ஈரோட்டில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சி: பங்கேற்க நீங்கள் தயாரா?
ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வரும் 14 முதல் நடைபெறுகிறது.;
ஈரோட்டில் உள்ள கனரா வங்கியின், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச கோழி வளர்ப்பு பயிற்சி, வரும் டிசம்பர் 14 முதல் 24-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் சேருவதற்கு, கிராம பகுதியை சேர்ந்தவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்வோர் அவர்களது குடும்பத்தார், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு - 638002, என்ற முகவரியிலும், 0424 2400338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.