பிஸ்தா.... ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க இத டெய்லி சாப்பிடுங்க ..! அதுக்கு முன்னாடி எவ்வளவு சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கோங்க !

pista benefits in tamil | பிஸ்தா, உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதன் நன்மைகள் என்ன, உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்கும் மருந்தாக உள்ளது, இதை எப்படி சேர்ப்பது, பக்கவிளைவுகள் உண்டா என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

Update: 2024-11-19 06:22 GMT

பிஸ்தா( Pistachio ) ஒரு ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த கொட்டைகளில் ஒன்று . உடல் செயல்பாடுகளுக்கு தேவையான முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து , நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களை கொண்ட ஆரோக்கியமான கொட்டையாக உள்ளது. உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்கும் மருந்தாக உள்ளது.இதன் நன்மைகள் என்ன,இதை எப்படி சேர்ப்பது, பக்கவிளைவுகள் உண்டா என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். | pista benefits in tamil

உணவில் கூடுதலான ஒரு சத்து உண்டு என்றால் பிஸ்தாவை ( Pistachio )சொல்லலாம். இது 20 % புரதத்தினால் ஆனது. பெரும்பாலான கொட்டைகளை விட அதிக கலோரிக்கு புரத விகிதம் கொண்டுள்ளன. இந்த புரதம் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும் என்பதால் எடையை நிர்வகிக்க உதவும், பெக்கன்களுக்கு அடுத்தபடியாக பிஸ்தா அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத்தை கொண்டுள்ளன. ஒட்டுமொத்த நீண்ட ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிஸ்தாவின் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஸ்தாவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் | Nutrients in pistachios

1.ஆற்றல்

2.புரதம்

3.கார்போஹைட்ரேட்

4.நார்ச்சத்து

5.வைட்டமின் ஏ

6.வைட்டமின் பி6

7.வைட்டமின் சி

8.வைட்டமின் கே

9.ஃபோலேட்

10.தயமின்

11.காப்பர்

12.ரைபோஃப்ளேவின்

13.நியாசின்

ஊட்டச்சத்து குறைபாடுகள் என்றால் என்ன? | What are nutritional deficiencies?

சீரான உணவை பராமரிக்கும் முறையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துகொண்டாலும் சில உணவுகளில் தாதுக்கள் இல்லை என்றால் அது உடலில் வைட்டமின் பி12, இரும்புச்சத்து, அயோடின் போன்ற குறைபாடுகளை உண்டு செய்யும். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவும் உணவுகளில் பிஸ்தாவும் ஒன்று. இதன் அடர்த்தியான ஊட்டச்சத்து பண்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு வேண்டிய தாவர புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை கொண்டுள்ளன. இதய ஆரோக்கியத்துக்கு கொழுப்புகளை அளிக்கின்றன. தினசரி உணவு முறையில் பிஸ்தாவை ( Pistachio ) சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து உடலில் பல சத்து குறைபாடுகளை சமாளிக்க உதவும்.

பிஸ்தாவில்( Pistachio )  மோனோஅன்சாக்யுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இது சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, கொழுப்பு சுரப்பை குறைத்து, இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது.

வைட்டமின் பி6 குறைபாட்டை தடுக்க உதவும் பிஸ்தா

பிஸ்தா ( Pistachio ) என்பது உடலுக்கு பல்வேறு சத்துக்களை வழங்கும் உணவுப் பொருள், குறிப்பாக வைட்டமின் பி6 (Vitamin B6) உள்ளடக்கத்தில் மிகச் சிறந்தது. வைட்டமின் பி6 என்பது உடலில் பல்வேறு செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் முக்கியமான வைட்டமின். வைட்டமின் பி6 குறைபாடு உள்ளவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும், எனவே பிஸ்தாவைச்( Pistachio )  சாப்பிடுவதன் மூலம் இதனை தடுக்க முடியும்.


பி6 ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவதால், பிஸ்தா( Pistachio ) சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை ஏற்பட்டதைத் தடுக்கலாம். இது, இரத்தத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பதை உறுதிபடுத்துகிறது.பிஸ்தாவில் உள்ள பி6, நரம்பு மற்றும் மூளை செயல்பாடுகளை சீராக வைத்திருப்பதற்கு உதவுகிறது. குறிப்பாக நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை மேம்படுத்துவதில் பங்காற்றுகிறது.

மெக்னீசியம் குறைபாட்டை தடுக்க உதவும் பிஸ்தா | pista benefits in tamil

மெக்னீசியம் குறைபாடு ஹைப்போமக்னீமியா என்று அழைக்கப்படுகிறது. இது உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அறிகுறிகள் சில நேரங்களில் தீவிரமாகும் வரை வெளிப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெக்னீசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, ஆஸ்துமா,உயர் இரத்த அழுத்தம், சோர்வு, தசைப்பிடிப்பு, ஆஸ்டியோபொராசிஸ் போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யலாம்.

பிஸ்தாவில்( Pistachio ) அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. தினசரி மெக்னீசீயம் சேர்ப்பது உடலில் மெக்னீசியம் அளவை தக்கவைத்து அதன் குறைபாட்டை இல்லாமல் செய்யும்.

வைட்டமின் ஈ குறைபாட்டை தடுக்க உதவும் பிஸ்தா

பிஸ்தா( Pistachio ) என்பது நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளை மட்டுமின்றி வைட்டமின் ஈ (Vitamin E) சத்தையும் வழங்கக்கூடிய ஒரு பயனுள்ள தானியம் ஆகும். வைட்டமின் ஈ குறைபாடு உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும், எனவே பிஸ்தா( Pistachio ) போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதைத் தடுக்கலாம்.

வைட்டமின் ஈ குறைபாடு அசாதாரணமானது. இது உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின். இது கொழுப்பில் கரையக்கூடியது. உணவில் இருந்து கொழுப்பு உறிஞ்சப்பட வேண்டும். இது கல்லீரலில் சேமிக்கப்பட்டு இரத்த ஓட்டத்தில் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது. இதன் குறைபாடு தசை பலவீனம், நடப்பதில் சிரமம்,உணர்வின்மை, பார்வையில் பிரச்சனைகள், நோயெதிர்ப்பு மண்டல பிரச்சனை போன்றவற்றை உண்டு செய்யலாம்.

தினமும் பிஸ்தா( Pistachio ) சாப்பிடுவது வைட்டமின் ஈ அளவை மேம்படுத்தும் இது ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இது உடல் செல்களை சேதமாகாமல் பார்த்துகொள்ளும்.

துத்தநாக குறைபாட்டை தடுக்க உதவும் பிஸ்தா | pista benefits in tamil

துத்தநாகம் அத்தியாவசிய கனிமமாகும். இது உடலில் பல வேலைகளை செய்கிறது. வளர்சிதை மாற்றம், ஆரோக்கியமான எலும்புகளை ஊக்குவிக்கிறது. நரம்பு மண்டலம் செயல்படுவதை உறுதி செய்கிறது. தாமிர குறைபாடு அரிதானது என்றாலும் இது ஆபத்தானது.


சோர்வு, பலவீனம், காய்ச்சல், எலும்பு பலவீனம், நடப்பதில் சிரமம், ஃப்ளூ, சரும பாதிப்பு, இளநரை போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யலாம். தினமும் பிஸ்தா( Pistachio ) சாப்பிடுவதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

பிஸ்தாக்கள் உடலுக்கு செய்யும் ஆரோக்கிய நன்மைகள் | Health benefits of pistachios

1.தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

2.ஆன்டிஆக்சிடன்ட் பாதுகாப்பு

3.வயதான அடையாளங்களை குறைத்தல்

4.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல்

5.சிறந்த கண் ஆரோக்கியம்

6.இரத்த சோகை தடுப்பு

7.நரம்பு மற்றும் மூளை ஆரோக்கியம்

8.கொழுப்பை குறைக்கிறது

9.எடை இழப்புக்கு உதவும்

10.புரதம் அதிகம்

பிஸ்தா பக்கவிளைவுகள் உண்டு செய்யுமா? | Do pistachios have any side effects?

சிலருக்கு எதிர்மறையான பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம்.பச்சை பிஸ்தாக்களில் சோடியம் இல்லை என்றாலும் வறுத்த பிஸ்தாக்களில்( Pistachio ) சோடியம் உள்ளது. ஒரு கப் உலர்ந்த பிஸ்தாவில் உப்பு சேர்த்து 526கிகி சோடியம் உள்ளது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றுக்கு அதிக ஆபத்து வைக்கலாம்.

FODMAP அபாயங்கள்

நொதிக்ககூடிய ஒலிகோசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோல்களை குறிக்கிறது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி அல்லது இரைப்பை குடல் நோய் உள்ளவர்கள் அறிகுறிகளை கட்டுப்படுத்த FODMAP கட்டுப்படுத்த வேண்டும். பிஸ்தாக்களில்( Pistachio ) இவை அதிகம் உண்டு. இது வயிற்றை தொல்லை செய்வதற்கு வாய்ப்பு உண்டு. வீக்கம், குமட்டல், வயிறு வலி வரலாம். இது மரக்கொட்டை என்பதால் ஒவ்வாமை கொண்டவர்களுக்கு இது கடுமையான விளைவுகளை உண்டு செய்யலாம்.

பிஸ்தாவை தினமும் எவ்வளவு வரை சேர்க்கலாம்? எப்படி சாப்பிடலாம்?

1.நாள் ஒன்றுக்கு கால் கப்- அரை கப் வரை பிஸ்தா சாப்பிடலாம்.

2.பிஸ்தாவை ( Pistachio )சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கலாம். இதனால் மென்மையாகவும் ஊட்டச்சத்தும் அதிகரிக்க செய்கிறது. பிஸ்தாவை 5- 6 மணி நேரம் ஊறவைக்கலாம். ஆயுர்வேதம் பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது ஜீரணத்தை மேம்படுத்தும்.

3.பிஸ்தாக்கள்( Pistachio ) கடினமான ஓடுடன் இருக்க கூடும். இதை ஒரு வருடம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

4. சாலட்கள், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்பு வகைகள் போன்றவற்றில் சேர்க்கலாம்.

குறிப்பு

பிஸ்தா ( Pistachio ) நன்மையே என்றாலும் அளவு குறைத்து சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடல் பருமனை ஏற்படுத்தும்.

Tags:    

Similar News