பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரியா? ரூ.2 லட்சம் சம்பளத்துடன் அரசு வேலை!

மத்திய அரசின் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள, விஞ்ஞானி (Scientist) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2021-11-26 07:00 GMT

சித்தரிப்பு காட்சி

நீங்கள் பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரி? அப்படியென்றால், நீங்களும் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். இப்பணிக்கான தகுதியும்,  விருப்பமும் உள்ளவர்கள் என்றால், கீழ்காணும் முறையில் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். அது குறித்த விவரம் வருமாறு:

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் மேலாண்மை / மத்திய அரசு

பணி : Scientist 'C' and Scientist 'D'

மொத்த காலிப் பணியிடங்கள் : 33

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில், இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் Research மற்றும் Development பணிகளில், 4 ஆண்டுகள் வரை, முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு,  https://recruitment-delhi.nielit.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம், வரும் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800; எஸ்சி / எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 கட்டணம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Screening Test, Person al Interaction, Interview மூலம் தேர்வு செய்து பணி அமர்த்தப்படுவார்கள்.

Tags:    

Similar News