கவலையே படாதீங்க..! இந்த குளிர் காலத்துலயும் உங்க இதயத்தை பாதுகாக்க இத மட்டும் பாலோவ் பண்ணுங்க!
மிகவும் குளிராக இருக்கும்போது, உடலுக்குள் சாதாரண வெப்பநிலையை பராமரிக்க இதயம் கடினமாக உழைக்கிறது. இந்தப் பருவத்தில் இதய பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிர் காலத்தில் இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை!
மிகவும் குளிராக இருக்கும்போது, உடலுக்குள் சாதாரண வெப்பநிலையை பராமரிக்க இதயம் கடினமாக உழைக்கிறது. இந்தப் பருவத்தில் இதய பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிர் காலத்தில், உடலின் வெப்பத்தை தேவையான அளவு பராமரிக்க இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதன் காரணமாக, இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்த நிலையில், ஏற்கனவே ஆஞ்சினா மற்றும் மார்பு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் கரோனரி தமனியும் சுருங்கத் தொடங்குகிறது. எனவே, அத்தகையவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய நோய் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது.
குளிர்காலத்தில் நாம் செய்யும் இந்த தவறுகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்:
சூடாக இருங்கள்: குளிர்காலத்தில் சரியான உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தவிர்க்கவும், உடலை சூடாக வைத்திருப்பது முக்கியமாகும். எனவே குளிர்காலத்தில் வீட்டின் வெப்பநிலையை வசதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரவில் அதிக குளிராக உணர்ந்தால், வெதுவெதுப்பை உண்டாக்கும் போர்வையைப் பயன்படுத்துங்கள். இதனால் உடல் வெப்பநிலை பராமரிக்கப்படும். நீங்கள் இதய நோயாளியாக இருந்தால், கடும் குளிரில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். அவசியமானால், ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற சூடான ஆடைகளை அணியவும்.
உடற்பயிற்சி: குளிர்காலம் பெரும்பாலும் சோம்பலை ஏற்படுத்தும். எனவே பெரும்பாலானோர் குளிர்காலத்தில் ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. அனைத்து பருவங்களிலும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை பின்பற்றுவது முக்கியம். இல்லையெனில் அது இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே தினசரி வழக்கத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதைவிட, லேசான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
நீரேற்றம்: குளிர்காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காததால், தண்ணீர் குடிப்பது குறைகிறது. இதனால் நீரிழப்பு ஏற்பட்டு இதய செயல்பாட்டில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
சுகாதாரத்தைக் கடைபிடிக்கவும்: இன்றைய காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்: குளிரான வெப்பநிலை உடலில் அதிகமான மன அழுத்த ஹார்மோன் வெளியாவதற்கு தூண்டுதலாக இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரையும், இதய துடிப்பையும் அதிகரிக்கிறது.
மது பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்: அதிக அளவு மது அருந்துவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மது மட்டுமின்றி, புகையிலை மற்றும் சிகரெட் போன்ற போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில், இது இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.
காரணம் | தடுக்கும் முறை |
---|---|
அதிகக் குளிர் | சூடான ஆடைகள் அணியவும், உடலை சூடாக வைத்திருங்கள் |
கேள்விகள்:
- எப்படி குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது?
- இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன?
- இதய நோய் அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம்?
குளிர்காலத்தில் மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றி, இதய ஆரோக்கியத்தைப் பேணி காப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற மாற்றங்களால் ஏற்படும் உபாதைகளை உணர்ந்தவுடன் உங்கள் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுங்கள்.