உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டுமா ? அப்போ நாங்க சொல்ற இந்த சில உணவுகளை மட்டும் ட்ரை பண்ணுங்க....
நமது உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் அளவு குறையும் ஆபத்து உள்ளது. மேலும், ரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜன் குறையும் போது, செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. எனவே, உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவது இப்போதைய சூழலில் அவசியம் ஆகும். ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். | Increase oxygen in the body in tamil;
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புகள் சிறப்பாக இயங்க முடியும் . ஆனால் நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து குறைபாடான இரத்தசோகை போன்றவற்றால், உடலில் ஆக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும்.
நமது உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் அளவு குறையும் ஆபத்து உள்ளது. மேலும், ரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜன் குறையும் போது, செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவது இப்போதைய சூழலில் அவசியம் ஆகும். ஒருவரது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க ஆக்சிஜன் தெரபி, உடற்பயிற்சி மற்றும் குறிப்பிட்ட சில உணவுகளும் உதவும்.
ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் | Foods that help increase oxygen levels
பழங்கள்
பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பூண்டு, பேரீச்சம்பழம் போன்றவற்றில் ஆக்சிஜன் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் உள்ள pH அளவு 8 ஆகும். பெர்ரிப் பழங்கள், பூண்டு மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் உள்ள பண்புகள், இரத்த அழுத்தத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த பழங்களில் உள்ள pH அளவு 8 ஆகும். மேலும் இவை எளிதில் செரிமானமாகும். மேலும் இவற்றில் உள்ள நொதிப்பொருள், உடலில் ஹார்மோன்களை சமநிலையில் பராமரிக்க உதவும். உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டியது அவசியம்.
பேரிக்காய், உலர் திராட்சை, கிவி
இந்த பழங்களிலும் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்கும் தன்மை மிக அதிகம். இந்த உணவுகளில் உள்ள pH அளவு 8.5. அதோடு இவற்றில் ஃப்ளேவோனாய்டுகள் மிக அதிகமாக உள்ளது. இந்த பழங்களில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த உணவுகள் இரத்தத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.குறிப்பாக, உடலில் காரத்தன்மையை அதிகரித்து, உடலுக்கு அதிகளவு ஆற்றலை வழங்கும். உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
எலுமிச்சை
எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கலாம். ஆனால் அது உடலினுள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும். மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகள் தான், இதை காரத்தன்மை நிறைந்த உணவாக மாற்றுகிறது. இந்த எலுமிச்சையை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.
பப்பாளி, தர்பூசணி
இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த இரண்டு பழங்களிலும் pH அளவானது 8.5 ஆக இருக்கிறது. இது சிறுநீரகங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த பழங்களில் வைட்டமின்களும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளது. செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். குடலை சுத்தம் செய்யும்.
அஸ்பாரகஸ் மற்றும் கடல்பாசி
இந்த உணவுகளில் pH அளவானது 8.5 உள்ளது. இந்த வகை உணவுகள், உடலில் அமிலஅளவைக் குறைக்கும். இந்த உணவுகளை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ஆக்சிஜன் அளவு சிறப்பான அளவில் இருக்கும். மேலும் உடலும் ஆற்றலுடன் இருக்கும்.
குடைமிளகாய்
குடைமிளகாயின் pH அளவும் 8.5 ஆக உள்ளது. இவற்றில் எண்டோக்ரைன் மண்டலத்திற்கு தேவையான நொதிகள் ஏராளமான அளவில் உள்ளன. குடைமிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடத் தேவையானவை அதிகம் உள்ளது. அதோடு இவற்றில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் அதிகம் உள்ளது. இது நம்முடைய உடலில் ஆக்சிஜன் அளவை கடகடவென உயர்த்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
கடல் உணவுகள், இறைச்சி
அசைவ உணவுகளில் புரோட்டீன், பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றன. கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மீன்களில் சூரை, சால்மன் போன்றவற்றில் இரும்புச்சத்தை விட புரோட்டீன் அதிகம் உள்ளது. சிக்கன் முட்டையில் இந்த இரண்டு சத்துக்களும் மிதமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்வதில் கடல் உணவுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.
தானியங்கள்
தானியங்களில் புரோட்டீன், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன. அன்றாட உணவில் தானியங்களை ஒருவர் சேர்த்து வந்தால், நிச்சயம் அவர்களது உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும். எனவே உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பருப்பு வகைகள்
ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளுள் ஒன்று பருப்பு வகைகள். பருப்பு வகைகளான பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்ஸிஜன் செயல்பாட்டிற்கு உதவும். மேலும் பருப்பு வகைகளுள் அன்றாடம் தேவையான புரோட்டீன்கள், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. எனவே அன்றாட உணவில் சிறிது பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.