தினமும் 2 மிளகு ! பச்சையாக சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயங்கள் ! சாப்பிட்டு பார்க்கலாமா...?
தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. இதுபோன்ற மிளகின் நன்மைகளை பார்க்கலாம்.;
இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்ட மிளகு(black pepper) வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும் இந்தியாவில் உள்ள கேரளக் கடற்கரைப் பகுதி நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால் மிளகை 'கருப்புத் தங்கம்'(Black gold) என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
மிளகு (black pepper) | Black Pepper Benefits in Tamil
மிளகு என்பது 'பைப்பரேசியே'(Piperaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு(black pepper) மற்றும் வால் மிளகு (Tail pepper) என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள் உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும்,மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகு மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. நம் அனைத்து வீடுகளிலும் பயன்படும் ஒரு மூலிகை பொருளாகும்.அதன் மருத்துவ குணங்களை பற்றி காண்போம்.
மிளகை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of eating black pepper
1.சளி, இருமல் வந்துவிட்டால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும்.
2.தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.
3.வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும் ,தொண்டை உறுத்தலை நீக்கும்,சளியையும் குறைக்கும்.
4.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
5.மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
6.எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது .
7.காய்ச்சலை சரி செய்ய இந்த மிளகு உதவும்.மலேரியா காய்ச்சலை குறைக்க எதிரிப்பு சக்திகளை கொண்டது.
8.மிளகை எடுத்து கொண்டால் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.அதனால் கெட்ட கொழுப்பு வராமல் தடுக்கும்.
9. புற்றுநோய் வருவதைத் தடுக்க மிளகு உதவும்.