kyc means tamil-அது என்னங்க KYC ? எதுக்கு KYC இருக்கணும்? தெரிஞ்சிக்கங்க..!
KYC என்பது என்ன? KYC அவசியமா? எதற்கெல்லாம் இது பயன்படுகிறது போன்றவைகளைப் பார்ப்போம் வாங்க.;
kyc abbreviation, kyc means tamil
KYC என்பது Know Your Customer என்பதின் சுருக்கம். தமிழில் 'உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்' என்பது அதன் பொருள். வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலைப் பெறும் நடைமுறையே 'உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்' எனும் முறை.
ஒரு வங்கிக் கணக்கின் உண்மையான உரிமையாளர் யார்? அந்தக் கணக்கின் நாமினி யார்? இந்த கணக்கிற்கு எங்கிருந்து பணம் வருகிறது? கணக்கு உரிமையாளரின் உண்மையான தொழில் என்ன? அவர் செய்யும் வங்கி நடவடிக்கைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன போன்றவற்றை அறிய இந்த கேஒய்சி வழிகாட்டுகிறது. மேலும் வாடிக்கையாளர் மூலம் பிற்காலத்தில் வங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை வங்கி திறமையாக கையாள இந்த கேஒய்சி உதவுகிறது.
இந்த கேஒய்சியின் முக்கிய நோக்கம் பண மோசடியை ஒழிப்பதாகும். அதாவது சட்டத்திற்கு புறம்பான பணத்தை ஒழிப்பதாகும். வாடிக்கையாளரின் இரண்டு தகவல்களை இந்த கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
kyc abbreviation, kyc means tamil
ஒன்று வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி. பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும்.
வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?
ஆம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 7ல் சொல்லப்பட்டிருக்கும் பண மோசடியை தடை செய்தல் என்ற சட்டம் ஒரு வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க வழி செய்கிறது.
வங்கிகளில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கும் கேஒய்சி பொருந்துமா?
kyc abbreviation, kyc means tamil
வைப்புத் தொகைகளுக்கான வரையைறகளை மிகத் தெளிவாக ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. எனினினும் வைப்புத் தொகையில் முதலீடு செய்யும் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி ஆகியவற்றை பரிசோதிப்பது என்பது சம்பந்தப்பட்ட வங்கியைப் பொருத்ததாகும். அவ்வாறு செய்வதம் மூலம் பண மோசடிகளைத் தடுக்க முடியும்.
முதலீடுகளில் KYC
KYC என்பதன் விரிவாக்கம் "நோ யுவர் கஸ்டமர் (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்)" என்பதாகும். மேலும் இந்தச் சொல்லானது எந்தவொரு நிதி அமைப்புடனும் கணக்கைத் தொடங்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும். அதாவது வாடிக்கையாளரை அடையாளம் காணும் செயல்முறைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
பரிந்துரைக்கப்படும் புகைப்பட அடையாள அட்டை (உதாரணமாக, KYC அட்டை, ஆதார் அட்டை) மற்றும் முகவரிச் சான்று மற்றும் தனிநபர் சரிபார்ப்பு (KYC) போன்ற தொடர்புடைய ஆவணங்களின் மூலம் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை KYC உறுதி செய்திடும்.
kyc abbreviation, kyc means tamil
கருப்புப் பணத் தடுப்புச் சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி KYC இணக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதி,கருப்புப் பணத் தடுப்பு (AML), SEBI யின் தரநிலைகளில் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (CFT), சந்தை இடைத்தரகர்களின் கடப்பாடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஒன்றாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
நோ யுவர் கஸ்டமர் (Know Your Customer- KYC ) வழக்கமாக 2 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது:
பகுதி I
அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிதி இடைத்தரகர்களின் மூலம் பயன்படுத்தப்படுவதற்கு மத்திய KYC பதிவேட்டின் (சீரான KYC) மூலம் பரிந்துரைக்கப்படும் முதலீட்டாளரின் அடிப்படையான மற்றும் சீரான KYC விவரங்களைக் கிடைக்கச் செய்கிறது.
kyc abbreviation, kyc means தமிழ்
பகுதி II
மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் புரோக்கர், முதலீட்டாளரின் கணக்கைத் தொடங்கும் டெபாசிட்டரி பங்கேற்பாளர் போன்ற நிதி இடைத்தரகர்களால் தனித்தனியாகப் பெறப்பட்ட கூடுதல் தகவல்களைப் பெற KYC பயன்படுகிறது.