இந்த 9 வகை உணவுப்பொருட்களால் ஸ்கின் அழற்சி வருதா...? நீங்க கவனமா இருக்க இதெல்லாம் கவனிங்க...! | 9 food causing itchy skin allergy in tamil

சில உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது நமது உடலில் அரிப்பு ஏற்படுகிறது. அவற்றைக் குறித்து இந்த பதிவில் காண்போம். 9 food causing itchy skin allergy in tamil

Update: 2024-11-21 08:00 GMT

வேர்க்கடலை சாப்பிட்டால் பலருக்கு அலர்ஜி வரும் என உங்களுக்கு தெரியும் தானே. அது போல நிறைய உணவுகள் சாப்பிடும்போது சிலருக்கு அலர்ஜி ( food causing itchy skin allergy in tamil ) வருகிறது.அவற்றைக் குறித்து காண்போம்.  

நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம்முடைய உணவுகளில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மட்டும் கிடையாது. இயற்கையாகவே சில வகை, ரசாயன மூலக்கூறுகளும் இருக்கின்றன. அவை நம் உடலில் சில சமயங்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அவை வெளியில் தெரிவதில்லை. அதுபோல மறைமுகமாக சரும அழற்சியை ஏற்படுத்தும் சில உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

சரும அழற்சி உண்டாக்கும் 9 உணவுகள்9 food causing itchy skin allergy in tamil

ஆம். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம். கடும் தோல்கள் தவிர பல சருமப் பிரச்சினைகளுக்கு நம்முடைய உணவும் ஒரு முக்கியக் காரணம்.உணவில் உள்ள புரத அமைப்பு ஹிஸ்டமைன் பண்புகள், அழற்சியை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் ஆகியவை சேர்ந்து சரும அழற்சியை தூண்டுகின்றன.

​1.சிப்பி இறைச்சி | Chippy food allergy

சிப்பி இறைச்சியில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது அழற்சியை ஏற்படுத்தும்.சிப்பி இறைச்சியிலுள்ள குறிப்பிட்ட புரத வகையை சென்சிடிவ் தன்மை அதிகம் கொண்டவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் ஏற்றுக் கொள்ளாத போது சருமத்தில் அழற்சி, அரிப்பு, எரிச்சல் போன்றவைகள் வெளிப்படுகிறது.

2.​ நட்ஸ் வகைகள் | nut allergy

நட்ஸ் வகைகளால் நிறைய பேருக்கு சரும அழற்சி ஏற்படும். குறிப்பாக வேர்க்கடலையால் நிறைய பேருக்கு சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.அதற்குக் காரணம் நட்ஸ் வகைகளில் உள்ள சில அழற்சியைத் தூண்டும் புரத அமைப்புகள் தான்.

3.​பசும்பால் | Cow Milk Allergy

பசும்பாலில் கேசின் மற்றும் வே புரத வகைகள் இருக்கின்றன.அதனால் சிலருக்கு பசும்பாலால் அழற்சி ஏற்படலாம். நோயெதிர்ப்பு மண்டலம் இந்த புரத வகைகளை தீவிரமாக எதிர்க்கும்போது எக்ஸிமா போன்ற தோல் அறிகுறிகள் கூடவெளிப்படலாம்.

4.​முட்டை | Egg Allergy

முட்டையில் ஓவோமுஹாய்டு மற்றும் ஓஅல்புமின் என்னும் அழற்சியைத் தூண்டும் புரதங்கள் அடங்கியிருக்கின்றன.குறிப்பாக மஞ்சள் கருவில் உள்ள புரதங்களில் அவை அதிகம் என்பதால் முட்டையின் மஞ்சள் கரு அதிகமாக சாப்பிடுகிறவர்களுக்கு தோலில் அரிப்பு, சொறி, சிரங்கு, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

5.சோயா | Soya Allergy

சமீபத்தில் புரதத் தேவைக்காக சோயா பொருள்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம்.அதிலுள்ள சில வகை புரதங்கள் அழற்சியைத் தூண்டும் தன்மையைக் கொண்டவை.அதனால் அளவுக்கு அதிகமாக சோயா பொருள்களை எடுத்துக் கொள்ளும் போது சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

6.​கோதுமை | Wheat allergy

கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருள்கள் எடுத்துக் கொள்ளும் போது நிறைய பேருக்கு அழற்சி ஏற்படும்.ஏனெனில் கோதுமையில் உள்ள பசையம் - குளுட்டன் (gluten) . நோயெதிர்ப்பு மண்டலத்தில் சில அழற்சி எதிர்வினைகளை உண்டாக்குகின்றன. அதனால் தோலில் வறட்சி, அரிப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

7.​சில மீன் வகைகள் | Fish Allergy

எல்லா வகை மீன்களில் உள்ள புரதங்களும் அழற்சியை ஏற்படுத்துவது இல்லை. டூனா உள்ள சில குறிப்பிட்ட மீன் வகைகளில் உள்ள புரதங்கள் அழற்சியைத் தூண்டும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.அதனால் தான் சிலருக்கு சில மீன்களால் அழற்சி ஏற்படுகிறது. அதோடு உப்பு அதிகமாக சேர்த்து கருவாடாக பதப்படுத்தும் போது அவை அதிகமாகின்றன. அதனால் தான் பலருக்கும் கருவாடு சாப்பிடும் போது அழற்சி அதிகமாக ஏற்படுகிறது.

8.எள் | sesame allergy

எள் எல்லோருக்கும் அழற்சியை ஏற்படுத்துவது கிடையாது. அதில் மிகக் குறைந்த அளவே அழற்சியைத் தூண்டும் பண்புகள் இருக்கின்றன.பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்கள், மிக அதிக சென்சிடிவ் பண்புகள் கொண்டவர்களுக்கு எள் எடுக்கும் போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

9.​பதப்படுத்திகள் உள்ளிட்டவை:

சில உணவுகள் நேரடியாக சருமப் பிரச்சினைகளைத் தூண்டும் பண்புகளைப் பெற்று இருக்கின்றன. ஆனால் பல உணவுகள் நாம் இடையில் சேர்க்கும் சில ரசாயனக் கலப்புகளால் அழற்சியைத் தூணடுகின்றன.

சரும அழற்சியை எவ்வாறு தடுக்கலாம் | How to prevent skin Allergy

1. உணவுகளால் ஏற்படும் சரும அழற்சியைத் தடுக்க வேண்டுமென்றால் உங்களுக்கு எந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும் போது அழற்சி ஏற்படுகிறது என்கிற விழிப்புணர்வு முதலில் இருக்க வேண்டும்.

2. அதனால் புதிதாக எந்த உணவை எடுத்துக் கொண்டால் அழற்சி ஏற்படுமோ அவை சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.

3. புதிதாக எடுக்கும் உணவை முதலில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏதேனும் அழற்சி ஏற்படுகிறதா என்று சோதித்து பாருங்கள்.

4.முடிந்தவரையில் செயற்கை பதப்படுத்திகள், கலர் உள்ளிட்டவை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

5. உணவுகளால் ஏதேனும் ஸ்கின் அழற்சி ஏற்பட்டால் தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News