பற்களின் ஆரோக்கியத்திற்கு ஆயில் புல்லிங் !... நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய சில சீக்ரெட்ஸ் ...!
ஆயில் புல்லிங் வழியாக நாள்பட்ட வாய்ப்புண், பல் ஈறு அழற்சி போன்ற பிரச்சனைகள் குணமாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம்.
ஆயில் புல்லிங் என்பது பல் சுகாதாரத்தை மேம்படுத்தும் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நாம் புல்லிங் செய்து உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. தினமும் காலையில் எழுந்த பிறகு வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை இரண்டு டம்ளர் குடிக்க வேண்டும் . மேலும், வெறும் வயிற்றில் நல்லெண்ணைய்யை ஒரு ஸ்பூன் குடித்தால் வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் . இந்த ஆயில் புல்லிங்கை எந்த வயதினரும் செய்யலாம் .
ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மூட்டு வலி, முழங்கால் வலி, மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் சரியாகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் சரியாகும்.ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம் .
தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.கறைகள் படிந்த பற்கள் உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்கள் வெண்மையாக மாறிவிடும். மேலும், ஈறுகளும் , பற்களும் ஆரோக்கியமாக இருக்கும் .
ஆயில் புல்லிங் பயன்கள்:
1. பல்லில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக வைக்க உதவுகிறது.
2. மூச்சுக் காற்றை துர்நாற்றமாக்குவதை தடுக்கிறது.
3. ஆயில் புல்லிங் வழியாக நாள்பட்ட வாய்ப்புண், பல் ஈறு அழற்சி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
4. பற்கள் மீது ஏற்படும் சிதைவு மற்றும் சிக்கல்களைத் தடுக்க ஆயில் புல்லிங் உதவக்கூடும்.
ஆயில் புல்லிங் செய்வது எப்படி?
- காலையில் எழுந்தவுடன், பல் தேய்த்த பிறகு , வெதுவெதுப்பான தண்ணீரை 1 அல்லது 2 டம்ளர் குடிக்க வேண்டும் . அதன் பிறகு சுத்தமான நல்லெண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் ஊற்றி 10 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளித்து பின்னர் உமிழ்ந்துவிட வேண்டும். இதுவே, ஆயில் புல்லிங் செய்யும்முறை.
- ஆயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டியதில்லை ஒன்றும் ஆகாது.
எச்சரிக்கைகள்:
- ஆயில் புல்லிங் செய்வதற்கு முன், பல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
- சிலருக்கு, குறிப்பிட்ட எண்ணெய்களில் அழற்சி இருக்கும் வாய்ப்பு உள்ளது, இதை கவனமாகப் பார்த்து பயன்படுத்த வேண்டும்.
- ஆயில் புல்லிங் வழக்கமான முறையாகப் பின்பற்றினால், பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை நன்றாக பாதுகாக்கலாம் .