சுத்தமான தேன்... இது ஒன்னு போதும் !.... பத்தே நிமிஷத்துல எப்பேர்ப்பட்ட முகமா இருந்தாலும் பளிச்சுனு மாறிடும்!

சருமத்துக்கு தேன் செய்யும் அற்புத நன்மைகள் என்னென்ன, தேனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஃபேஸ் மாஸ்க் பற்றி தெரிந்து கொள்ளலாம்.;

Update: 2024-11-19 11:00 GMT

தேன் என்பது மிகவும் அரிய இயற்கை பரிசாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே இது ஒரு சுவையான உணவுப் பொருளாகவும், மருத்துவப் பண்புகளின் காரணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.இனிப்பு மிகுந்த தேன் சரும ஆரோக்கியத்திற்கும் அற்புத நன்மைகளை அளிக்கிறது. ஆய்வு ஒன்றில் சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தேன் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தேன் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், முகப்பருக்கள், சரும அழற்சி, எரிச்சல், வடுக்கள் போன்ற பாதிப்புகளை சரி செய்கிறது. சருமத்துக்கு தேன் செய்யும் அற்புத நன்மைகள் என்னென்ன, தேனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஃபேஸ் மாஸ்க் பற்றி தெரிந்து கொள்ளலாம்.| Honey face pack for glowing skin in tamil

தேன் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும்போது நமது சருமத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. சருமம் எப்போதும் மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவுகிறது. இயற்கையான ஒரு மருந்தாக தேன் இருப்பதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்து சருமத்திற்கு பொலிவினை தருகிறது. முகப்பரு போன்ற பொதுவான பிரச்சனைகள் அல்லாமல் தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்றவற்றையும் சரி செய்ய உதவுகிறது. சரும பராமரிப்பை மேம்படுத்த செய்யும் தேன் ஃபேஸ் மாஸ்க் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முகப்பருவை தடுக்க தேன் எப்படி உதவுகிறது? | how to use honey on pimples overnight


சருமத்தில் ஏற்படும் வெட்டு காயம் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தேனில் உள்ள பண்புகள் உதவுவதாக பழங்கால மருத்துவத்தில் நம்பப்பட்டு வந்திருக்கிறது. நியூசிலாந்து மக்கள் தீக்காயங்களுக்கு மனுகா என்ற தேனை பயன்படுத்துகிறார்கள். இதனால் காயங்களின் மீது தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது

ஆன்டிபாக்டீரியல் (Antibacterial) பண்பு :

தேனின் மிக முக்கியமான நன்மை இதன் ஆன்டிபாக்டீரியல் பண்பு. முகப்பரு ஏற்படுவது முகத்தின் தோல் இரட்டைகள் சுத்தமில்லாமல் சிக்கிய கிருமிகள் மற்றும் எண்ணெய் சுரப்பி காரணமாகும். தேன் இந்த கிருமிகளை அழித்துவிடும், அவற்றைத் தடுக்கவும் உதவும்.

ஆன்டிஇன்ஃபிளம்டரி (Anti-inflammatory) பண்பு:

தேனில் ஆன்டிஇன்ஃபிளம்டரி பண்புகளும் உள்ளன, இது முகப்பருவால் ஏற்படும் சிவத்தையும், வீக்கத்தையும் குறைக்கிறது. தேனை முகப்பரு இருக்கும் இடத்தில் பூசுவதால், அந்த பகுதி ஆறி, பரு குறையும்.

முகப்பரு தடுப்பு பேக்: | Honey face pack for glowing skin in tamil

தேனை பசும்பால் அல்லது லெமன் சாறுடன் சேர்த்து முகத்தில் பயன்படுத்தலாம். இதுவும் முகப்பருவை தடுக்க, நிறத்தை சீராக்க உதவும். வெந்நீரில் கலந்து தேன் பயன்படுத்துவதால், துரித சுத்தம் மற்றும் முகப்பருக்களை நீக்க முடியும்.

தோல் அழற்சி பாதிப்புகளை சரி செய்ய உதவும் தேன்!


சருமத்தில் அரிப்பு அல்லது அடோபிக் டெர்மடிடிஸ், சருமம் சிவந்து காணப்படுதல்,சொறி போன்றவற்றை நாம் தோல் அழற்சி என குறிப்பிடுகிறோம். குழந்தைகளை பெரும்பாலும் இது அதிகமாக பாதிக்கிறது. இருப்பினும் குறிப்பிடத்தக்க அளவில் பெரியவர்களையும் இந்நோய் தாக்குகிறது என கூறலாம். 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தோல் அழற்சி பாதிப்புகளை சரி செய்ய மனுகா தேன் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மிகக் குறைந்த நபர்களே பங்கேற்றார்கள் என்பதால் இது குறித்து மேலும் ஆய்வு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. | Honey face pack for glowing skin in tamil

தேன் தடிப்பு தோல் அழற்சி அல்லது சொரியாசிஸ் குணப்படுத்துமா?

சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான செல்களின் வளர்ச்சி தடிப்பு தோல் அழற்சி பிரச்சனையை உண்டு செய்கிறது. இதன் விளைவாக சருமத்தில் திட்டு திட்டுக்களாக செதில்கள் போன்று காணப்படலாம். இது தோற்றத்தை பாதிக்க செய்திடும்.


தேன் தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு ஒரு இயற்கையான தீர்வாகக் கருதப்படுகிறது. இது வறட்சி, வீக்கம், சிரம்புகள் போன்றவற்றை குணப்படுத்த உதவும். இருப்பினும், இதனை மருந்தாகவே முழுமையாக நம்பி கையாள வேண்டாமென்பது முக்கியம், தனிப்பட்ட பாதிப்புகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியமாகும்.

தேன் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் | Honey face pack for glowing skin in tamil

தேவையான பொருட்கள்:​

தேன் - 1 டீஸ்பூன்

மஞ்சள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு டீஸ்பூன் தேனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு உடனடி பொலிவை பெற உதவுகிறது.

தேன் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்

செய்முறை:

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் மென்மையை பெறுவதற்கும் கற்றாழை மற்றும் தேனில் உள்ள பண்புகள் உதவுகின்றன.இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளவும்.

தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் | Honey face pack for glowing skin in tamil


தேவையான பொருட்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

தயிர் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முகத்தில் உடனடி பொலிவை பெறுவதற்கு தேன் மற்றும் தயிர் கலந்த ஃபேஸ் மாஸ்கை நாம் பயன்படுத்தலாம்.வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த எளிமையான கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கழுவிக்கொள்ளலாம். இது உடனடி பொலிவையும், சருமத்திற்கு மென்மையையும் தருகிறது.

தேன் மற்றும் தக்காளி ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

தக்காளி சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

சருமத்தில் உள்ள கருமை நிறத்தை போக்குவதற்கு தக்காளி மற்றும் தேனில் உள்ள பண்புகள் உதவுகின்றன. சூரிய ஒளியினால் ஏற்படும் இந்த பாதிப்புகளை சரி செய்வதற்கு தேன் மற்றும் தக்காளியை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளலாம்.

தேன் மற்றும் சந்தன ஃபேஸ் பேக்

தேவையான பொருள்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

சந்தனம் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

உங்கள் சருமத்தில் பொலிவை மீட்டெடுக்க தேன் மற்றும் சந்தனத்தை ஒன்றாக கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வறட்சியான சருமத்தை உடையவர்களுக்கு இது ஒரு சிறந்த டிப்ஸ் ஆகும். ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சந்தனத்தை கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் கழுவலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக்

தேவையான பொருள்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

நீர்த்த எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு உதவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நீர்த்த எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து கலவை ஆக்கிக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் கழுவும். எலுமிச்சை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்கள் எலுமிச்சையை தவிர்ப்பதே நல்லது.

தேன் மற்றும் நாட்டு சர்க்கரை ஃபேஸ் பேக் | Honey face pack for glowing skin in tamil

தேவையான பொருள்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

நாட்டு சர்க்கரை - கால் அல்லது அரை டீஸ்பூன்

செய்முறை:

சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரை உதவுகிறது. தேனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளவும்.

எச்சரிக்கை :

தேனை சருமத்துக்கு பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்றாலும் அவை சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டு செய்யலாம். அதனால் முன்கூட்டியே பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்துவது ஆரோக்கியமானது.

தேன் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சருமத்துக்கு அற்புத நன்மைகளை அளிக்கிறது. சரியான முறையில் பயன்படுத்தி சரும ஜொலிப்பை பெறுங்கள்.

Tags:    

Similar News