தினமும் இதை சாப்பிட்டு பாருங்க...! உங்க உடம்புல இருக்க நோய் காத்தா பறந்துபோயிடும்...!
நினைவுத்திறனை அதிகரிக்க , நீரிழிவை தடுக்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கும், சிறுநீரகத்தை பராமரிக்கும் .இது போன்ற நன்மைகள் செய்யும் என்பதை காணலாம்.
கருஞ்சீரகம்:
கருஞ்சீரகத்தை ஆங்கிலத்தில் "பென்னல் பிளவர்" என்று அழைக்கிறோம். பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என அவற்றின் சுவைகளை வைத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கருஞ்சீரகம் பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை வறுத்தோ அல்லது வறுக்காமலேயா நாம் நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.
கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் :
கருஞ்சீரகத்தில் நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இது மட்டுமல்லாது கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில் 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.இதனால் இதனை பயன்படுத்தினால் உடலுக்கு பல சத்துக்களை தரும்.
கருஞ்சீரகத்தின் பயன்கள் :
நினைவுத்திறனை மேம்படுத்தும் :
கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால் மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால் அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடுள்ளது.
நீரிழிவை தடுக்கும்:
நீரிழிவு நோயாளிகள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.
இதயத்திற்கு நல்லது :
கருஞ்சீரக விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தை பாலில் கலந்து குடித்தால் நல்ல பலனை பெறலாம்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும் :
கருஞ்சீரக எண்ணெய் நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இதனால் ரத்த அழுத்தம் குறையும்.
தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு மாற்றம் :
சருமம் மற்றும் முடிகளின் பராமரிப்பிற்கு கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. நல்ல பளபளப்பான சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் முடியின் வளர்ச்சியை மட்டுமல்லாது முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.
சிறுநீரகத்தை பராமரிக்கும் :
நீரிழிவு காரணமாக சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய கருஞ்சீரகம் பெரிதும் துணைபுரிகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில் யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சீறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது.
தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கும் :
தலைவலியால் அவதிப்படும் நிலையில் அவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளை காட்டிலும் இயற்கை மருத்துவம் அவர்களுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரக எண்ணெயை முன்தலையில் சிறிது தடவிவர கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.