எடுத்து தூரப்போடுற கறிவேப்பிலைல இத்தனை அதிசயங்கள் இருக்கா..? எவ்ளோ மிஸ் பண்றோம் பாருங்க..!

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் கறிவேப்பிலையை தாராளமாக பயன்படுத்தலாம். கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலைகள் குறைக்கின்றன. உள்ளுறுப்புகளுக்கும், தலைமுடிக்கும் மட்டுமல்லாமல், மனரீதியான பாதிப்புகளுக்கும் கறிவேப்பிலை துணைபுரிகிறது. இவை அனைத்துமே இதன் நன்மைகள் ஆகும்.

Update: 2024-11-20 05:30 GMT

 கறிவேப்பிலை (Curry leaves) இல்லாத சமையலே இல்லை. அது தான் அனைத்து சமையலிலும் தாளிப்புக்கு பயன்படுத்தபடும் . அதன் மணம் அவ்வளவு நன்றாக இருக்கும்.ஆனால் அதை யாரும் சாப்பிட மாட்டார்கள். ஒதுக்கி தான் வைப்பார்கள்.ஆனால் அதில் பல மகிமை உள்ளது. இதை கறிவேம்பு , கருவேப்பிலை என்றும் கூறுவர்.கறிவேப்பிலையில் பல வகைகள் உள்ளது.இதன் தாவரவியல் பெயரை முறயா கொயிங்கீ (Murraya koenigii)  என்று அழைப்பர்.இது பல மருத்துவ குணங்கள் கொண்டதாகும். கறிவேப்பிலை (Curry leaves)  தினமும் எடுத்து கொள்ள வேண்டும். சிறியவர்கள் முதல் அனைவரும் சாப்பிடலாம். இனிமேல் சாப்பிடுங்க அதை ஒதுக்கி வைக்காதீங்க. இதனால் நிறைய சத்துக்கள் கிடைக்கும். இதில் உள்ள அதிசயங்களை பார்க்கலாம் வாங்க.

சத்துக்கள் | Nutrients

வைட்டமின் C, A, B, E, அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு பல வகைகளில் நன்மை தரக்கூடியது . சர்க்கரை நோயாளிகளின் அருமருந்து கறிவேப்பிலை ஆகும்.இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இந்த கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். இதனால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகமாகிறது.

கறிவேப்பிலை (Curry leavesசாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் | Curry leaves benefits

1. உடல் எடை:

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் கறிவேப்பிலையை தாராளமாக பயன்படுத்தலாம். கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலைகள் குறைக்கின்றன. தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை விருத்தியாக்கி ரத்த சிவப்பணுக்களின் அளவையும் அதிகரிக்க செய்யும் இந்த கறிவேப்பிலைகள். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலையைவிட சிறந்த மருந்து வேறில்லை.தலைமுடி வளர்ச்சியிலும் கறிவேப்பிலையின் பங்கு அபாரம்.

2.மன அழுத்தம்:

உள்ளுறுப்புகளுக்கும், தலைமுடிக்கும் மட்டுமல்லாமல், மனரீதியான பாதிப்புகளுக்கும் கறிவேப்பிலை துணைபுரிகிறது. இந்த கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மன அழுத்தம், மனநிலை கோளாறு போன்றவற்றை குறைக்க உதவுகிறது. சருமத்தில் எந்த தொந்தரவாக இருந்தாலும் கறிவேப்பிலை விழுது அத்தனையையும் குணப்படுத்துகிறது.

3. மருந்தாக தடவலாம்:

கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் சாறு, தீக்காயங்கள், வெட்டுக்கள், காயங்கள், தோல் எரிச்சல், தடிப்புகள், பூச்சி கடி போன்றவற்றுக்கு மருந்தாக திகழ்கிறது. காயங்கள் அத்தனையும் குணமாவதற்கு, கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டு என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் உள்ளதே இதற்கு காரணம்.

கறிவேப்பிலை (Curry leaves) சாப்பிட்டால் வரும் பாதிப்பு | Curry leaves side effects

1. கறிவேப்பிலை(Curry leaves) சாப்பிட்டால் பாதிப்பு இல்லை ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பாதிப்பு ஏற்படும்.கறிவேப்பிலை அதிகமாக சாப்பிட்டால் உடலில் சோடியம் அதிகரிக்கும்.

2.இந்த கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள் உள்ளதால், மத்திய நரம்பு மண்டலம், செரிமான செயல்முறைகள், இனப்பெருக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலங்களில் சில தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.

3.கறிவேப்பிலையிலுள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கற்களை உண்டாக்கிவிடும். அதனால், சிறுநீரகத்தில் கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் இதனை குறைவாக உட்கொள்ளலாம்.

4. அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சிலருக்குத் ​​தோல் வெடிப்பு அல்லது சுவாசப் பிரச்சனைகள் போன்ற ஒவ்வாமை ஏற்படலாம்.

5. அளவுக்கு அதிகமான கறிவேப்பிலை சாப்பிடும்போது, வயிற்றிலுள்ள அமிலத்தன்மை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம். இதனால் வயிறு எரிச்சல், வயிறு வலி, குமட்டல் (Nausea) உருவாகக்கூடும். அதுமட்டுமல்ல இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து வயிறு வீக்கத்தையும் தந்துவிடுமாம்.

Tags:    

Similar News