மாணவனின் அக்கிரமம் : அதிர்ந்த கோயம்புத்துார்..! பெற்றோரே கவனியுங்கள்..!
கோவையில் நடந்துள்ள பாலியல் அக்கிரமத்தை கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.;
(பெற்றோருக்கும் மாணவிகளுக்கும் இது ஒரு விழிப்புணர்வு செய்தியாக இருக்கட்டும்.)
யாரிந்த இளைஞர்? என்ன நடந்தது கோயம்புத்தூரில்.
இவர் (அனைவர் பெயரும் மறைக்கப்பட்டுள்ளது) தன்னுடைய காலேஜில் படித்து வந்த 19 வயது மாணவியுடன் நட்பாக பழகினார். பிறகு காதலிப்பதாக சொல்லி, அந்த மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்றிருக்கிறார். அங்கே மாணவியுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதற்கு பிறகு, அடுத்த சில மாதங்களில் 21 வயதான இன்னொரு மாணவியுடன் நெருங்கி பழகியிருக்கிறார். (அனைவரின் பெயரும் மறைக்கப்பட்டுள்ளது). அந்த பெண்ணையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது
பிறகு, இன்னொரு மாணவியை காதலிப்பதாக சொல்லி வந்துள்ளார்.. அந்த பெண்ணையும் வீட்டுக்கு வரும்படி அழைத்து வற்புறுத்தினாராம். ஆனால், அந்த பெண்ணோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். யாருமில்லாத வீட்டிற்கு, தனியாக வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். இருந்தாலும், விடாமல் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து கொண்டே இருந்தாராம்.
இதற்கு நடுவில், ஏற்கனவே காதலித்த 2 மாணவிகளுக்கு, இவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதற்கு மேலும் இவனால் யாருமு் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரிடமிருந்து உறவை மாணவிகள் முற்றிலும் துண்டித்து கொண்டதாக தெரிகிறது. இதையறிந்த மாணவன், அந்த பெண்களையே மறுபடியும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்கள் மறுத்ததற்கு, பகிரங்கமாகவே எல்லார் முன்னிலையும் ஆபாசமான வார்த்தைகளில் கேவலமாக பேசினாராம்.
அத்துடன், பாலியல் உறவு கொள்ளும்போது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து விடுவதாகவும் கூறி அந்த 2 பெண்களை மிரட்டியதாகவும் தெரிகிறது. அனைவர் முன்னிலையிலும் மாணவன் இப்படி மிரட்டியதால், இந்த விஷயம் காலேஜ் முழுக்க பரவி அதிர்ச்சியை தந்தது.
இதற்கு பிறகு மாணவனை விடக்கூடாது என்று நினைத்த பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் கோவையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் (போலீஸ் ஸ்டேஷன் கூட தெரிய வேண்டாம். இது விழிப்புணர்வு செய்தி. எனவே விஷயம் மட்டுமே முக்கியம்) போலீசில் புகார் தந்தனர். இதையடுத்து போலீசார் மாணவனை கைது செய்தனர்.
மாணவிகளே கொஞ்சம் கவனமாக இருங்கள். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை கூர்ந்து கவனியுங்கள். அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் நடவடிக்கையை கவனிங்க.