வெயிட் லாஸ் பண்ணி ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க ...!
புட்டில் அதிக நார்ச்சத்து,ஆற்றல் அதிகரிப்பு போன்ற சத்துக்கள் இருப்பதால் செரிமானத்தை நன்றாக செய்ய எப்படி உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.;
புட்டு:
புட்டு என்பது தமிழரின் பாரம்பரிய உணவாகும்.இது பார்ப்பதற்கு சாதம்போல் இருக்கும் ஆனால் உடலுக்கு மிகவும் சத்தானது. இதை சாப்பிட்டால் சுவையாகவும் இனிப்பாகவும் இருக்கும். சாப்பிட்டால் மீண்டும் சாப்பிட தூண்டும் ஆனால் எதுவும் " அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பது போல இதுவும் அளவாக தான் சாப்பிட்டால் சத்தும் கிடைக்கும் உடலும் ஆரோக்கியமாகும். இதை முதலில் சமைத்து சாப்பிட்டது நம் தமிழர்கள் தான். ஆனால் இன்று பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவது கேரளா மக்கள் தான் தினமும் உணவில் எடுத்துக் கொள்கின்றனர்.
புட்டு அரிசியில் மட்டும் செய்வதல்ல ராகி,கம்பு போன்ற தானியங்களிலும் செய்கின்றனர்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.இது உடலுக்கு வலுவூட்டும். இந்த பயிரை ஒரு சில மாநிலங்களில் விவசாயம் செய்கின்றனர்.ஆகையால் அதை சாப்பிட்டால் வரும் நன்மைகளை பார்ப்போம்.
புட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1 .புட்டு முழு கடலை மாவால் (ரவை அல்லது அரிசி மாவு) செய்யப்பட்டதால் நெகிழ்ந்த உணவாகும். இது நீண்ட நேரம் பசிக்காத உணர்வை அளிக்கிறது.
2.புட்டு நீர் வைத்து ஆவியில் வேகவாக்கப்படுவதால் இதில் நீர்ச்சத்து நன்றாக இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
3. புட்டில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை நன்றாக செய்ய உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கிறது.
4. ஆவியில் வேகும் உணவு என்பதால் புட்டில் அதிக எண்ணெய், கொழுப்பு இருக்காது. இதனால் இதயம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
5. எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது.
6. இதில் உள்ள ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும். அதனால், குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு ஏற்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகப் பொருத்தமான உணவு.
7. அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்துகொண்டது. அதாவது, இதை உண்ட பின்னர் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்காது.
8. உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் , மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.
9. தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு. குறிப்பாக, ஹைப்பர்தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவு ஆகும்.