நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில்: 3 அசாதாரண ஆயுர்வேத வைத்திய முறைகள்!
நீரழிவை கட்டுப்படுத்த, டயட் மருந்துகளின் உதவியை நாடுவதுடன், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்திய முறைகளையும் பின்பற்றலாம்.;
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உதவிக்குறிப்புகள்
இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கப்படலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை நோயை குணப்படுத்த இயலாது. அதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மட்டுமே, உடல் நல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். நீரழிவை கட்டுப்படுத்த, டயட் மருந்துகளின் உதவியை நாடுவதுடன், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்திய முறைகளையும் பின்பற்றலாம். குறிப்பிட்ட 3 ஆயுர்வேத வைத்திய முறைகளை பின்பற்றுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான மூலிகை வைத்தியம்
திரிபலா பொடி
திரிபலா பொடியானது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயுர்வேத பொடியை (Ayurveda) உட்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் பிரச்சனையை குறைக்கலாம். மேலும், இதை உட்கொள்வது மலச்சிக்கலை நீக்குகிறது மற்றும் செரிமானத்திற்கும் நல்லது. இந்தப் பொடியை அரை அல்லது ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் சாப்பிடவும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் என்னும் ஆம்லா, ஆயிர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள பண்புகள் நீரிழிவு சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும். அதை வெட்டி அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறு எடுத்து குடிக்கலாம்.
கற்றாழை சேர்த்த மோர்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க மோர் மற்றும் கற்றாழை சாப்பிடுவது நல்லது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மோர் மற்றும் கற்றாழை சேர்த்து சாப்பிடுவதன் மூலம், அளவை 300 mg/dl என்ற அளவிலான உயர் சக்க்ரை அளவைக் கூட எளிதாகக் குறைக்கலாம். இதை உட்கொள்ள, கற்றாழை இலைகளில் இருந்து புதிய ஜெல்லை பிரித்தெடுத்து, மோரில் கலந்து குடிக்கவும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
நீரிழிவு நோயாளிகள், மேலே குறிப்பிட்ட ஆயுர்வேத திரிவுகலை பின்பற்றுவதுடன், கூடவே வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வதும் அவசியம். நல்ல தூக்கம், சமச்சீர் உணவு, உடல் பயிற்சி ஆகியவவை அவசியம். அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெறுவதையும் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லை என்றால், கொலஸ்ட்ரால், பிபி, உடல் பருமன் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த, உடற்பயிற்சி மிக முக்கியமானது. உங்கள் தினசரி வழக்கத்தில் உடல் பயிற்சியுடன் யோகா மற்றும் தியானத்தை சேர்ப்பது கூடுதல் பலன் தரும்.
உடல் நல பரிசோதனை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், வழக்கமான உடல்நல பரிசோதனைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், உங்கள் நோய் கட்டுக்குள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
காரணம் | தடுக்கும் முறை |
---|---|
உடற்பயிற்சியின்மை | தினசரி நடைபயிற்சி |
குறைவான நீர்சத்து | அதிகமாக தண்ணீர் குடிக்கவும் |