Muyarchi Quotes in Tamil-முயற்சி இருந்தால் ஆமையும் வெல்லும்..!
வெற்றியோ தோல்வியோ நாம் முயற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் முயற்சி செய்ய தயங்க கூடாது. அதேபோல எந்த ஒரு சூழ்நிலையிலும் முயற்சியை கை விடக்கூடாது.;
Muyarchi Quotes in Tamil
நமது வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் வருகின்ற போதும் நாம் முயற்சியோடு போராடுகின்றவர்களே வெற்றியடைவர் என்பது திண்ணமாகும். நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெற்றி அடைகின்றோமோ தோல்வி அடைகின்றோமோ முயற்சியினை ஒரு போதும் கைவிடக்கூடாது. முயற்சி என்பதுதான் தன்னம்பிக்கையின் மறுவடிவம்.
Muyarchi Quotes in Tamil
நம்பிக்கை இருக்கும் வரை முயற்சியை கைவிடுதல் கூடாது. வெற்றி அடையும்வரை முயற்சி என்பது தொடர்ந்தால் வேண்டும். முயற்சி குறித்த மேற்கோள்கள் இதோ உங்களுக்காக:-
நடக்கும் என்று
நினைத்துக் கொண்டு
நடக்கும் என்பதில் நம்பிக்கை
வைத்துக் கொண்டு
விடா முயற்சி செய் வெற்றி
நிச்சயம் ஒரு நாள்
உன்னைத் தேடி வரும்.
தன்னால் முடியாது என்று
நினைப்பவன் வெற்றி பெற
தவறிவிடுகிறான்.. தன்னால்
முடியும் என்று நம்ம்பிக்கை
வைத்து முழு முயற்சியோடு
பாடுபடுபவன் மற்றவர்கள்
விட்ட வெற்றியையும் சேர்த்து
பெற்றுக் கொள்வான்.
Muyarchi Quotes in Tamil
மண்ணில் விழுவது
அவமானம் இல்லை
விழுந்தால் முயற்சி செய்து
விதையாக மாறி பெரு
விருட்சமாக எழு.
உன்னால் முடியும் வரை
முயற்சி செய்.. உன்னால்
முடியாது போனால்
பயிற்சி செய்.
முயற்சி செய்ய சிறு
நொடி கூட தயங்காதே
முயற்சி செய்யும் போது
தடைகளும் உன்னை
தலை வணங்கும்.
முயற்சி என்பது விதை
போல அதை விதைத்துக்
கொண்டே இரு விதைத்தால்
மரம் இல்லையேல்
நிலத்திற்கு உரம்.
Muyarchi Quotes in Tamil
உன் முயற்சிகள் உன்னை
பல முறை கைவிட்டாலும்
நீ ஒரு போதும் முயற்சியை
கைவிடாதே.. முயற்சி தான்
உனக்கான வெற்றியை
உன்னிடம் அழைத்து வரும்.
முயற்சியும் பயிற்சியும்
உன்னிடத்தில்
இருக்குமானால்
உன்னுடைய இலக்கினை
உன்னால் அடையமுடியும்.
வெற்றியின் ரகசியம்
உன்னில் நீ நம்பிக்கை
வைத்து விடாமுயற்சி
செய்வது தான்.
வாழ்க்கையில் நீ
உயரத்தை அடைவதும்
ஒன்றும் இல்லாதவனாக
இருப்பதும் உன் முயற்சியில்
மட்டுமே தங்கி இருக்கின்றது.
Muyarchi Quotes in Tamil
முயற்சி இல்லாமல்
உன்னில் நம்பிக்கை
வைப்பது கால்கள்
இல்லாமல் நெடுந்தூரம்
நடப்பது போன்றதாகும்.
வாழ்க்கையில் உன்
முயற்சி தோற்கலாம்..
ஆனால் நீ முயற்சி
செய்வதை தோற்றுப்போக
விட்டு விடாதே.. முயற்சி
செய்வதை நிறுத்துவது தான்
உண்மையான தோல்வி.
ஏற்றம் வரும் போதும்
இறக்கம் வரும் போதும்
நம் கூடவே இருக்கும்
ஒரு நண்பன் நமது
முயற்சியும் நம்பிக்கையும்
மட்டும் தான்.
உன்னால் இயன்றவரை
முயன்று விடு நீ
இயற்கை எய்திய பிறகு
உன் வாழ்க்கை ஒருவரலாறாக
இருக்க வேண்டும்.
வெற்றி எனும் உயரத்தை
அடைய உனக்கு வழிகாட்டும்
வழிகாட்டி தான் உன் தோல்வி
உன் தோல்விகளை கண்டு
கலங்காமல் தொடர்ந்து
முயற்சி செய்து
கொண்டே இரு.
Muyarchi Quotes in Tamil
வரலாறு உன் பெயரை
சொல்ல வேண்டுமானால்
நீ பல முறை என்னை
தேடி வர வேண்டும்
இப்படிக்கு முயற்சி.
உன் வெற்றிக்கான
ஒவ்வொரு வாய்ப்பும்
உன் ஒவ்வொரு முயற்சியிலும்
உன் நம்பிக்கையிலும் தான்
ஒளிந்திருக்கும்.
வாழ்க்கை என்பது
ஒரு போதும் நீ எதிர் பார்ப்பது
போல அமையாது ஆனால்
நீ எதிர் பார்ப்பது போல
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக் கொள்ள முடியும்..
நீ முயற்சி செய்தால்.
Muyarchi Quotes in Tamil
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன்
எல்லாம் மனிதன் இல்லை.
தன் உயிர் இருக்கும் வரை
முயற்சி செய்து கொண்டிருப்பவனே
மனிதன்.