அலுமினிய தாள் பயன்படுத்துறீங்களா? அச்சச்சோ உடனே இத தெரிஞ்சிக்கோங்க..!
அலுமினியம் பேப்பர் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? அதனால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
உணவுகளை பேக் செய்வதற்கு வாழை இலையிலிருந்து பிளாஸ்டிக் கவரில் தொடங்கி தற்போது அலுமினியம் பேப்பர் பயன்படுத்தும் வழக்கம் வந்துவிட்டது. இவ்வளவு ஏன் சமைப்பதற்கு கூட அலுமினிய தாள் பயன்படுத்தும் வழக்கம் வந்துவிட்டது. இவை நன்மை அளிக்குமா? அலுமினிய தாளை பயன்படுத்துவதால் அதில் உள்ள அலுமினியம் உருகி உணவில் கலக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்படும் நிலை வந்துவிட்டது .
இதனால் அலுமினியம் பேப்பர்( Aluminum paper ) பயன்படுத்துவது பாதுகாப்பானதா? அதனால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அலுமினிய தாள் என்றால் என்ன ? / Side effects of wrapping food in aluminum foil
இந்த அலுமினியம் தாள்( Aluminum paper )என்பது மெல்லிய பல்வகை உலோகம் ஆகும். பேக்கிங் செய்வதற்கு, உணவுகளை எடுத்துச் செல்வதற்கு என பல விதங்களில் பயன்பாட்டுக்கு ஏற்ப இது தயாரிக்கப்படுகிறது. உணவில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு இது உதவுகிறது. பல கடைகளில் நீங்கள் இந்த அலுமினிய தாள் பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம்.அலுமினியத்தாள் ஆபத்தானது அல்ல என்றாலும் இது சிறிய அளவு அதிகரித்தாலும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சூடான உணவுகளை அலுமினியம் பேப்பரில் பேக் செய்யும் போது அலுமினிய தாளில் உள்ள அலுமினிய துகள்கள் உணவுடன் கலந்து அது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பெரும்பாலான ஹோட்டல்களில் அலுமினியத் தாளில் உணவை சுற்றுவதற்கு மிக முக்கிய காரணம் உணவை ஈரப்பதமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறது. உணவின் சூட்டை தக்க வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.அலுமினியத்தாலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை நீண்ட நேரம் கழித்து சாப்பிடும் போது மனநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அலுமினியம் பேப்பரில் உணவை சமைப்பது பாதுகாப்பானதா | Is it safe to cook food in aluminum foil?
இன்று பலரும் உணவினை சமைப்பதற்கு அலுமினியம் தாளை( Aluminum paper)பயன்படுத்துகின்றனர்.பெரும்பாலும் நாம் உண்ணக்கூடிய பலவித உணவுகளில் அலுமினியம் நிறைந்திருக்கிறது. குறிப்பாக காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட அளவில் அலுமினியம் சத்து நிறைந்திருக்கிறது. அலுமினிய தாள்( Aluminum paper ) பயன்படுத்தி உணவுகளை சமைக்கும்போது வெப்பத்தின் காரணமாக அலுமினியம் கசிந்து உணவுகளில் கலக்க வாய்ப்புள்ளது. இது அதிகப்படியான அலுமினிய நுகர்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் சமைக்கும் போது அல்லது அதிக வெப்பத்தில் அலுமினிய தாளை ( Aluminum paper ) பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
அலுமினியம் பேப்பரில் உணவு சுற்றி வைப்பதால் உண்டாகும் தீமைகள்| Harmful Effects of Wrapping Food in Aluminum Foil
தினமும் அலுமினியம் பேப்பரில்( Aluminum paper ) பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மறதி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. புளிப்பு சுவை மிகுந்த உணவுகளை இதில் பேக் செய்யும் போது ரசாயன எதிர் விளைவு ஏற்பட்டு உணவின் சுவை பாதிக்கப்படுகிறது.
1.தொடர்ந்து அலுமினியம் துகள்களை உட்கொள்ளும் போது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
2.நீண்ட நேரம் பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது குடல் பாதிப்புகள் ஏற்படலாம்.
3.எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
4.சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம்.
5.நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம்.
6.செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
7.அல்சைமர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
அலுமினிய பேப்பர் பயன்பாட்டை யார் தவிர்க்க வேண்டும்?
அலுமினிய தாளை ( Aluminum paper ) ஏற்கனவே நோய் பாதிப்பில் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எலும்பு மற்றும் சிறுநீரக நோய் பாதிப்பு உடையவர்கள் இதன் பயன்பாட்டை தவிர்க்கவும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருப்பவர்களும் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
அலுமினிய தாளுக்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம்? | Alternatives to Aluminum Foil
அலுமினிய தாள்களை ( Aluminum paper )பயன்படுத்துவதற்கு பதிலாக சமைப்பதற்கு சிலிக்கான் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். உணவினை சேமிப்பதற்கு இந்த கண்ணாடிக் கொள்கலன்கள் பயன்படுகின்றன. அதே நேரத்தில் கண்ணாடி பொருட்களில் உணவு சேமிக்கும் போது உணவு பாதிக்கப்படாமல் இருக்கும்.
வெளி இடங்களுக்கு செல்லும் போது உணவு எடுத்து செல்ல வாழை இலை நல்ல தேர்வாக இருக்கும். பொது இடங்களிலும் உணவை சுற்றி தர அலுமினிய தாளுக்கு( Aluminum paper ) மாற்றாக வாழை இலை, கை இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாத சூழலில் அலுமினியம் தாளில் பார்சல் செய்வதாக இருந்தால் சூடான உணவுகளை பார்சல் செய்ய கூடாது.