என்ன ஆவாரம் பூ முகத்தில் பூசினால் இவ்வளவு மாற்றமா....? ஒரே மாதத்தில் முகம் பொலிவாக மாறிவிடுமாமே....!
சருமத்திற்கு சோப்பு போட்டு குளிப்பதற்கு பதில் மூலிகையால் ஆன பவுடரை கொண்டு குளிப்பதினால் சருமம் மிகவும் பொலிவடையும்.ஆகையால் ஆவாரம் பூ பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம்.
ஆவாரம் பூ :
ஆவாரை, ஆவிரை அல்லது மேகாரி என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது ஒரு சங்க கால மலராகும்.இதை காப்பாக வீட்டில் கட்டுவர்.வீட்டின் உள்ளே கிருமிகள் அண்டாதவாறு காக்க வேண்டுமென்றால் இதை பயன்படுத்த்துவர்.அதுமட்டுமின்றி முகத்திற்கும் பூசுவார்கள் சருமம் பொலிவடைய வேண்டுமென்றால் இதை பயன்படுத்துங்கள்.
ஆவாரம் பூ பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்
- சருமத்திற்கு சோப்பு போட்டு குளிப்பதற்கு பதில் மூலிகையால் ஆன பவுடரை கொண்டு குளிப்பதினால் சருமம் மிகவும் பொலிவடையும்.
- இதை பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், தேம்பல் போன்றவை மறையும்.
- பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு வசம்பும் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஆவாரம் பூ பொடியை சருமத்திற்கு தேய்த்து குளித்தால் மேனி பொன்னிறமாகும். ஆவாரம் பூ பொடியில் தேநீர் போட்டு குடித்தாலும் இரத்தம் சுத்தமாகும்.
- ஆவாரம் பூவுடன் பச்சைப்பயிரை தண்ணீரில் ஊறவைத்து இரண்டையும் சேர்த்து அரைத்து உடல் முழுக்க தேய்த்து குளிக்கலாம்.
- ஆவாரம்பூவுடன் சின்ன வெங்காயம் பாசிப்பயிறு சேர்த்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிடலாம் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதை சாப்பிடுவதால் உடல் நிறமும் கூடும் உடம்பும் புத்துணர்வாக இருக்கும்.
- ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை கசக்கி சாறெடுத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆர வைத்து தலையில் சொட்டை விழுந்த இடத்தில் தேய்த்தால் கூட முடி வளரும்.
- தலைப்பாகை கட்டினா எவ்வளவு தூரம் வெயில்ல நடந்தாலும் வெயில் தாக்கம் தெரியாது. அந்த அளவுக்கு ஆவாரை இலை குளிர்ச்சி தன்மையுடையுது.
- ஆவாரை பூ, இலை, பட்டை, வேர் இப்படி எல்லா பாகமுமே மருத்துவ குணம்கொண்டதுதான். ஆவாரம்பூவில் பால் கலந்து சாப்பிட்டு வந்தா உடற்சூடு தணியும்.
- பெண்களுக்கு வெள்ளைப்படுதலும், ஆண்களுக்கு ஆண்குறி எரிச்சலும் தீரும்.
- கண்சிவப்பு இருக்குறவங்க ஆவாரை விதையை பொடி செஞ்சு நீரில் குழப்பி கண் இமை மேல பத்துபோட்டா குணமாகும்.
- வாய்ப்புண் இருக்குறவங்க ஆவாரை பட்டையை குடிநீரில் சேர்த்து வாய் கொப்பளிச்சு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.
- ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நோய் வராது .
- நீரிழிவு நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ கஷாயம் ஒரு சூப்பர் மருந்தாகும் .