Legal heir meaning in tamil-"வாரிசு சான்றிதழ்" ஆன்லைனில் பெறுவது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!

வாரிசு சான்றிதழ் எதற்கெல்லாம் தேவை? யாரெல்லாம் வாரிசு ஆகலாம்? போன்ற விபரங்களை விரிவாக பார்க்கலாம் வாங்க.;

Update: 2023-08-16 09:33 GMT

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?(கோப்பு படம்)

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil

ஒருவர் இறந்தபின்னர் அவரது உடைமைகள் மற்றும் சொத்துகள் யாருக்குச் சேரவேண்டும் என்பதற்கான வாரிசுரிமையை அவரது சட்டப்பூர்வ வாரிசு (கள்) பெற்றிருப்பார்கள். ஒரு சட்டபூர்வவாரிசு சான்றிதழ் என்பது இறந்தவருக்கும் சட்டப்பூர்வ வாரிசு(கள்)க்கும் இடையேயான உறவை உறுதிப்படுத்துவதற்கான மிக முக்கியமான ஆவணமாகும்.

வழக்கமாக, அவ்வாறான சான்றிதழைப் பெற உயிரோடிருக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாநகராட்சி அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது வாரிசுரிமை சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கட்டுரையில், வாரிசு சான்றிதழின் முக்கியத்துவம் மற்றும் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ரெவ்-114 (rev-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து அறிவோம் வாருங்கள். 

சட்டபூர்வ வாரிசு சான்றிதழின் முக்கியத்துவம்

ஒரு சொத்தின் பதிவுபெற்ற உரிமையாளர் ஒருவரின் மறைவுக்குப் பிறகு, அவரது உடைமைகள் அல்லது சொத்துக்களின் உரிமை உடைமையைக் கோருவதற்கு ஒரு குடும்ப உறுப்பினர் (மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) அவர்/அவள் அவரின் முறையான வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டும்.

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil


நடைமுறையில் சொத்துகள் மீது பொய்யாக உரிமை கோரும் வழக்குகள் ஏற்கனவே உள்ளன. ஆகவே , வாரிசு சான்றிதழைப் பெறுவது இன்றியமையாததாகிறது. தகுதியான வாரிசு(கள்) குறித்த முறையான விசாரணைக்குப் பிறகு அரசு அதிகாரிகளால் அந்த ஆவணம் வழங்கப்படுகிறது.

பல்வேறு நோக்கங்களுக்காக வாரிசுச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அவற்றில் :

  • இறந்தவரின் அசையும் அல்லது அசையா சொத்துகள் மற்றும் சொத்துகளின் உரிமை மாற்றம்
  • ஒருவரின் மரணத்திற்குப் பிறகு சட்டப்பூர்வ உரிமையாளர்களை அடையாளம் காணுதல்
  • சட்டப்பூர்வ உரிமை உடைமைக்கான சான்றாக வாரிசு சான்றிதழை சமர்ப்பித்து வழக்குகளைத் தவிர்ப்பது
  • காப்பீட்டுத் திட்டம்,வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைத் தொகை ஆகியவற்றின் பலன்களைப் பெறுதல்
  • குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான இசைவாணை பெற
  • இறந்தவர் சொத்தை உரிமை மாற்றம் செய்தல் அல்லது மூதாதையர் சொத்துகளை வாங்குவது போன்றவற்றுக்கு
  • சம்பள நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கு (மாநில/மத்திய அரசு ஊழியர்களுக்கு)
  • கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற
  • வைப்பு நிதி அல்லது முதலீடுகளின் உரிமை மாற்றம் செய்ய
  • பயன்படுகள் பொருட்களின் உரிமை மாற்றத்திற்கு

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil

வாரிசு சான்றிதழ் என்பதன் அர்த்தம்

வாரிசு சான்றிதழ் என்பது, மறைந்த குடும்ப உறுப்பினரின் சொத்துகள் அல்லது நிலுவைத் தொகைகள் மீதான உரிமையை நிலைநாட்ட வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் ஒரு சட்டப்பூர்வமான ஆவணமாகும்.

வாரிசு சான்றிதழ் அல்லது சட்டப்பூர்வ சான்றிதழில் (ஆங்கிலத்தில்- லீகல் ஹேர்) இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு(களின்) பெயர்(கள்) மற்றும் இறந்தவருடனான அவர்களது உறவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் . எனவே, இது முறையான வாரிசை அடையாளம் காண உதவுகிறது. வாரிசு சர்டிஃபிகேட் என்பதை , தமிழில் வாரிசு சான்றிதழ் என்றும் அழைப்பார்கள்.

இணைய வழி வாரிசு சான்றிதழ்:

தமிழ்நாட்டில் இணைய வழி சட்டபூர்வ வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஒரு சட்டப்பூர்வ வாரிசுதாரர் இணையத்தில் மட்டுமல்லாமல் நேரடியாகவும்   சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறலாம். அதற்கு  அவர்கள்  அந்த சம்பந்தப்பட்ட பகுதியின் நகராட்சி அலுவலகம்/தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.

இருப்பினும், தமிழகத்தில் வாரிசு சான்றிதழுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பொதுமக்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களின் நலன்களை மையப்படுத்திய சேவைகளை பொது சேவை மையங்கள் (CSCs) மூலம் ஆன்லைனில் அணுக தமிழ்நாடு அரசு இ-சேவை (e-Sevai )த்தின் வசதியை வழங்குகிறது.

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil


சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவும் மற்றும் அதைப் பதிவிறக்கம் செய்வதற்கும் படிப்படியான நடைமுறைகள் கீழே வழிகாட்டப்பட்டுள்ளது :

படி 1: அதிகாரப்பூர்வ தமிழ்நாடு இ-சேவை போர்டல் (TN e-Sevai) போர்ட்டலுக்குச் உங்கள் அறிமுக ஆவணங்களோடு சென்று புகுபதிகை செய்யுங்கள்.

முதல் முறை பயனர்கள் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் ‘புதிய பயனரா? இங்கே பதிவு செய்யவும்‘ என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யுங்கள்.

படி 2: அதற்கு அடுத்த பக்கத்தில் முழுப்பெயர், தாலுகா, மாவட்டம், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை வழங்கவும். கேப்ட்சாவை உள்ளிட்டு ‘இணை‘ என்பதில் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் OTP ஐ (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடவும்.

படி 4: வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, ‘புகுபதிகை‘ என்பதில் கிளிக் செய்து, உங்கள் புகுபதிகை அறிமுக ஆவணங்களை உள்ளிடவும். பதிவு செய்யப்பட்ட தங்களின் மொபைல் எண்ணைக் கொண்டும் பயனர்கள் புகுபதிகை செய்யலாம் .

படி 5: இடது புற பலகத்தில் உள்ள ‘சேவை வாரியாக’ என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யவும். பட்டியலில் இருக்கக்கூடிய ஆவணங்களில், ரெவ் 114 (REV-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் மீது கிளிக் செய்யவும்.

படி 6: கீழே காட்டப்பட்டுள்ளபடி ஒரு புதிய விண்டோ தோன்றும். அந்தப் பக்கத்தின் கீழே சென்று, ‘தொடரவும்‘ என்பதில் கிளிக் செய்யவும்.


படி 7: பெயர், CAN எண், தந்தையின் பெயர், மின்னஞ்சல் ஐடி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற சம்பந்தப்பட்ட விவரங்களைச் அடுத்த பக்கத்தில், சமர்ப்பிக்கவும். ‘தேடு‘ என்பதில் கிளிக் செய்யவும். CAN எண் இல்லாத பயனர்கள் ‘CAN பதிவு செய்ய’ என்ற இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil

படி 8: இப்போது நீங்கள் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் படிவத்தை பிணையத்தில் பார்க்கலாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, பிணையம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்துங்கள். .

கட்டணம் செலுத்துவது வெற்றிகரமாக நிறைவேறியவுடன் வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்திற்கான ஒரு ஒப்புகை ரசீதை நீங்கள் பெறுவீர்கள். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கலாம். வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் முன்னேற்றத்தை சரிபார்க்கப் பயன்படுத்துவதற்கான விண்ணப்ப எண் ரசீதில் கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கு அதிகாரபூர்வ இ-சேவை (eSevai)போர்ட்டலில் இருந்து இணையம் மூலமாக ஒருவர் விண்ணப்பிக்கலாம். மேலும் அதே இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர் இணையத்தில் விண்ணப்பத்தின் முன்னேற்ற நிலையை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட உடன் , வருவாய்த்துறை பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையிலான வரிசு சான்றிதழை வழங்கும்.

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான தகுதிகள்

தமிழ்நாட்டில் வரிசு சான்றிதழைப் பெற இந்தியச் சட்டத்தில் வழங்கப்பட்டவைகளின் படி கீழே கொடுக்கப்பட்டன உறவுமுறைகள் உரிமையுடையவர்கள்:

  • இறந்தவரின் துணைவர் (மனைவி/கணவன்).
  • இறந்தவரின் குழந்தைகள் (மகன்/மகள்).
  • இறந்தவரின் பெற்றோர் (தாய்/தந்தை).
  • இறந்தவரின் உடன்பிறப்புக்கள் (சகோதரன்/சகோதரி).

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil


தேவைப்படும் ஆவணங்கள்

சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் இரண்டு வகைப்படும்: அதில் ஒன்று இறந்தவருடைய சட்டபூர்வமான வாரிசுகளுக்கு அந்த சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தாசில்தார் வழங்கும் ஆவணம். மற்றொன்று நீதிமன்றங்கள் வழங்கும் சான்றிதழ்

தமிழ்நாட்டில் ரெவ்-114 (REV-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் போது ஒருவருக்குத் தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சுய பிரமாணப்பத்திரம்

விண்ணப்பதாரரின் செல்லத்தக்க அடையாளச் சான்று ஆவணம் (ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டை)

விண்ணப்பதாரரின் செல்லத்தக்க முகவரிச் சான்று ஆவணம் (செல்லத்தக்க அடையாளச் சான்று ஆவணங்கள், தொலைபேசி/மொபைல் கட்டண சீட்டு, சமையல் எரிவாயு கட்டண சீட்டு , சட்டப்பூர்வ வாரிசின் பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய வங்கிக்கணக்குப் புத்தகம் )

இறந்தவரின் இறப்பு சான்றிதழ்

சட்டப்பூர்வ வாரிசு(கள்) பிறந்த தேதி சான்று (பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பள்ளி மாற்றம்/விட்டு விலகிய சான்றிதழ், பாஸ்போர்ட்)

இறந்தவரின் முகவரி சான்று

சட்டபூர்வான வாரிசு சான்றிதழ் வேண்டி ஒரு குழந்தை விண்ணப்பிக்கவேண்டும் என்றால் தேவைப்படும் ஆவணங்கள்

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil

பெற்றோர் இறப்பு பதிவேடு

  • விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழ்,கடவுச்சீட்டு, UID மற்றும் TC ஆகியவற்றை இணைத்து ஒரு விண்ணப்பம்.
  • சட்டபூர்வான வாரிசு சான்றிதழ் வேண்டி துணைவர் ஒருவர் விண்ணப்பிக்கவேண்டும் என்றால் தேவைப்படும் ஆவணங்கள்
  • மனைவி சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் இறந்த நபரின் இறந்த மனைவி உட்பட அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளையும் குறிப்பிட்டு துணைவரின் சுய அறிவிப்பு
  • ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை
  • திருமணப் பதிவுச் சான்றிதழ்
  • குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்/ இடமாற்றச் சான்றிதழ்(TC)

பெற்றோர் இறந்த நிலையில் விண்ணப்பதாரர் ஒரு மைனர் குழந்தையாக இருந்தால் தேவைப்படும் ஆவணங்கள்:

பெற்றோரின் இறப்பு பதிவேடுகள்

  • பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, விண்ணப்பதாரரின் TC மற்றும் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் ஆதார் அட்டைகள் போன்ற சான்றுகள்
  • பாதுகாவலருடனான வாரிசுகளின் உறவை நிலைநாட்டும் வகையிலான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு

இணைய வழி வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலை அறிய

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைன் வரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலையை சில எளிய படிநிலைகளைப் பின்பற்றி காணலாம். TN இ-மாவட்டத்துறை புகுபதிகை பக்கம் சென்று வலது புறமூலையில் உள்ள பெட்டியில் விண்ணப்பம்/ஒப்புகை சீட்டின் எண்ணை உள்ளிடவும்.

Legal heir certificate meaning in tamil, Legal heir meaning in tamil

மாற்றுவழியாக, பயனர்கள் இ-சேவை போர்ட்டலில் புகுபதிகை செய்து சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பதில் கிளிக் செய்யலாம். புதிய பக்கத்திற்குத் மாற்றி அனுப்பப்பட்ட உடன் , வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலையை அறிய, ‘நிலையைச் சரிபார்க்கவும்’ என்ற விருப்பத்தேர்வின் மீது கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு டிஜிட்டல் கையொப்பமிட்டவுடன், போர்ட்டலில் உள்ள பிணையவழி சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News