உங்கள் சமையலறையில் மறைந்திருக்கும் 5 இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
பாக்டீரியா தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து கொள்ள மருந்துகளை தவிர்த்து இந்த உணவுகளை உங்கள் பத்தியத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இவை பாக்டீரியா தொற்றுகள் வராமல் தடுப்பதுடன் ஏற்கனவே நோய்க்கிருமிகளால் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதை எதிர்த்து போராடுகிறது.;
இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பு உணவுகள்
பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (anti biotics) உபயோகப்படுத்தப்படுவது இயல்பான ஒன்றே. ஆனால் தவறான முறையில் பயன்படுத்தியதால் நிறைய பாக்டீரியாக்கள் இந்த மருந்துகளுக்கு எதிர்வினையாக வாழ ஆரம்பித்து விட்டன. மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
பெரும்பான்மை மக்கள் இதற்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எவை என்று தேட ஆரம்பித்து விட்டனர். இங்கே ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், சில உணவுகளும் மற்றும் வீட்டு வைத்தியங்களும் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக செயல்படுகிறது. எனவே பாக்டீரியா தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள மருந்துகளை தவிர்த்து, இந்த உணவுகளை உங்கள் உணவுப் பாட்டியல்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்கள்
1. இஞ்சி
இது மிகச்சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் மற்றும் அழற்சி நீக்கி உணவாகும். இதில் gingerol, terpenoids, shogaol, zerumbone, zingerone மற்றும் சக்தி வாய்ந்த ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை நுண்ணுயிர் கொல்லியாகவும் செயல்பட்டு பலவிதமான பாக்டீரியாக்களை எதிர்த்து சிறப்பாக போராடுகிறது.
எவ்வாறு உபயோகப்படுத்தலாம்
- இதை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.
- உணவு உட்கொண்ட பிறகு இதை வாயினிப்பியாக உட்கொள்ளலாம்.
- சாலட் மற்றும் சூப்பில் இஞ்சியை துருவி போட்டு சாப்பிடலாம்.
- காலையில் பருகும் தேநீரில் கலந்து சாப்பிடலாம்.
2. ஆரிகனோ எண்ணெய்
சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் மற்றும் பூஞ்சண எதிர்ப்பி சேர்மங்கள் carvacrol மற்றும் thymol வடிவங்களில் ஆரிகனோ எண்ணெயில் உள்ளன. இது பலவிதமான பாக்டீரியாக்கள், குறிப்பாக செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் அழியாத பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். ஈ - கோலை குணப்படுத்தவும் பயனுள்ளது.
கவனத்திற்கு: தூய்மையான ஆரிகனோ எண்ணெயை மட்டுமே உபயோகியுங்கள். அதற்கு எண்ணெயை வாங்கும் போதும் எங்கு தரமாக கிடைக்குமோ அங்கு வாங்குங்கள். 1 அல்லது 2 சொட்டு தண்ணீரில் கலந்து அல்லது எண்ணெயுடன் கலந்து 2 வாரத்திற்கு மேல் தொடர்ந்து உட்கொள்ள வேண்டாம். மேலும் இந்த எண்ணெயை உட்கொள்ள விரும்பினால் மருத்துவர் ஆலோசனையை நாடுங்கள்.
3. வெங்காயம்
இதில் சிஸ்டைன் சல்பாக்ஸைடுகள் என்னும் தெரபெடிக் சல்பர் கூறுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக அருமையாக செயல்படுகின்றன. வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது, குறிப்பாக துண்டுகளாக நறுக்கி சிறிது நேரம் வைத்திருந்து பின் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால் தாவர ஊட்டச்சத்து அதிகரிக்கும். ஸ்டூ, சூப் அல்லது வதக்கி சாப்பிடலாம்.
4. பூண்டு
இதில் அலிசின் இருக்கிறது. பலவிதமான பாக்டீரியாக்களுக்கு எதிராக சிறப்பாக போராடுகிறது. இதை அப்படியே சாப்பிடுவது மிகவும் நலம். பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நேரம் வைத்திருந்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை பயக்கும் நொதி வெளியாகும். ஒருநாளில் 1-3 பூண்டுகள் வரை படிப்படியாக சாப்பிட ஆரம்பியுங்கள்.
கவனிக்க வேண்டியவை |
---|
- பூண்டை அளவாக மட்டுமே சாப்பிட வேண்டும். - ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள் பூண்டை சாப்பிடும் முன்பு மருத்துவரை ஆலோசியுங்கள். - குழந்தைகளுக்கு பூண்டு உகந்ததல்ல. |
5. தேன், குறிப்பாக மனுகா தேன்
எல்லா வகையான தேனும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட வல்லது. ஆனால் நியூசிலாந்தில் கிடைக்கும் மனுகா தேன் மற்ற எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் போன்ற பண்புகள் இருக்கின்றன. இதை மருந்துகளால் அழியாத நோய்க்கிருமிகளான MRSA ஐ குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். சுத்தமான மனுகா தேனை நம்பத்தகுந்த ஆட்களிடமிருந்து வாங்கி தினமும் இரண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடுங்கள். அதனை சூடுபடுத்தாமல் சாப்பிடுவது நல்லது.
குறிப்பு: தேனை குழந்தைகளுக்கு தரக்கூடாது.
முடிவுரை
இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருட்கள், பாக்டீரியா தொற்றுகளை தடுக்கவும், ஏற்கனவே ஏற்பட்ட தொற்று நோய்களை சமாளிக்கவும் உதவுகின்றன. மேலும் இவை வீக்கத்தைக் குறைத்து, நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பக்க விளைவுகளைத் தவிர்க்க, இயற்கை உணவுகளான இஞ்சி, ஆரிகனோ எண்ணெய், வெங்காயம், பூண்டு மற்றும் மனுகா தேனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.