தேடி வாழ்தல் இன்பம்..! தேடாமல் இருப்பதே துன்பம்..! எப்டீ..?
Tamil Quotes Images-மனம் என்னும் மாயக்காரி சொல்வதை எல்லாம் இந்த மூளைக்காரன் செய்யாமல் விடமாட்டான். எல்லாம் அந்த மாயக்காரி செய்யும் வேலைதான்.;
Tamil Quotes Images
வாழ்க்கையை வளமாக்குவதும், வறண்டுபோய்ச் செய்வதும் மனசுதான் காரணம். மனம் இருந்தால் மட்டுமே மார்க்கம் உண்டு என்று சொன்னது அதற்காகத்தான்.மனம் நல்லதை நினைத்து நடைபோட்டால் நிச்சயம் அது சரியான பாதையில் நம்மை இட்டுச் செல்லும். முயற்சி திருவினையாக்கும் என்று வள்ளுவன் அதைத்தான் தனது ஈரடிக்கூற்றில் கூறியுள்ளான். முயற்சி உடையார் இகழ்ச்சி அடியார். இப்படி எல்லாமே மனதை குறிவைத்தே கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை பற்றிய மேற்கோள்களை படீங்க.
- நம்பிக்கை வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்.
- ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் - சூர்யா
- மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பாத ஒன்று. மறக்க மறுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.!
- பசி மறைந்த பின் பந்திக்கு அழைப்பதும். மனம் முறிந்த பின் மன்னிப்பு..! கேட்பதும் ஒன்று தான்
- சுயநலத்தில் இயங்கும் உலகம் இது. உன் நலத்தை விரும்பும் உறவு கிடைப்பது கடினம் தான். அப்படி கிடைத்தால் இழந்து விடாதே..!
- மாற்றம் எல்லாம் ஏதோ ஒரு. ஏமாற்றத்தில் இருந்து தான் தொடங்குகிறது..!
- மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பாத ஒன்று. மறக்க மறுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.!
- பசி மறைந்த பின் பந்திக்கு அழைப்பதும். மனம் முறிந்த பின் மன்னிப்பு.. ! கேட்பதும் ஒன்று தான்..!
- சுயநலத்தில் இயங்கும் உலகம் இது. உன் நலத்தை விரும்பும் உறவு கிடைப்பது கடினம் தான். அப்படி கிடத்தால் இழந்து விடாதே..!
- மகிழ்ச்சியை தான் தரவில்லை. மறதியையாவது கொடு இறைவா. நான் மகிழ்ச்சி அடைவேன்...!
- மாற்றம் எல்லாம் ஏதோ ஒரு. ஏமாற்றத்தில் இருந்து தான் தொடங்குகிறது..!
- எந்த ஒன்று இன்பத்தை தருகிறதோ. அந்த ஒன்று நிச்சயம் துன்பத்தையும் தரும்.
- பரிகாசம் பலப்படுத்தும். பரிதாபம் பலவீனப்படுத்தும்.
- எனக்கு தெரிந்த வரை விஷம் பாட்டிலில் இல்லை. சிலரின் வாயில் தான் உள்ளது. விசம் தின்று கொல்லும்.
வார்த்தை நின்று கொல்கிறது.
- ஜெயிச்சவன் சொன்னா கேப்பாங்க. தோத்தவன் சொன்னா யோசிப்பாங்க. ஆலோசனைக்கு கூட தகுதியை எதிர் பார்ப்பவர் அதிகம் இங்கு.
- எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும், ஒரு கெட்டவனும் போராடி கொண்டிருக்கிறான். இதில் வெற்றி பெறுபவனே நம் அடையாளத்தை உறுதி செய்கிறான்.
- யோசிக்காமல் சொல்லும் சொல்லும், யோசிக்காமல் செய்யும் செயலும். பின் ஒவ்வொரு ஒவ்வொரு நிமிடமும்
நம்மை யோசிக்க வைக்கும்.
- பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை செலவு செய்கிறோம்..! இழந்த ஆரோக்கியத்தை பெற பணத்தை
செலவு செய்கிறோம்..! இது தான் வாழ்க்கை சுழற்சி...!
- திறமை இருந்தும், முயற்சி இல்லை எனில், அடுத்தவர் திறமைக்கு அடிமையாகி விடுவோம். நம் திறமையை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
- புரிந்து கொள் மனிதா..! ஊருக்கு நடுவில் வீடு இருந்தாலும் ஊருக்கு வெளியே தான் புதைக்க படுவாய்.
அறிந்து கொள் மனிதா..! நீ அழுதால் தானும் அழும் ஒர் உயிர் அம்மா மட்டுமே.
- சிரிக்கும்போது உடன் சிரிக்க நாலு பேர் இருப்பார்கள். அழும்போது தனியாகத்தான் அழ வேண்டும். ஏன் என்று கேட்க கூட ஒருத்தனும் வரமாட்டான்.
- நம் சொற்கள் பிறர் இதயத்தில் விதையாக விழ வேண்டும். விஷமாக இறங்க கூடாது. பூவாக மணக்க வேண்டும். முள்ளாக குத்தக் கூடாது.
- ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஏழைக்கு உதவி விட்டு ஏழையின் சிரிப்பை ஆத்மார்த்தமாக ரசித்துப் பார்.வாழ்க்கை முழுவதும் உதவி செய்வதை நிறுத்த மாட்டாய் நீ.
- மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் இருக்கும் செல்வம். ஆடம்பரம் என்பது நாமே நமக்கு
தேடிக்கொள்ளும் தொல்லை.
- நேற்றைய துன்பத்தை எண்ணி கொண்டு இருந்தால். இன்றைய இன்பமும் நாளைய இன்பமும் மறைந்து விடும். துன்பத்தை மறந்து விடு இல்லை கடந்து விடு.
- முடிந்ததையும் நடந்ததையும் நினைவில் கொண்டு வாடாதீர்கள். பின் நிம்மதியின் நிழலைக்கூட
தொட முடியாமல் போய்விடும்.
- எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று எண்ணும் போது ஒன்றை மறக்காதே. துன்பம் இருந்தால் இன்பமும் உண்டு. தோல்வி இருந்தால் வெற்றியும் உண்டு. கடக்க வேண்டியதை கடந்து தான் ஆகவேண்டும்.
- வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும். எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை.
- எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது. மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்...மன்னிப்பவன் மாமனிதன்..!
- சில நிகழ்வுகளை மறக்கவும், பல தவறுகளை மன்னிக்கவும், கற்றுக்கொண்டால் போதும்,
நிம்மதி நிலைக்கும்...!
- வாழ்க்கையில்...நீ எதை சோதிக்கிறாயோ அது உன் பலம். எது உன்னை சோதிக்கிறதோ அது உன்
பலவீனம்...
- உனக்கான இடத்தை தேடுவதல்ல வாழ்க்கை...உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை...!
- கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை. கல் தான் காணாமல் போகிறது..விமர்சனங்கள் கல்லாகவும்
நாம் கடலாகவும் இருப்போம்...
- முதுகை காட்டி காலை பிடித்து வாழ்வதை விட, நெஞ்சை காட்டி தலைநிமிர்ந்து வாழ்வோம். பாரதி தந்த ஊக்கமடா தமிழ் தாய் ரத்தமடா.
- தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாக இருந்து விடலாம். நம் மனது புரியாத யாருக்கும்
நம் வார்த்தைகளும் புரியாது.
- கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால்...எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம்...!
- தேவைக்காக பழகுபவர்கள் காரியம் முடிந்து விட்டால், நமக்கு காரியம் நடந்தால் கூட திரும்பி பார்க்க மாட்டார்கள்.
- நல்லவர்கள் அன்பையும், புன்னகையையும். கெட்டவர்கள் அனுபவங்களையும், பாடங்களையும்.
- வாழ்க்கையின் பக்கங்களில் மறக்கா நினைவுகளாக பதிந்து செல்கிறார்கள்...!
- கேள்வி என்னவென்று தெரியாது. ஆனால் பதில் எழுத வேண்டும். இது தான் வாழ்க்கை.
- வலிகளை மறக்க வழி கிடைத்தால். வலியை விட்டு அந்த வழியில் செல். உன் வாழ்கைக்கு புது வழி கிடைக்கும்.
- எல்லா பயணங்களும் நம்ம நினைச்ச இடத்துல போய் முடியுறது இல்ல..! வழி தவறிப் போற சில பாதைகள் தான் நமக்கு வாழ்கையையே கற்று கொடுக்கிறது...!
- சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!
- பிறப்பு என்பது அழகான விபத்து. இறப்பு என்பது ஆபத்தான விபத்து. இரண்டுக்கும் இடையில் சில காலம் வாழ்க்கை. கவலை, இனிமை, தனிமை அனைத்தையும் சுமந்து.
- திறமை என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள். புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது. நன்றியுடன் இருங்கள். அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது.
எச்சரிக்கையாக இருங்கள்...!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2