Paper Napkins Products-சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் ஐடியா..!

சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவரா நீங்கள். அப்படி எனில் உங்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

Update: 2023-11-19 07:49 GMT

paper napkins products-பேப்பர் நாப்கின் (கோப்பு படம்)

Paper Napkins Products, Paper Napkin, Paper Napkin Manufacture, Khadi Village Industries Commission, Mudra Loan

சொந்தமாக தொழில் தொடங்கி செய்யவேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். பொதுவாக புதிய வணிகத்தை தொடங்குவதற்கு பெரிய முதலீடு தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். மேலும் நிதிப் பற்றாக்குறையும் அவர்களது தொழில் தொடங்கும் கனவை சிதைத்து அதை கனவாகவே ஆக்கி விடுகிறது.

இருப்பினும் ஒரு முறை முதலீடு செய்து ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் ஈட்டும் பல தொழில்கள் உள்ளன. அதில் மிக எளிமையான மற்றும் நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ள தொழில் என்றால் பேப்பர் நாப்கின் வணிகம்தான்.


Paper Napkins Products

அன்றாட வாழ்க்கையில், முக நாப்கின்கள், டாய்லெட் பேப்பர், பேப்பர் டவல்கள் மற்றும் டிஸ்யூ பேப்பர் என பல விதமான காகித நாப்கினை நாம் பயன்படுத்துகிறோம். வீடுகள், கார்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின்னர் இதன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை நாமும் அறிவோம். எப்படி முக கவசம் முக்கியயமானதோ அதேபோல இந்த கை துடைக்கும் காகித நாப்கின், பேப்பர் டவல், டிஸ்யூ பேப்பர் என பல பயன்பாடுகள் அதிகரித்துள்ளன.

Paper Napkins Products

மக்களின் வாழ்க்கையில் காகித நாப்கினுக்கான தேவை எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும் என்பதால் தைரியமாக காகித நாப்கின் தயாரிப்பு தொழிலில் இறங்கலாம். உங்கள் தொழிலைத் தொடங்க அரசாங்கமும் உங்களுக்கு உதவும். எனவே காகித நாப்கின் வர்த்தகத்தை தொடங்கி உங்கள் தொழில் தொடங்கும் கனவை நனவாக்கலாம்.

காகித நாப்கின் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கு, தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள், போக்குவரத்து, நுகர்பொருட்கள், எழுதுபொருட்கள், பராமரிப்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும்.

Paper Napkins Products

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, இந்த தொழில் தொடங்க சுமார் ரூ.13 லட்சம் தேவைப்படும். அவ்வளவு பணம் இல்லையென்றால், ரூ.5 லட்சத்தை உங்க மூலதனமாக போடுங்க, எஞ்சிய தொகைக்கு கடன் வாங்கி முதலீடு செய்யுங்க

அதுவும் இல்லையென்றால், உங்களின் தொழில் முயற்சிக்கு உதவ அரசாங்கம் எப்போதும் காத்திருக்கிறது. தொழில் தொடங்குவதற்காக பிரதமர் மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.


Paper Napkins Products

இந்த கடனை பெற எந்த பிணையமும் தேவையில்லை என்பதால், எந்த பிரச்னையும் இல்லாமல் பணம் வழங்கப்படும். இதனால் நீங்கள் எளிதாக தொழிலைத் தொடங்கலாம். காகித நாப்கின் தொழிலில் உங்களுக்கு லாபம் உற்பத்தி திறனை பொறுத்து கிடைக்கும்.

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, முதல் ஆண்டில் உங்களுக்கு நிகர லாபமாக ரூ.3.66 லட்சம் கிடைக்கும். இரண்டாவது ஆண்டில் நிகர லாபம் ரூ.4.19 லட்சமாகவும், மூன்றாவது ஆண்டில் ரூ.5.01 லட்சமாகவும், நான்காவது ஆண்டில் ரூ.5.77 லட்சமாகவும், ஐந்தாவது ஆண்டில் ரூ.6.50 லட்சமாகவும் இருக்கும். அதனால் நல்ல லாபம் கிடைக்கும் காகித நாப்கின் உற்பத்தி தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்க.

Tags:    

Similar News