உங்க உடம்புல ஏதோ பாதிப்பு இருக்கா ..? இந்த கனியை சாப்பிடுங்க..அப்றம் என்ன ஆகுதுனு உங்களுக்கே தெரியும்..!

ஓய்வே இல்லாமல் உழைக்கும் உறுப்பு இதயம் மட்டும்தான். உடலில் இருக்கும் இதர உறுப்புகளுக்கு இரத்தம் பாய்ச்சும் வேலையை செய்வதும் இதயத்தின் பொறுப்புதான். அதனால் மற்ற உறுப்புகளை விட இதயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.எனவே தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட வேண்டும்.உடம்பின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update: 2024-11-20 05:00 GMT

நெல்லிக்காய் (Amla) அப்டினாலே நமக்கு சின்ன நெல்லிக்காய் தான் ரொம்ப பிடிக்கும்.ஆனால் பெரிய நெல்லிக்காய் அதிகமா விரும்பி சாப்பிட மாட்டாங்க ஏன்னென்றால் அது கசப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும்.ஆனால் இது உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒன்று சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். அதை அப்படியே சாப்பிட பிடிக்கல என்றால் தண்ணீரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலந்து குடிக்கலாம்.நீண்ட ஆயுள் தரும் கனி.அதன் நன்மைகளை பார்ப்போம்.

நெல்லிக்கனியின் சத்துக்கள் | Amla Nutritional

1. நெல்லி மரம் முழுமையும் மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது. சிறு சிறு இலைகள் கொண்டு கொத்துகொத்தாக காய்க்கும் சிறு நெல்லியும், பெரிய நெல்லி அல்லது காட்டு நெல்லி இரண்டுமே நற்குணங்களைக் கொண்டிருக்கிறது. நெல்லி மரத்தின் பட்டை, வேர், இலை, பூ அனைத்துமே மருந்து பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

2. நெல்லிக்காயை சிறுவயது பள்ளிப்பருவத்திலேயே சுவைத்திருப்போம். நெல்லியில் 80% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனுடன் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் இரும்புச்சத்து, பாஸ்பரம், கரோடின் பாலிபினால்,வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது.

3. ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்பட்டாலும் ஆப்பிளை விட அதிக அளவு சத்துக்கள் கொண்டிருக்கிறது .

4. ஆரஞ்சுப்பழத்தைவிட 20 மடங்கு வைட்டமின் சி சத்து இருக்கிறது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் இருக்கிறது. உடலில் இரும்புச்சத்து கிரகிப்பதை நெல்லிக்காய் ஊக்கப்படுத்துகிறது.


நெல்லிக்கனி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of Eating Amla

1.இதயமே இதயமே :

ஓய்வே இல்லாமல் உழைக்கும் உறுப்பு இதயம் மட்டும்தான். உடலில் இருக்கும் இதர உறுப்புகளுக்கு இரத்தம் பாய்ச்சும் வேலையை செய்வதும் இதயத்தின் பொறுப்புதான். அதனால் மற்ற உறுப்புகளை விட இதயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.எனவே தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட வேண்டும்.

2.கொழுப்பைக் குறைக்கிறது | Amla Reduces fat

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு நெல்லிக்காய் நிச்சயம் பலன் தரும்.

3.சிறுநீரகம் | amla for kidney health

இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த சிறுநீர் பெருக்கியாக நெல்லிச்சாறு செயல்படுகிறது. அதிகப்படியான நீர்ச்சத்துக்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனி சிறுநீரகத்தில் படியும் சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது.தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு தடுக்கப்படுவதோடு சிறுநீர் பிரிவதிலும் பிரச்சனை இருக்காது.

4.எலும்புகள்:

இன்று கால்சியம் பற்றாக்குறையால் தான் குறைந்த வயதிலேயே மூட்டுவலி உண்டாகிறது. இந்த கால்சியத்தை நிறைவு செய்யும் வகையில் நெல்லிக்கனியில் இருக்கும் கால்சியம் சத்துகள் செயல்படுகிறது.வளரும் குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்துவந்தால் உறுதியான எலும்பை பெற்று ஆரோக்கியமாக வளருவார்கள்.

5.பித்தப்பைக் கற்கள்:

உணவு செரிமானமாகவும் அதிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்தை உடலுக்கு எடுத்துச்செல்வதிலும் பித்தநீர் செயல்படுகிறது. இந்த பித்தப்பை ஆரோக்கியமாக இருந்தால் பித்தப்பை கற்களை கரைக்கலாம். பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

6.வாய்ப்புண் வயிற்றுப்புண்:

வாய்ப்புண்ணால் அவதிப்படும்போது நெல்லி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய்கொப்பளித்து வந்தால் வாய்ப்பகுதியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும். நெல்லிச்சாறை வாய்ப்புண்ணில் படும்படி நன்றாக கொப்பளித்து பிறகு குடித்துவந்தால் வாய்ப்புண் மட்டுமல்லாமல் வயிற்றுப்புண்ணும் குறையும். பல் ஈறுகள் வலுப்பெறும்.

7.ஹீமோகுளோபின் அதிகரிக்கும்:

இன்று பெரும்பாலானோருக்கு ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் உடல் சோர்வு, மன சோர்வு என்று பாதிக்கப்படுகிறார்கள். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து அல்லது தேன் கலந்த நெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதை பரிசோதனையில் உறுதி செய்துகொள்ளலாம்.

8.கண் பார்வை கூர்மையாகும்:

இளவயதில் கண்ணாடி என்பது சகஜமாகி வருகிறது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் புரை வளர்தல்,கண் கோளாறு இருப்பவர்கள் நெல்லிக்காயை உண்டுவந்தால் அதன் தீவிரம் குறைய ஆரம்பிக்கும். வயதான பிறகும் கூர்மையான கண் பார்வையைப் பெற விரும்பினால் நெல்லிச்சாறு நிச்சயம் கைகொடுக்கும்.


9.முதுமையைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும்:

இளமையைத் தக்கவைக்கும் காயகல்பம் நெல்லிக்கனி(Amla) என்று சொல்லலாம். இளமையைத் தள்ளிப்போடும் பணியை சிறப்பாக செய்கிறது. உடலில் செல்கள் முதுமையடையும்போது உடலும் முதுமை அடைகிறது. அந்த செல்களின் முதுமையைத் தள்ளிப்போடும் பணியை நெல்லிக்கனி செய்கிறது என்பதால் தான் என்றும் 16 ஆக இருக்க நெல்லிக்கனியை சொல்கிறார்கள்.

10 சருமம் அழகாக இருக்க உதவும்:

உடலில் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் சமநிலையில் வைக்கவும் சரும அழகோடு உறுப்புகள் அழகையும் பராமரிக்கவும் உதவும் பொருள்களைத் தேடி வெளியில் செல்ல வேண்டாம். விலை குறைந்த நெல்லிக்கனியில் உயர்ந்த ஆரோக்கியம் இருக்கும் போது வேறு எதையும் தேடி செல்ல வேண்டியதில்லை.தினம் ஒரு நெல்லிக்காயை உமிழ்நீரோடு கலந்து சாப்பிடலாம். ஆனால் நெல்லிச்சாறை அதிக அளவில் எடுத்துகொள்ளவும் வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உண்மை. 

Tags:    

Similar News