அடர்த்தியான, கருமையான கண் இமைகள் வேணுமா ..? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

அடர்த்தியான கண் இமைகள் , கண் புருவங்கள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அழகிய முக அமைப்பிற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.அதற்கு இயற்கையாகவே நமது வீட்டிலிருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம்.கண் இமைகளை அழகாக்க சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.;

Update: 2024-11-21 04:00 GMT

அடர்த்தியான கண் இமைகள்(Eyelid) , கண் புருவங்கள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அழகிய முக அமைப்பபை வழங்கக்கூடிய  முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புவார்கள். how to grow eyelashes naturally at home in Tamil

நீண்ட அடர்த்தியான புருவங்களும், கண் இமைகளும்(Eyelid)  நமது முகத்தை அழகாக காட்டுகிறது. இயற்கையாகவே நமது கண் இமைகள்(Eyelid)  அடர்த்தியாக இல்லாவிட்டால், அதை அடைய சில எளிய டிப்ஸ்கள் பயன்படுத்தலாம். அதற்கு இயற்கையாகவே நமது வீட்டிலிருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. கண் இமைகளை(Eyelid)  அழகாக்க சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

ஆமணக்கு எண்ணெய் (castor oil) :

ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின்(Eyelid)  வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய இயற்கை பங்கு கொண்டது. முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயம் .ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு(Eyelid) ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.இதை தினமும் இரவு நேரத்தில் சிறிதளவு கொண்டு கண் இமைகளில்(Eyelid)  தடவி உறங்கினால், சிறிது நாட்களில் கண் இமைகள்(Eyelid)  அடர்த்தியாக அதிகரிக்கத் தொடங்கும்.

கற்றாழை ஜெல் (Aloe Vera Gel) :

கண் இமைகள்(Eyelid)  வளர்ச்சிக்குத் துணையாகும் ஒரு இயற்கை பராமரிப்பு வழிமுறை ஆகும். கற்றாழையில் உள்ள விட்டமின்கள், மற்றும் ஆரோக்கியமான சத்துக்கள் கண் இமைகளின்(Eyelid)  வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இது ஆழமான தாதுக்களை பராமரிக்கவும், கண் இமைகளை நீண்ட நேரம் பசைபடவிடாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில்(Eyelid)  தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவும் போது இமைகளை நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது .

தேங்காய் எண்ணெய் (coconut oil) :

தேங்காய் எண்ணெய் கண் இமைகளின்(Eyelid)  வளர்ச்சிக்கான ஒரு அருமையான இயற்கை வழிமுறையாகும். தேங்காய் எண்ணெய் வெள்ளைப் புரதம், கொழுப்பு அமிலங்கள், மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொண்டது. இவை கண் இமைகளின்(Eyelid)  வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன மற்றும் அவற்றை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாக்கின்றன. கண் இமைக்கு(Eyelid)  தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக அமைகிறது. இதற்கு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை எடுத்து கண் இமைகளில்(Eyelid)  லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு ஆமணக்கு எண்ணெயை சேர்த்துத் பயன்படுத்தினால், இரண்டும் சேர்ந்து கண் இமைகளின்(Eyelid)  அடர்த்தியை அதிகரிக்க உதவும். கண்ணில் எண்ணெய் புகாதவாறு கவனமாக பயன்படுத்த வேண்டும்.

விட்டமின் E எண்ணெய் (Vitamin E capsule) :

விட்டமின் E எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது, இது கண் இமைகளின் (Eyelid) வேர்களை பாதுகாக்கும் மற்றும் வளர்ச்சிக்கு உதவும். மேலும், கண் இமைகள்(Eyelid)  உடைவதைத் தடுக்கிறது. இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் இமைகளை(Eyelid)  ஈரப்பதமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.

இது முடிக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் உதவுகிறது . விட்டமின் E எண்ணெய் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது, இதனால் உலர்ந்த மற்றும் சோர்வாகிய சருமத்திற்கு தீவிர ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாகவும், பசைபடாமல் பாதுகாக்கிறது.

Tags:    

Similar News