பட்டுனு தொண்டை கரகரப்பு போகணுமா....? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தா...!
சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட, உப்பு தண்ணீரால் வாய் கொப்பளித்து துப்பினால் தொற்று சரியாகும் தொண்டை கரகரப்பை சரி செய்யும் என அறியலாம்.
தொண்டை கரகரப்பு:
தொண்டை கரகரப்பு என்பது சளி ,இரும்பல் போன்ற காரணங்களால் தொண்டையில் சளி கட்டும்.சில சமயம் குரல் மாற்றம் ஏற்படும்.தொண்டையில் வலி ஏற்படும்.இதை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கரகரப்புக்கான காரணங்கள் :
1. வயிற்று அமில ரிஃப்ளக்ஸ்
2.புகைபிடிக்கும் புகையிலை
3.மது மற்றும் காஃபின் கொண்ட பானங்களை குடிப்பது
4.கத்துதல், நீண்ட நேரம் பாடுதல் அல்லது குரல் நாண்களை அதிகமாகப் பயன்படுத்துதல்
5.ஒவ்வாமைகள்
6.நச்சுப் பொருட்களை உள்ளிழுக்கவும்
7.அதிகமாக இருமல்
தொண்டை கரகரப்பு நீங்க சில வழிகள் :
பொதுவாக ஒருவருக்கு சளி பிடித்திருக்கும்போது தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். அதனை போக்க பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப்பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால் தொண்டைக்கட்டுக்கு இதமாக இருக்கும். குரல் வளம் பெருகும்.
1.மா இலையைச் சுட்டு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
2.நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் தொண்டை கரகரப்பு சரியாகும். அதனுடன் விக்கலையும் விரட்டிவிடலாம்.
3.இஞ்சிச்சாறு, துளசிச்சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருவது இருக்காது.
4.சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
5.ஒரு நாளைக்கு 4 வேளை உப்பு தண்ணீரால் வாய் கொப்பளித்து துப்பினால் தொற்று சரியாகும். வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்ப வேண்டும்.
6. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி, மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வர தொண்டைப் புண்கள் குறையும்.
7.மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும்.
8.இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
9.தண்ணீரில் நான்கு துளசி இலையை தினமும் போட்டுக் குடிக்கத் தொடர் இருமல் நீங்கும்.
10.சுடுதண்ணீரில் துளசி, கற்பூரவல்லி இலை, நொச்சி இலை என ஏதாவது ஒன்றைப் போட்டு ஆவி பிடிக்க சளி, தலைபாரம், தலைவலி குணமாகும்.
11.விளாம் மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இறைப்பு, வாய் கசப்பு நீங்கும்.
12.புதினாவில் மெந்தோல் சத்து அதிகமாக இருப்பதால் கட்டியிருக்கும் சளியை கரைத்து வெளியே தள்ளும் தன்மை இதற்கு உண்டு. இதனால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
13.வெந்தயம் தொண்டை தொற்றுக்கு சிறந்த நிவாரணியாகும். வெந்தயத்தை ஊறவைத்து மென்று சாப்பிடலாம். உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் அருந்த தொண்டைக்கு இதமாக இருக்கும்.
14.மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி. மாத்திரைகள் இல்லாமலே உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பொருள் மஞ்சள். தொண்டை கரகரப்பு இருக்கும் போது காபி ,டீ தவிர்த்து பாலை சூடாக்கி அதில் சிட்டிகை மஞ்சளையும், சிட்டிகை மிளகுத்தூளையும் சேர்த்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.
15.இஞ்சி கோழையை வெளியேற்ற உதவுகிறது. சளி, காய்ச்சலை விரட்டி அடிக்கும் கை மருந்தாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக தொண்டைப்புண் குணப்படுத்தவும் இஞ்சி சாறு பயன்படுகிறது. ஆனால் உரிய முறையில் எடுத்துகொண்டால் தொண்டை கரகரப்பு காணாமல் போக கூடும்.
16.தொண்டை கரகரப்புக்கு எலுமிச்சை சேர்த்தால் உபாதை அதிகமாகும் என்று நினைக்க வேண்டாம். ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சையை பிழிந்து இனிப்புக்கு தேன் கலந்து இளஞ்சூடாக இருக்கும் போதே தொண்டையில் படும்படி நிதானமாக விழுங்க வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை இதை எடுத்துகொள்ளலாம். இனிப்புக்கு மாற்றாக உப்பும் சேர்க்கலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தாலே பலன் கிடைக்கும்.