Toned Meaning in Tamil-டோன்ட் என்பதன் பொருள் என்ன? தெரிஞ்சுக்கங்க..!

டோன்ட் என்பதை தமிழில் நிறமாக்கப்பட்ட அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட என்று கூறலாம்.

Update: 2023-11-01 07:53 GMT

toned meaning in tamil-டோன்ட் என்பதன் பொருள் என்ன (கோப்பு படம்)

Toned Meaning in Tamil

டோன்ட் பால்(Toned Milk)

பல நாடுகளில் கால்சியத்தின் செறிவான உணவு ஆதாரங்களில் பால் ஒன்றாகும். மேலும் அது முக்கிய பால் பொருளாகவும் விளங்குகிறது. டோன்ட் பால் என்பது பாரம்பரிய பசும்பாலின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட ஆனால் ஊட்டச்சத்துக்கு ஒத்த மதிப்புடைய உருவாக்கம் ஆகும். டோன்ட் மில்க் என்பது முழு கிரீம் பசுவின் பாலில் கொழுப்புச் சத்து குறைக்கவும், அதன் ஊட்டச்சத்து மதிப்பை பராமரிக்கவும், மொத்த அளவு மற்றும் பாலின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், கொழுப்பு நீக்கப்பட்ட பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பால் தயாரிப்பு ஆகும். 

Toned Meaning in Tamil

அதாவது மிக எளிதாக சொல்லப்போனால் கொழுப்பு நீக்கப்பட்ட பால் என்று கூறலாம்.

ஊட்டச்சத்து தகவல்

100 மில்லி toned பாலில் உள்ள ஊட்டச்சத்து

(தோராயமாக)

ஆற்றல் 59.4 கி.கலோரி

பால் கொழுப்பு 3.0 கிராம்

லாக்டோஸ் 4.8 கிராம்

பால் புரதம் 3.3 கிராம்

கால்சியம் 125 மி.கி

Toned Meaning in Tamil

பாலில் என்ன சத்துக்கள் உள்ளன ?

பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு. புரதம், கால்சியம்,வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். குழந்தைகளுக்கு அடிப்படை உணவான பால், வயதானவர்களுக்கு சப்ளிமென்ட் உணவு.

பாலின் வகைகள்

தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், கொழுப்பு நீக்கிய டோன்ட் மில்க் என பாலை 4 வகைகளாகப் பிரிக்கலாம். தாய்ப்பாலில் ‘கேசின்’ எனப்படுகிற புரதச்சத்து குறைவு. அது பசும்பாலில் அதிகம். எருமைப்பாலில் கொழுப்புச்சத்து அதிகம். டோன்ட் மில்க்கில் புரதச்சத்து அதிகம் . கொழுப்புச்சத்து குறைவு. ஸ்கிம்டு மில்க்தான் எல்லோருக்கும் உகந்தது.

சைவ உணவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பால்தான் பேலன்ஸ்டு உணவு. ஒருநாளைக்கு ஒருவருக்கு சராசரியாக 250 மி.லி. பால் அவசியம் தேவை. பெரியவர்களானால் 150 மி.லி. பள்ளிக்கூட வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் போன்றோருக்கு இந்த அளவு 500 மி.லி. முதல் 1000 மி.லி. வரை அதிகரிக்கும்.

“பெண்கள் பால் குடிக்கக் கூடாது, பால் குடித்தால் உடல் பருக்கும், ஹார்ட் அட்டாக் வரும்’ என்றெல்லாம் ஆளாளுக்கு ஆயிரம் சொல்வதைக் கேட்கிறோம். அவையெல்லாம் வதந்திகளே. உண்மையில் பாதகமில்லாத உணவு பால். பிரச்னை பாலில் அல்ல. அதிலுள்ள கொழுப்பில்தான். கொழுப்பு நீக்கிய பால் எல்லோருக்கும் உகந்தது. இதய நோய் உள்ளவர்களும் பால் குடிக்கலாம்.

Toned Meaning in Tamil

பாலில் இருந்து பெறப்படுகிற தயிர், மோர், வெண்ணெய், பனீர், சீஸ் போன்றவற்றில் தயிரும் மோரும் சிறந்தவை. பாலின் புளித்த வடி வமான தயிரில் உள்ள பாக்டீரியாக்களும் லாக்டிக் அமிலமும் செரிமானத்துக்குப் பெரிதும் உதவக் கூடியவை.

சிலவகை உடல் நலக் கோளாறுகளுக்காக சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மருந்து,மாத்திரைகள் எடுப்பதால் வயிற்று எரிச்சல், வயிற்றில் புண் போன்றவை ஏற்படலாம். அதைக் குறைக்க மறுபடி மருத்துவர்கள் வேறு மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். மருந்துகளின் பக்க விளைவுகளையும் வீரியத்தையும் குறைப்பதில் தயிருக்கு நிகர் இல்லை. தயிர் என்றால் புளிப்பில்லாத, கொழுப்பு நீக்கப்பட்டது மட்டுமே நல்லது. தயிரா, மோரா எனக் கேட்டால் மோர்தான் சிறந்தது. பேதியாகும்போது பால் எடுக்கக் கூடாது. அந்த நேரத்தில் மோர்தான் நல்லது.


யாருக்கு என்ன பால்?

பல வீடுகளில் உபயோகிக்கிற நீல நிற ஆவின் பால் பாக்கெட்டில் இருப்பது வெறும் 3.5 சதவிகிதக் கொழுப்பு. இப்போது 2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு கொண்ட பிங்க் நிற ஆவின் பால் கூடக் கிடைக்கிறது. டயட் செய்கிறவர்களுக்கு அது பெஸ்ட். ஆரஞ்சு, பச்சை நிற பாக்கெட்டெல்லாம் அதிகக் கொழுப்பு கொண்டவை என்பதால், அரிதாக பால் குடிப்பவர்களுக்கும், சராசரியை விட எடை குறைவாக உள்ளவர்களுக்கும் மட்டும் ஓ.கே.

Toned Meaning in Tamil

கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவே இருந்தாலும், அதைக் காய்ச்சி, முதலில் அறை வெப்பநிலைக்கு ஆற வைக்க வேண்டும். மேலே படிகிற ஆடையை நீக்கி விட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். அந்த பால் ஏட்டைத் தனியே சேகரித்து, வாரம் ஒரு முறை வெண்ணெயாக்கி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

லேக்டோஸ் அலர்ஜி?

பால் ஒவ்வாமையைத்தான் ‘லேக்டோஸ் அலர்ஜி’ என்கிறோம். அதனால், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால்கூட ஒப்புக் கொள்ளாது பேதி அதிகமாகும். ஒவ்வாமை உறுதி செய்யப்பட்டால், லேக்டோஸ் ஃப்ரீ பால் கொடுக்கலாம். ஒரு குழந்தைக்கு பால் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, காலம் முழுக்க, அதற்கு பாலே கொடுக்கக் கூடாது என அர்த்தமில்லை. இடையிடையில் அதைக் கொடுத்துப் பார்த்து, அலர்ஜி இல்லாவிட்டால் தொடர்ந்து கொடுக்கலாம்.

ஃபிளேவர்டு மில்க் நல்லதா?

சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் என விதம் விதமான சுவைகளில் ஃபிளேவர்டு மில்க் கிடைக்கிறது. ப்ரிசர்வேட்டிவ் அதிகம் சேர்க்கப்படுவதில்லை என்பதால் இது நல்லதுதான். சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு மற்றும் இதய நோய்க்காரர்கள் தவிர்க்க வேண்டும்.

Toned Meaning in Tamil

பால் குடிக்க அடம் பிடிக்கிறதா குழந்தை?

கெட்டியான சர்க்கரைப்பாகு தயாரித்து, அதில் வெனிலா மாதிரி குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு எசென்ஸையும், ஃபுட் கலரையும் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது, இதில் சிறிது எடுத்து, பாலில் கலந்து கொடுக்கலாம்.

ஏதேனும் பழம் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் அரைத்து பாலில் கலந்து கொடுக்கலாம்.

தயிரை வடிகட்டி, இனிப்பு சேர்த்துக் கொடுக்கலாம். பாலை பனீராக்கி, அதைத் துருவி, தோசை, சப்பாத்தி, பிரெட் உடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

Tags:    

Similar News