தொண்டை வலிக்கு இத ட்ரை பண்ணுங்க ...! வேற லெவல் வீட்டு வைத்தியம் ....

தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு பரவலாகக் காணப்படும் ஒரு சுகாதார பிரச்சனை. தொண்டை வலியைக் குணமாக்க பல்வேறு பாரம்பரிய முறைகள் உள்ளன, அவற்றில் சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

Update: 2024-11-13 10:09 GMT

குளிர்காலங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களால் நமது உடலில் ஏற்படக்கூடிய உபாதைகள் ஆகும். தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு பரவலாகக் காணப்படும் ஒரு சுகாதார பிரச்சனை. இதற்கு வீட்டில் நம் கிடைக்கக்கூடிய சில இயற்கையான மற்றும் எளிய பொருட்களை வைத்து சரி செய்யலாம். தொண்டை வலியைக் குணமாக்க பல்வேறு பாரம்பரிய முறைகள் உள்ளன, அவற்றில் சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

1. அதிகப்படியான நீர் அருந்துதல்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். இது தொண்டைக்கு ஈரப்பதத்தை கொடுத்து , வலி மற்றும் கரகரப்பை குறைக்கிறது .

2. உப்பு நீரில் கொப்பளித்தல்

ஒரு கப் வெந்நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு கலந்து, அதை தினமும் 2 அல்லது 3 முறை கொப்பளிக்க வேண்டும். இது தொண்டையின் வீக்கத்தை குறைத்து, வலியைக் குணமாக்க உதவும்.

3. தேன் மற்றும் இஞ்சி

இஞ்சியைச் சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனைச் சேர்த்து நன்கு கலந்து குடிக்கலாம். இஞ்சி பாக்டீரியாவைத் தாக்கி தொண்டையை இளமையாக வைக்கும் , தேன் தொண்டையின் தன்மையை குறைத்து வலி மற்றும் கரகரப்பை குணமாக்கும். அதே போல் பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வலி குணமாகும் .

4. துளசி மற்றும் கொத்தமல்லி கஷாயம்

துளசி இலைகள் மற்றும் கொத்தமல்லி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, கஷாயம் செய்து குடித்து வருவதன் மூலம் தொண்டை கோளாறுகளை விரைவில் குணமாக்கலாம் . துளசியின் ஆரோக்கியமான குணங்கள் தொண்டையின் வீக்கத்தை குறைக்கும். மேலும் துளசி இலை சளிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

5. மஞ்சள் பால்

பாலுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, தொண்டை வலியைச் சரிசெய்யும். இது கிருமிகள் மற்றும் வைரஸ்கள் போன்றவற்றை எதிர்த்து, சளி, காய்ச்சல் போன்றவற்றைக் குணமாக்க உதவுகிறது. மஞ்சள் பால் உடலில் உள்ள அழற்சிகளை குறைத்து, விரைவில் குணமாக்க உதவுகிறது.

6. வேப்பம் பூ நீர்

ஆரோக்கியம் மற்றும் மருத்துவப் பயன்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை மருந்தாகும். வேப்பம் பூவை நீரில் கொதிக்க வைத்து அதை கொப்பளிக்கலாம். வேப்பம் பூவின் சுத்திகரிக்கும் தன்மை தொண்டையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

7. எலுமிச்சை மற்றும் தேன்

ஒரு கப்பில் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து, வெந்நீரில் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை சாறு வைட்டமின் C-ஐ தருவதால் தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

8. சுக்கு மற்றும் மிளகு

சுக்குப் பொடி, மிளகுப் பொடி மற்றும் தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீருடன் குடித்தால் தொண்டை கரகரப்பை விரைவில் குணமாக்கலாம் . இது தொண்டைச் சளியை அகற்றும். இதே போல் சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து போடி செய்து சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

9. வெந்தயம்

வெந்தயம் ஒரு சித்த மருத்துவ மூலிகையாகவும், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உணவுப் பொருளாகவும் பயன்படுகிறது. வெந்தய விதைகள் வயிற்றில் உண்டாகும் கோளாறுகளை குணமாக்க உதவுகின்றன . வெந்தயம் நீரில் ஊற வைத்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லது. அதே நீரை கொதிக்க வைத்துக் குடிப்பது தொண்டை வீக்கத்தைக் குணமாக்கும் .

10. முட்டை

முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். இது சளிக்கு ஒரு நல்ல மருந்தாக செயல்படும் .

Tags:    

Similar News