சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஓட ஓட விரட்டும் குப்பைமேனி இலை..! வாங்க இன்னும் தெரிஞ்சிக்கலாம்..! | Kuppaimeni leaves benefits in tamil
குப்பைமேனி இலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், பயன்களை இத்தொகுப்பில் காண்போம்.| Kuppaimeni leaves benefits in tamil
குப்பைமேனி (Kuppaimeni leaves) பேர் கேட்டாலே குப்பையா தோணும் அப்புறம் எப்படி யூஸ் பண்ணுறது கேள்வி இருக்கும்.கடுகு சிறுசுனாலும் காரம் குறையாது சொல்லுவாங்க அதே மாறி தான் பேரு தான் குப்பைமேனி ஆனால் அது செய்ற வேலை அப்படி இருக்கும். பேருக்கு தகுந்த மாறி மேனியை பளபளன்னு வெக்கும்.அப்போ அதை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாம்.
குப்பைமேனி | Health benefits of Kuppaimeni leaves
குப்பைமேனியின்(Kuppaimeni leaves) தாவரவியல் பெயர் Acalypha indica. நமக்கெல்லாம் ஒரு குடும்பம் இருப்பதைப்போல, தாவரங்களுக்கும் அதன் வளரியல்பு, குணாதிசயங்களைப் பொறுத்து குடும்பங்கள் உண்டு. அதில் குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது.
மேனியில் உண்டாகும் நோய்களை விரட்டுவதாலே, மேனி என்ற வேறுபெயரும் உண்டு குப்பை மேனிக்கு(Kuppaimeni leaves). அதுமட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனை வணங்கி, குப்பி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான தென்கிழக்கு நாடுகளின் பாரம்பர்ய மருத்துவத்திலும் குப்பைமேனியை(Kuppaimeni leaves) மருந்தாகப்Health benefits of Kuppaimeni leaves பயன்படுத்துகின்றனர்.இது பாழான நிலங்கள், சாலை ஓரங்கள், சுவர்களில் உள்ள பிளவுகள் போன்ற குழப்பமான இடங்களில் வளரும். இது பாறை மலைகள், வன விளிம்புகள் மற்றும் ஆற்றங்கரைகளிலும் வளரும். இது ஈரமான மற்றும் நிழலான இடங்களில் வளரும்.
குப்பைமேனியின் பயன்கள் | Kuppaimeni leaves benefits in தமிழ்
1.சரும நோய்களை அழிக்கும் சக்தி | The Power to Cure Skin Diseases
விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு நீங்க, குப்பைமேனி இலையோடு கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்து சில நாள்கள் போட்டு வர அரிப்பு குறைந்து நோய் மறைவதைப் பார்க்கலாம். விளையாடும்போது உடலில் சிறு சிறு காயங்கள் ஏற்படும்போது குப்பைமேனியுடன் கிருமிநாசினி குணம் நிறைந்த மஞ்சளைக் கூட்டி அரைத்துப் பூச விளையாடும்போது ஏற்பட்ட வீரத் தழும்புகள் தோலோடு மறையும்.
கருஞ்சிவப்பு நிறத்துடன் தொடை இடுக்குகளில் அரிப்புடன் வரும் படர்தாமரை பிரச்னைக்கு குப்பைமேனி(Kuppaimeni leaves) இலையுடன் சிறிது உப்பு கூட்டி தடவி வர நோயின் தீவிரம் குறையும். மூலிகை மருத்துவத்துடன் நல்ல சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால் படர்தாமரைக்கு நிரந்தர முடிவு கட்டலாம்.
2.கப நோய்களுக்கு சிறந்தது | Best for Kapha-Related Diseases
கோழையை (சளி) இளக்கி வெளியேற்றும் செய்கை கொண்ட குப்பைமேனியின்(Kuppaimeni leaves) பொடியை 1 கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, பாடாய்ப்படுத்தும் இருமல் கட்டுப்படும். ஒரே தலைபாரமாக இருக்கிறதா? குப்பைமேனி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட, உடனடியாகத் தலைபாரம் குறையும். சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும், துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுத்தால் போதுமானது.
3.மூட்டு வலி, வீக்கங்களுக்கு சரி செய்ய உதவும் | Helps Relieve Joint Pain and Swelling
உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலையின் சாற்றை, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதான தாத்தா, பாட்டிகளுக்கு, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியுடன்கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி(Kuppaimeni leaves) இலையை சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.
4.மலச்சிக்கலுக்குத் தீர்வு | Remedy for Constipation
குப்பைபோல் (நோய்களால்) ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துறதால குப்பைமேனினு நாம சொல்றோம். பொதுவாக குப்பைமேனிச்(Kuppaimeni leaves) செடியில பலவித மருத்துவ குணங்கள் இருக்கு. அதில் குறிப்பாக சொல்லணும்னா அது ஒரு நல்ல மலம் இளக்கியா இருந்து, மலச்சிக்கலுக்குத் தீர்வா இருக்குது. குப்பைமேனி இலைச்சாறு பலவகை ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தா இருக்குது. இலையை சாறெடுத்து சிறிது உப்பு சேர்த்து குடித்தால் மலம் நன்கு கழியும்.
5.வலி குறைய | To Reduce Pain
இலைச்சாறை தலைவலிக்கு பூசினால் வலி குறையும். இலைச்சாறை நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவலாம்.
6.படுக்கைப் புண்கள் குணமாக | Healing Bedsores
இலைச்சாறை படுக்கை புண்களுக்கு பூசி வந்தால் அவை குணமாகும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டோட படுக்கை புண் மேல் வைத்து கட்டிவந்தால் புண் ஆறிடும்.
7.குடற்பூச்சிகள் | Intestinal Worms
குப்பைமேனி(Kuppaimeni leaves) வேர்ல கஷாயம் செஞ்சு (30 - 100 மிலி) குடிச்சா குடற்பூச்சிகள் சாகும்.இதனால் உடல் நலமாக இருக்கும்.