ஹைப்பர் பிக்மென்டேஷன் இருக்கா ? அப்ப இந்த ஆயுர்வேத மூலிகை டிப்ஸ் உங்களுக்கு தான் !... உடனே ட்ரை பண்ணுங்க ....

ஆயுர்வேதத்தில் இந்த தோல் நிறமி அதாவது ஹைப்பர் பிக்மென்டேஷன் வழங்கப்படும் சிகிச்சைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Update: 2024-11-15 11:00 GMT

ஹைப்பர் பிக்மென்டேஷன் சருமத்தில் இருக்கும் மெலனின் என்னும் இயற்கை நிறமி ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். நமது தோலின் நிறத்தை இவை தான் தீர்மானிக்கிறது, சில வெளிப்புற மற்றும் உள் காரணிகளால் மெலனின் உற்பத்தி அதிகரிக்கலாம். இவை முகம் அல்லது உடலில் தோல் நிறமிக்கு வழிவகுக்கும். ஆயுர்வேதத்தில் இந்த தோல் நிறமி அதாவது ஹைப்பர் பிக்மென்டேஷன் வழங்கப்படும் சிகிச்சைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் தோல் கரும்புள்ளிகள் அல்லது தோல் நிறமிகள் இந்தியாவில் பொதுவான ஒன்று. பழுப்பு நிற தோலில் இயற்கையான நிறமி அல்லது மெலனின் இருப்பதால் தோல் நிறமிக்கு எளிதில் பாதிக்கப்படுகிறோம். இது பழுப்பு, கருப்பு, நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். உடலின் எந்த பகுதியிலும் இவை வெளிப்படலாம், எனினும் முகம் மற்றும் கைகளில் இது பொதுவானது. இந்த ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிகிச்சைகள் என்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் தெளிவாகப் பார்க்கலாம்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏன் உண்டாகிறது?

சூரிய ஒளி

அதிக நேரம் UV (UltraViolet) கதிர்கள் உடலைத் தாக்கும்போது மெலனின் உற்பத்தி அதிகரிக்கிறது, இது ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.

ஹார்மோன் சமநிலையின்மை

உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளில் உண்டாகும் மாற்றங்கள் அல்லது பிசிஓஎஸ், தைராய்டு, கர்ப்பம் போன்ற நிலைகள் தோல் நிறமியை உண்டு செய்யலாம்.

மெலஸ்மா

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மெலஸ்மா ஏற்படலாம். இது முகத்தில் நீலம் அல்லது சாம்பல்- பழுப்பு நிறத்திட்டுகள் ஆகும். இது 20-40 வயதுக்கிடையே இருப்பவர்களுக்கு பொதுவானது.

சுற்றுச்சூழல் மாசுபாடு தூசி மற்றும் பிற இரசாயனங்கள் அதிக அளவு மாசு உள்ள பகுதி

அழகு சாதன பொருள்

சிலிகான் மற்றும் ஹைட்ரோகுவினோன் போன்ற இரசாயனங்கள் இருந்தால் கரும்புள்ளி உருவாகலாம். ஹெர்பெஸ், சிக்கன் பாக்ஸ் போன்ற தொற்றுநோய்களின் தழும்புகள் ஹைப்பர் பிக்மென்டேஷனை உண்டு செய்யலாம்.

தோல் சிகிச்சை மருந்துகள்

சில கிரீம்கள் அல்லது மருந்துகள், குறிப்பாக மருந்து ரீதியான சில கிரீம்கள், ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கான காரணியாக அமையலாம்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் வகைகள் என்ன?

கருமையான புள்ளிகள் : இது வயது புள்ளிகள், சூரிய புள்ளிகள் மற்றும் சோலார் லென்டிஜின்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மெலஸ்மா: மரபணு முன்கணிப்பு காரணமாக மெலஸ்மா கர்ப்பகாலத்தில் அல்லது அதற்கு பிறகு முகத்தில் பழுப்பு நிற திட்டுகளாக மாறும்.

அழற்சி நிறமி : அழற்சி நிறமி என்பது முகப்பரு, பருக்கள், தோல் காயங்கள் போன்றவற்றுக்கு பிறகு சருமம் பாதிப்பதை உணர்த்தும் நிலை ஆகும்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் அறிகுறிகள்

தோலில் பழுப்பு நிற திட்டுகள் சமச்சீராக இருக்கும். பொதுவாக திட்டுகள் நெற்றியில், கன்னங்கள் மற்றும் மூக்கில் மேல் இருக்கும். முன்கைகள் மற்றும் கழுத்திலும் இவை இருக்கலாம்.வீக்கம் அல்லது காயம் குணமடைந்த பிறகு நிறமிகள் தோன்றும்.

கருப்பு அல்லது வெளிர் பழுப்பு நிற புண்கள் அறிகுறிகளில் பொதுவானவ. சூரிய ஒளியில் வெளிப்படும் போது இந்த திட்டுக்கள் கருமையாக மாறும்.வறண்ட தோற்றம் கொண்ட தோல், கண்கள் மற்றும் வாய்ப்பகுதியை சுற்றி மெல்லிய கோடுகள் அல்லது சுருக்கங்கள் தோன்றும்.

ஆயுர்வேத சிகிச்சை முறையில் தோல் நிறமியை குணப்படுத்த முடியுமா?

ஆயுர்வேதத்தில் தோல் நிறமி (ஹைப்பர் பிக்மென்டேஷன்) குணப்படுத்த பல இயற்கை முறைகள் மற்றும் மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், தாத்துவிக அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, உடலின் தோஷங்கள் மற்றும் தொகுப்புகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் தோல் பிரச்சனைகளை குணமாக்க முயல்கிறது. ஹைப்பர் பிக்மென்டேஷன் பொதுவாக பித்த தோஷம் அதிகரிப்பால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

ஹைப்பர் பிக்மென்டேஷன் தடுக்கும் எண்ணெய்கள்

குங்குமாதி தைலம்

இது மந்தமான நிறமி வயதான சருமத்துக்கு பரிந்துரைக்கப்படும் இது குங்குமப்பூ, மஞ்சிஷ்தா சந்தனம் மற்றும் அதிமதுரம் போன்றவற்றின் சாற்றில் வடிவமைக்கப்பட்டுள்ள்து. முகத்தில் இருக்கும் ஹைப்பர் பிக்மென்டேஷன் குறைப்பது மட்டும் அல்லாமல் சருமத்தை ஒளிரவும் செய்கிறது.

நல்பமராதி தைலம்

ஆயுர்வேதத்தில் இயற்கையான தோல் வெளிச்சம் என்று வர்ணிக்கப்படும் நல்பமராதி தைலம் சரும நிறத்தை பிரகாசமாக வைத்திருக்கும். நான்கு வெவ்வேறு வகையான மரங்களின் பட்டைகள் வெட்டிவேர்,மஞ்சள் மற்றும் நெல்லிக்காயும் கலந்து உள்ளன.

ஹைப்பர் பிக்மென்டேஷன் நிறமிகளை எதிர்த்து போராடும் ஆயுர்வேத மூலிகைகள்

மஞ்சள் : ஆயுர்வேதத்தில் இது முகியமானது. குர்குமின் கொண்ட ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஞ்சள் பேஸ்ட் பயன்படுத்துவது ஹைப்பர் பிக்மென்டேஷன் குறைக்க உதவும்.

சோற்றுக்கற்றாழை : இனிமையான மற்றும் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ள இது வீக்கத்தை குறைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது கரும்புள்ளிகளை குறைக்கிறது.

சந்தனம்: ஆயுர்வேதத்தில் இதன் நறுமண வாசனை மற்றும் தோல் நன்மை பொக்கிஷமாகும். இது குளிரூட்டும் பண்புகளை கொண்டுள்ளது. இதை பன்னீருடன் கலந்து பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் மறையும்.

​வேம்பு: வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது சருமத்தை சுத்தம் செய்து நிறமிகளை தடுக்கிறது.

அதிமதுரம்: அதிமதுரம் மெலனின் உற்பத்தியை தடுக்கிறது. கரும்புள்ளிகள் மறைய செய்கிறது.

நெல்லி: நெல்லி, அதில் உள்ள வைட்டமின் C மூலம், தோலின் கொழுப்புக்களை கட்டுப்படுத்தி, புதிய செல்களின் உருவாக்கத்தை தூண்டுகிறது. இதனால் தோல் பிரகாசமாக மாறும்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளிருந்து சரி செய்யும் ஆயுர்வேத பானங்கள்

கரும்புள்ளிகள் நீங்க உடலில் இருக்கும் நச்சு நீங்க வேண்டும். அந்த நச்சு நீக்கும் மூலிகைகளை எடுத்து கொதிக்க வைத்து குடிப்பது உடல் நச்சை நீக்கும்.

கொத்தமல்லி விதைகள் -1 டீஸ்பூன்

சீரக விதைகள்- 1 டீஸ்பூன்

சோம்பு விதைகள் - 1 டீஸ்பூன்

அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இது இரத்தத்தில் இருக்கும் நச்சு நீக்க உதவுகிறது. தோல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் மற்றொரு மூலிகையான மஞ்சிஷ்தா சேர்த்து பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் கரும்புள்ளிகளுக்கு செய்யப்படும் சிகிச்சைகள் என்ன?

பிரலேபா : நிறமி பகுதியில் மூலிகை பேஸ்ட்டை பயன்படுத்துவதாகும். இது மஞ்சிஷ்டா, யஷ்டிமது சந்தனால், லோத்ரா, ஹரித்ரா போன்றவற்றின் கலவை.

அபியங்கா : நிறத்தை மேம்படுத்தும் மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்யப்படுகிறது. இது நிறமி சிகிச்சைக்கும் செய்யப்படுகிறது. இதில் குங்குமதி தைலம்,நல்பமராதி தைலம், யஷ்டிமதி தைலம் போன்றவை இதில் பயன்படுத்தப்படுகிறது.

நாஸ்ய கர்மா : இருநாசியிலும் நாசி சொட்டுகளை செலுத்துவது நிறமிக்கு சிகிச்சை செய்யப்படுகிறது. தீவிரம் பொறுத்து பல்வேறு எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.

​ரக்தமோக்ஷனா : கடுமையான சந்தர்ப்பங்களில் ரக்தமோக்ஷனா என்னும் அசுத்த இரத்தம் வெளியேற அனுமதிக்கப்படுகிறது.

ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது?

சாப்பிட வேண்டியவை

1.புதிய காய்கறிகள்

2.பழங்கள்

3.வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்

4.முழு தானியங்கள்

5.பீன்ஸ் வகைகள்

6.பருப்பு வகைகள்

7.கொட்டைகள்

8.விதைகள்

9.அசைவம் எனில் மீன், முட்டை, இறைச்சி வகைகள்

10.மூலிகை மசாலா பொருள்கள் போன்றவற்றை சேர்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1.அதிக புளிப்பு

2.அதிக உப்பு

3.காரமான உணவுகள்

4.மிகவும் சூடான அல்லது குளிர்ந்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

5.பழைய உணவை தவிர்க்க வேண்டும்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் அல்லது கரும்புள்ளிகள் இருந்தால் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும்?

கரும்புள்ளி கொண்டிருப்பவர்கள் வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருந்தால் அது சிகிச்சையின் செயல்திறனை மேம்படுத்தும்.மன அழுத்த மேலாண்மை தோல் நிலைகளை மோசமாக்கும். மன அழுத்தத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் செய்ய தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் யோகா போன்ற தளர்வு நுட்பங்கள் செய்ய வேண்டும்.

சரியான தூக்கம்

இரவு போதுமான தூக்கத்தை உறுதி செய்யவும். இது உடலை புதுப்பிக்கவும் புத்துயிர் பெறவும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவும்.

மூலிகை சப்ளிமெண்ட்ஸ்

திரிபலாம் , மஞ்சிஸ்தா மற்றும் குடுச்சி போன்ற ஆயுர்வேத மூலிகைகள் தோல் பண்புகளை குணப்படுத்த செய்யும். ஹைப்பர் பிக்மென்டேஷனுக்காக ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதை விட அவை ஏற்படாமல் தடுப்பதே சிறந்த ஒன்றாக இருக்கும்.

Tags:    

Similar News