தினம் ஒரு கொய்யா சாப்பிட்டா உங்க உடம்புல என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா....?

கொய்யா உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.குறிப்பாக இதன் இலையின் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது.இதுபோன்ற நன்மைகளை இதன்முலம் அறிந்துகொள்ளலாம்.

Update: 2024-11-13 10:26 GMT

கொய்யாப்பழம்:

கொய்யா என பொதுவாக அறியப்படும் மரம் என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட கொய்யா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் கொய்யா என்றே அழைக்கப்படுகின்றன. ஆனாலும் அவை மற்ற இனங்களைச் சேர்ந்தவையாகும்.

கொய்யாப்பழம் ஒருவித நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன. ஒரு வகைப் பழம் பம்பரம் போலிருக்கும் மற்றொரு வகை உருண்டை வடிவத்தில் இருக்கும். ஒரு வகை பழத்தின் உள் பகுதி வெண்மையாக இருக்கும். இன்னொரு வகைப் பழத்தின் உள்பகுதி ரோஜா பூ நிறத்தில் இருக்கும்.மக்களுக்கு எளிதில் & விலை குறைவில் கிடைக்கும் பழம் கொய்யாப்பழம்.

கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்:

கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு "வைட்டமின் சி,சுண்ணாம்புச்சத்து,மாவுச்சத்து, இரும்புச்சத்து,தாதுச்சத்து,எரியம்,புரதம்,கொழுப்பு'' போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன.குழந்தைகளுக்கு உடல்வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

கொய்யாப்பழம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் :

1.  இந்தியா

2.  சீனா

3.  கென்யா

4.  தாய்லாந்து

5 . பிரேசில்

கொய்யாப்பழத்தினால் கிடைக்கும் நன்மைகள் :

1.  கொய்யா உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக இதன் இலையின் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது, மேலும் இவை இன்சுலின் எதிர்ப்பு கொண்டுள்ளது.

2. கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம்.

3.  நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவும்.

4.  கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை நீங்கும்.

5.  கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது.

6.  நீரிழுவு பிரச்சனை உள்ள நபர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.

கொய்யாப்பழத்தை தவிர்க்க கூடிய நபர்கள் யார் ?

1. வயிறு உப்பசத்தால் அவதிப்படுபவர்கள்.

2. இதய நோய் உள்ள நபர்கள் தவிர்க்க வேண்டும்.

3. மாலை & இரவு நேரத்தில் அனைத்து நபர்களும் தவிர்க்க வேண்டும்.

எனவே தினமும் ஒரு கொய்யாப்பழத்தை உட்கொண்டால் உடலுக்கு நல்லது ''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு " என்பது போல தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம் மீறினால் வயிற்றுவலி ஏற்படும்.கொய்யாப்பழம் போல் அதன் இலைசாறும் உடலுக்கு நல்லது.இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதை தவிர்க்கும். எனவே கொய்யாப்பழம் உடலுக்கு நல்லது.

Tags:    

Similar News