ஸ்வீட் சாப்டா முகப்பருக்கள் வருமா ? அச்சச்சோ ...! உடனே வேறு என்ன பிரச்சனைலா இருக்குனு தெரிஞ்சுக்கோங்க !
அதிக முகப்பருக்கள் ஏற்படுவதற்கு இனிப்புகள் சாப்பிடுவது காரணம் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கலாம்.அப்படி சர்க்கரை முகப்பருவை ஏற்படுத்த காரணமாகிறதா வேறு என்ன பாதிப்பு உண்டு செய்கிறது என்பதை பற்றி பார்க்கலாம் .
சர்க்கரையும் முகப்பருவும்: அறிவியல் பூர்வ விளக்கம்
அளவுக்கு அதிகமாக நாம சர்க்கரை உணவ சாப்பிடும்போது அது ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காம சரும ஆரோக்கியத்தையும் பாதிக்குது. இதனால முகத்தில முகப்பருக்கள் வருவதற்கும் வழிவகுக்குது.
சர்க்கரையின் வகைகள்
சர்க்கரையை நாம் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று இயற்கை சர்க்கரை மற்றொன்று சேர்க்கப்பட்ட சர்க்கரை. இயற்கை சர்க்கரை ஆனது நாம் உட்கொள்ள கூடிய காய்கறிகள், பழங்கள் என பல உணவுகளில் நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கும் இனிப்பு
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்வதால் நமது நோய் எதிர்ப்பாற்றல் சீராக நடைபெறாமல் இருக்க இது காரணமாகிறது.
அதிக சர்க்கரை அளவு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது
அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற சர்க்கரை நிறைந்த உணவுகளை கொள்வதன் மூலம் நமது மூளை செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
முகப்பருக்களைத் தடுக்க என்ன செய்யலாம்?
- சர்க்கரை அளவை குறைத்தல்: ஸ்வீட், பானங்கள், பேஸ்ட்ரி போன்றவற்றை குறைவாக சாப்பிடுங்கள்.
- ஆரோக்கியமான உணவு: பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
- தண்ணீர் அதிகம் குடிக்கவும்: தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
- முகத்தை சுத்தமாக வைத்திருங்கள்: நாள்பூட்டு இரண்டு முறை முகத்தை சுத்தமாக கழுவவும்.
- மருத்துவரை அணுகவும்: முகப்பரு தொடர்ந்து இருந்தால், தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
இறுதியாக
ஸ்வீட் சாப்பிடுவது முகப்பருக்களுக்கு மட்டுமல்லாமல், பல உடல்நல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, ஸ்வீட்டை மிதமாக சாப்பிடுவது நல்லது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் முகப்பரு மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.