ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செஞ்சா முடி கொட்டுமா ?... உங்க பயத்துக்கு இதோ பதில் ...!
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதால் முடியின் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது .மேலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது . எனவே, ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்வதினால் ஏற்படும் நன்மை தீமைகளைத் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலக்கட்டத்தில் இளம் பெண்கள் பலர் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்ளும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர் . அது தங்களுக்கு அழகான தோற்றத்தைத் தருவதாக நினைக்கிறார்கள். ஆனால், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதால் முடியின் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது .மேலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது . எனவே, ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்வதினால் ஏற்படும் நன்மை தீமைகளைத் தெரிந்து கொள்வோம்.
எந்த வகையான முடியாக இருந்தாலும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யும்போது, வளைவுகள் இல்லாமல் நேராக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் , ரசாயனமும், அதிக வெப்பமும் சேர்ந்து முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
இந்த வெப்பம் முடியில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து வறட்சியை ஏற்படுத்தும் .எனவே, அடிக்கடி ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்பவர்களுக்கு, நாளடைவில் சிலருக்கு முடி பொலிவிழந்து காணப்படும். பொதுவாக, முடி உறுதியாக இருக்க இயற்கையாகவே அதில் ஹைட்ரஜன் இணைப்பு இருக்கும். அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சிலருக்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே முடி உதிர்வு ஏற்படும் .
ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை
- ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு முன்பு முடியில் சீரம் தடவ வேண்டும். சீரம் முடிக்கு மிகவும் நன்மையைத் தரும் . அதனால் இதை முடி பராமரிப்பு வழக்கத்தில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் .
- முதலில் தலைமுடியை சீராக வாரிக் கொள்ள வேண்டும்.பிறகு கையில் சில துளி சீரம் சொட்டுகளை எடுத்து அதனை தலைமுடி முழுவதும் தடவ வேண்டும்.
- இதை செய்த பின்பு தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டனிங் மெஷின் மூலம் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி வெப்ப பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.
- இந்த சீரம் கூந்தலுக்கு பளபளப்பைத் தந்து பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது .
- தலை முடியின் உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது . முடியின் இயற்கை தோற்றத்தை மேம்படுத்தவும் , தலை முடியில் சிக்கு ஏற்படாமல் இருக்கவும் இந்த சீரும் பயன்படுகிகிறது .
கற்றாழை ஜெல்
கற்றாழையில் நிறைய நன்மைகள் உள்ளன . இது சருமம் மற்றும் முடி சம்மந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுகிறது . ஃப்ரஷான கற்றாழை ஜெல்லை சிறிதளவு எடுத்து தலைமுடியில் தடவிய பின்பு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யலாம். இதனால் வெப்பம் அதிகளவு முடியை தாக்காது.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் நன்மைகள் :
1. முடி சீராகவும் , நேரான தோற்றத்துடனும் இருக்கும் .
2. முடி ஸ்டைலிங் செய்ய நேரம் குறைவாக இருக்கும்.
3. முடியின் நேரான தோற்றம் சிலர் மத்தியில் ஒரு தனித்துவமான அழகை வழங்கும்.
விளைவுகள் :
1. அடிக்கடி ஹீட் அல்லது கெமிக்கல் பயன்படுத்துவது முடியை பாதிக்கும் மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
2. இதனை முறையாக பராமரிக்காவிட்டால் முடி முறிந்து விடும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஸ்ட்ரெய்ட்டனிங் மெஷின் மூலம் முடியை நேராக்குவதற்கு பதிலாக, இயற்கையான முறையில் முடியை நேராக்க முயற்சி செய்ய வேண்டும் . இதற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்களை பயன்படுத்தலாம். முடி சேதமடைவதை தடுக்க முடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். எண்ணெய், ஷாம்பு மற்றும் ஹேர் மாஸ்க் ஆகியவை இதில் அடங்கும்.