஆரோக்கியத்தில் சுத்தம் என்பது மிகவும் அவசியம். அந்த வகையில் நமது முகத்தை சுத்தப்படுத்துவதற்கு க்ளென்சர் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதைப் போலவே இதனை ஒரு நாளைக்கு குறைந்தது இருமுறை பயன்படுத்தலாம். இதனை காலையில் ஒரு முறையும் இரவு ஒரு முறையும் என இரண்டு முறை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள், தூசிகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றை சுத்தம் செய்கிறது. மேக்-அப்( Makeup)  போன்ற சாதனங்களை பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக க்ளென்சரை பயன்படுத்த வேண்டும். இது மேக்-அப்பை( Makeup)  சுத்தம் செய்யவும் உதவுகிறது.

சரும பராமரிப்புக்கு டோனர் அவசியம் | A toner is essential for skincare

க்ளென்சரை பயன்படுத்திய பிறகு அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது டோனரை பயன்படுத்துவது தான். நமது சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுப்பதற்கு மாய்ஸ்ரைசர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு டோனர் முக்கியம். இருப்பினும் இதைக் குறித்து அதிக பேருக்கு விழிப்புணர்வு இல்லாததால் இதனை பயன்படுத்துவதில்லை.

நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு டோனரில் உள்ள பண்புகள் உதவுகின்றன. ஒரு சிலருக்கு முகத்தில் துளைகள் இருக்கும். இந்த துளைகளை சரி செய்வதற்கு இது உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகள், தூசிகள், முகப்பருவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் போன்றவற்றை தடுப்பதற்கு இது உதவுகிறது.

சரும பராமரிப்பில் சீரம் பயன்படுத்துவது ஏன் அவசியம்? | why is serum important for face

நமது சரும பராமரிப்பில் (Skincare) சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல பொருட்கள் இருக்கின்றன. அவற்றின் மிக முக்கியமானது சீரம். சீரத்தில் உள்ள பண்புகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. நமது சருமத்தில் இறந்த செல்களை அகற்றுவதற்கு இது உதவுகிறது. மேலும் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. சருமத்தில் மிருது தன்மையை மீட்டெடுக்க இது உதவுகிறது. எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் இதனை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

சரும பராமரிப்பில் சன்ஸ்கிரீன் ஏன் அவசியம்? | Why is sunscreen important in skincare?

சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்வீச்சுகளால் நமது சருமம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, கட்டாயமாக சூரிய ஒளியில் வெளிப்படுவதற்கு முன்பு சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும். சரும பராமரிப்பு முறைகளில் இதனை கடைசியாக பயன்படுத்த வேண்டும்.

இது சூரிய ஒளியினால் நமது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தாத போது நமது சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு,

எந்த ஒரு சரும பராமரிப்பும் பொருட்களையும் முதல் முறையாக பயன்படுத்தும் போது சோதனை செய்து பின்னர் பயன்படுத்தவும். ஒரு பொருளை பயன்படுத்திய பிறகு ஒவ்வாமைகள் இருப்பதை கண்டறிந்தால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சருமத்தில் புண்கள் அல்லது பாதிப்புகள் இருக்கும் போது கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

சரும பராமரிப்பில் மாய்சுரைசர் ஏன் அவசியம்? | Why is moisturizer important in skincare?

நமது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம். சருமத்தில் வறட்சி ஏற்படும் போது பாதிப்புகளும் ஏற்படுகிறது. சரும வறட்சியை தடுப்பதற்கு திரவ உணவுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதே நேரத்தில் வெளிப்புறத்தில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பதற்கு மாய்ஸ்ரைசர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இது நமது சருமத்தில் வெளிப்புறமாக ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

நமது சருமத்தில் முகப்பரு பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு அதிக ரசாயனம் கலக்காத மற்றும் தரமான மாய்ஸ்ரைசரை பயன்படுத்தலாம். நம்ம சருமத்திலுள்ள அழுக்கு மற்றும் தூசி போன்றவற்றை சரி செய்யவும், முகப்பருக்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் இது உதவுகிறது. இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப இதனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News