பொரி சாப்புட்றது நல்லதுதான் .. ஆனா! சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
அளவுக்கு அதிகமா எந்த ஒரு உணவை சாப்ட்டாலும் உடம்புக்கு கேடுதான். அது போல தான் பொரியும், உடம்புக்கு நல்லதானு தெரிஞ்சுக்கோங்க.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்களில் ஒன்று பொரி. இது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு என்பதால், சிறிய குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பொரியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அரிசியை விட பொரியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் கொஞ்சம் அதிகம் என்பதால், பொரியை தவிர்ப்பது நல்லது.
பஃப்டு ரைஸ் என்று அழைக்கப்படும் பொரியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக உள்ளதால், அவற்றை சர்க்கரை நோயாளிகள்(puffed rice can be eaten in blood sugar in moderation in tamil) சாப்பிடக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர் மன்பிரீத் கல்ரா கூறியுள்ளார். உணவில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடக்கூடாத உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு கூட சில நேரங்களில் ஆபத்தாக முடியும்.
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அரிசியில் மாவுச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட் இருப்பதால் இது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். ஆனால் பொரி ஆனது அரிசியை காட்டிலும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.
பொரி சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் | benefits of eating puffed rice in tamil
செரிமானத்தை மேம்படுத்துகிறது: பொரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் வாயுவை வெளியேற்றவும் உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது: பொரி குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால், எடை இழக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது நீண்ட நேரம் பசியைத் தணிக்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது: பொரியில் உள்ள சில சத்துக்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பொரியில் கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: பொரியில் உள்ள சில சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களைத் தடுக்கின்றன.
நீரிழிவு நோயாளிகள் பொரி சாப்பிடலாமா?
- பொரி உட்கொள்ளும் போது மசாலா மற்றும் பிற பொருள்களை மிதமாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதிகளவிலான சோடியம் அளவை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானதாகும்.
- பொரியில் அதிகளவு மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொரி பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் இவை இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கலாம்.
- நீரிழிவு நோயாளிகள் பொரி சாப்பிடவேக் கூடாது என்பதல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு பொரி சாப்பிடும் அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்மறையாக பாதிப்பதைத் தவிர்க்கலாம்.
- அதாவது 100 கிராம் பொரியில் சுமார் 90 கிராம் மாவுச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் உள்ளது. பொரியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகம் என்பதால், சர்க்கரை நோயாளிகள் பொரி சாப்பிடுவது சரியல்ல என்று நிபுணர் கூறியுள்ளார்.
- பொரியை ஒருவேளை சாப்பிடுவதாக இருந்தால் அளவோடு மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதாவது பொரியை 1 முதல் 2 சிறிய கப் அளவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவற்றை காய்கறிகள் மற்றும் பழங்களோடு சேர்த்து பொரியை எடுத்துக் கொள்வது சிறந்தது.
எச்சரிக்கை:
பொரியில் சேர்க்கப்படும் உப்பு, எண்ணெய் போன்றவை அதிக அளவில் இருந்தால், உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, குறைந்த அளவில் உப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த பொரியை சாப்பிடுவது நல்லது.
பொரி ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி. ஆனால், எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. மிதமான அளவில் பொரி சாப்பிட்டு உங்கள் உடல்நலனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.