எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..
சமீபத்தில் உகாண்டாவில் உருவாகி மிக மோசமான நிலையில் பாதித்து இருக்கும் ஒரு நோய்க்கு டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. அந்த நோய் எப்படி இருக்கும், அதன் அறிகுறிகள் என்ன, எப்படி தடுக்க முடியும், மற்ற நாடுகளுக்கு அது பரவுமா போன்றவை குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.;
புதிய வைரஸ் நோயால் பீதியடைந்த உகாண்டா!
உகாண்டாவில் உள்ள பூண்டிபுக்யோ மாவட்டத்தில் தொடங்கி நாடு முழுவதும் இந்த நோய் பரவி இருக்கிறது. எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையான இருக்கிறது. குறிப்பாக பூண்டிபுக்யோ மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதித்து இருக்கிறது. அதனால் அந்த நாட்டின் சுகாதார அமைப்பானது, சர்வதேச நாடுகளின் சுகாதார அமைப்புகளின் ஆதரவைப் பெற்று இந்த நோயின் மூலத்தை கணடறியும் ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள்.
டிங்கா டிங்கா என்றால் என்ன?
டிங்கா டிங்கா நோய் என்பது மற்ற வைரஸ் தொற்றுக்களைப் போன்ற நோயல்ல. இந்த பெயரே உங்களுக்கு விநோதமாகத் தோன்றலாம். ஆனால் அந்த பெயருக்கும் ஒரு காரணமுண்டு.குளிர் காலத்தில் உடல் நடுங்குவது, குளிர்க் காய்ச்சல் வரும்போது நடுங்குவது போல அல்லாமல் திடீரென்று உடல் நடனம் ஆடுவது போல கிடுகிடுவென வேகமாக நடுங்குவது தான் இந்த நோயின் அடிப்படை விஷயமாக இருப்பதால் இதற்கு அந்த அசைவை மையமாக வைத்து டிங்கா டிங்கா என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மருத்துவர்களே இந்த நோயில் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள்.
டிங்கா டிங்கா நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன?
டிங்கா டிங்கா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படவில்லை. பல்வேறு விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. அவற்றின் அதிகமகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிற சில அறிகுறிகள் இதோ...
அறிகுறி | விளக்கம் |
---|---|
அதிகப்படியான உடல் நடுக்கம் | நடனம் ஆடுவது போன்று உடல் அசைவுகள் ஏற்படுவது |
காய்ச்சல் | உடல் சூடு அதிகரித்து காய்ச்சல் வருவது |
மோசமான உடல் பலவீனம் | தசைகளில் பலவீனம் ஏற்பட்டு சோர்வடைவது |
மோசமாகும்போது பக்கவாதம் போன்ற உணர்வு | உடலில் ஒரு பகுதி செயலிழப்பது போன்று தோன்றுவது |
சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
டிங்கா டிங்கா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நோயாளிகளின் மாதிரிகள் முழுமையாக பரிசோதனை செய்வதற்காக உகாண்டா சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டு சோதனைகள் செய்யப்படுகின்றன.
இதற்கிடையில், பாரம்பரிய மூலிகை மருந்துகளை ஆதரித்தும், அதில் எந்தவித ஆராய்ச்சி முடிவுகள் இல்லை என்று எதிர்த்தும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.