கரிசலாங்கண்ணி.... முடி கருக்க , காயம் ஆற! ஒரே தீர்வு ..! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா !.....

karisalankanni benefits in tamil | கரிசலாங்கண்ணி முடிக்கு செய்யும் நன்மைகள் பற்றி சிலவற்றை இதில் பார்ப்போம்.

Update: 2024-11-20 06:00 GMT

 கரிசலாங்கண்ணி( Karisalangkanni )  என்பது இந்தியாவில் இயற்கையாக வளரும் ஒரு முக்கிய மூலிகைச் செடி ஆகும்.கீரைகளின் ராணி என்றழைக்கப்படுவது "கரிசலாங்கண்ணி கீரை". இது இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் குறிப்பாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. கரிசலாங்கண்ணி ( karisalankanni benefits in tamil ) வயல்வரப்புகளிலும், நீர்பாங்கான இடங்களிலும் வளரக்கூடிய ஒரு சிறுசெடியாகும். முடி கருமையாக, நன்கு அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணியை அனைவரும் பயன்படுத்துவது இயல்பு. ஆனாலும், இதனை உணவில் சேர்க்கலாம் என்பது நம் அனைவருக்கும் தெரியுமா என்பது கொஞ்சம் சந்தேகமே.

நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கரிசலாங்கண்ணியை ( Karisalangkanni ) அன்றாட உணவில் துவையலாகவும், கடைசலாகவும் அல்லது பொரியலாகவும் பயன்படுத்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கீரை கசப்பாக இருக்கும். இந்த கரிசலாங்கண்ணியில் டீ போட்டு குடிக்கலாம். சூப் போல செய்து சாப்பிடலாம்.ரத்த அழுத்தம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், போன்றவைகளை இந்த கரிசலாங்கண்ணி குணப்படுத்தும்.இருப்பினும் இன்றைய நடைமுறையில் இதனை நாம் ஒருசில மருத்துவப் பண்புகளுக்காகவே பயன்படுத்துகிறோம். Karisalankanni Benefits in Tamil


கரிசலாங்கண்ணி( Karisalangkanni )  அஸ்டரேசியே எனும் தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் எக்லிப்டா புரோஸ்ட்ரேடா என்பதாகும்.இதில் வெள்ளை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிற கரிசலாங்கண்ணி வகைகள் உண்டு. குறிப்பாக நீலம் மற்றும் சிவப்பு கரிசலாங்கண்ணி அழிவுநிலைக்கு சென்றுவிட்ட தாவரமாக கூறப்படுகிறது. இன்று நமக்கு கிடைப்பது இரண்டு கரிசலாங்கண்ணி வகைகள் மட்டுமே . ஒன்று வெள்ளை கரிசலாங்கண்ணி. மற்றொன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி. இதன் வேறு பெயர்கள், வெண்கரிசாலை, கையந்தகரை, கைகேசி, கரிக்கை, கரியசாலை, பிருங்கராஜம், தேகராஜம் மற்றும் பொற்றலைக்கையான் ஆகியனவாகும்.

கரிசலாங்கண்ணியில் காணப்படும் சத்துக்கள்| karisalankanni benefits in tamil

புரதச்சத்து, கால்சியம், இரும்பு, தங்கச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளை உள்ளடக்கியது.இதுமட்டுமில்லாமல் இதன் மருத்துவப் பண்புகளுக்காக இதில் விடிலோலேக்டோன், லூடியோலின், பீட்டா அமைரின், பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது.


கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பண்புகள் | Medicinal Properties of Karisalankann

  • உடல் கசடை நீக்கி, தேக ஆரோக்கியத்தினை பெருக்குகிறது.
  • மூப்பைத் தடுத்து, தோல் பிணியைப் போக்குகிறது.
  •  புற்றுநோய் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கிறது.
  •  மஞ்சள் காமாலையை குணமாக்குகிறது.
  • சுவாசப்பிரச்சனையைப் போக்குகிறது.
  • பாஸ்பரஸ் சத்து கரிசலாங்கண்ணியில் உள்ளதால் உடலில் உள்ள அனைத்து திசுக்களும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. இதனால் நரம்பு மண்டல செயல்பாட்டினை மேம்படுத்தமுடியும். உடல் சோர்வையும், மூளைச்சோர்வையும் தடுக்க முடியும்.
  • உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை முடுக்கிவிடுகிறது.
  • உடல்பருமன், மாரடைப்பு மற்றும் இதயநோய் போன்றவற்றை தடுக்க உதவுகின்றன.
  • கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ கரிசலாங்கண்ணியில் நன்கு காணப்படுவதினால் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த முடியும்.
  • இதன் இலையை வேகவைத்து ஆவிபிடித்தால் மூலநோய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.
  • கல்லீரல், மண்ணீரல் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
  • கரிசலாங்கண்ணி இலைகளை நன்கு மென்று பற்களில் தேய்த்தால் பற்கள் ‘‘பளிச்” என்று வெண்மையாக மாறும். வாய்ப்புண் குணமாகும்.
  • அஜீரணம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை களைகிறது.



  • தலைமுடி உதிருதல், இளநரை மற்றும் பொடுகு போன்றவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது.
  • அழகுசார்ந்த வகையிலும் கரிசலாங்கண்ணிகீரை பயன்படுகிறது. கண் மை மற்றும் கூந்தல் தைலம், தயாரிக்கலாம்.
  • குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கினை குறைக்க பயன்படுகிறது.
  • மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்லீரல் பிரச்சனைக்கு உள்ளானோர் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி கல்லீரலை பாதுகாக்கலாம்.
  • கண் நோய் வராமல் பாதுகாக்க கரிசலாங்கண்ணி உதவுகிறது.
  • காதுவலி உள்ளவர்களுக்கு இந்த இலையின் சாற்றை காதில் விட்டால் வலி தீரும்.
  • இலைய அரைத்து தேள் கடித்த இடத்தில தேய்த்து, அதை அப்படியே கட்டி வைத்தால் நஞ்சு நீங்கும். இலையை வேக வைத்து ஆவி பிடித்தால் மூல நோய் குணமாகும்.

இதன் இலைகளை மோருடன் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு பயன்பெறலாம். karisalankanni benefits in tamil மேலும் துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுதல் பிரச்சனை மற்றும் இளநரை பிரச்சனை உள்ளிட்டவை கட்டுப்படும். இதன் இலை, பூ மற்றும் வேர் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பண்பு கொண்டது. இத்தகைய கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதியை மேம்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Tags:    

Similar News