Financial Management in Tamil-பணத்தை எப்படி கையாளணும்? தெரிஞ்சுக்கங்க..!
பணத்தை வீணாக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக அமையும். பொருளாதார அறிவுரைகளான இந்த விஷயங்களை கவனிச்சா பணம் நம் வசம்தான்.
Financial Management in Tamil
ஏழைகள், நடுத்தர மக்கள், 10 விஷயங்களால் தான் வீணாகப் பணத்தை இழக்கிறார்கள் என்கிறார், உலகின் முதலீட்டு சாம்பியன் ஆன வாரன் பஃபெட். அவர் சொல்லும் யோசனைகளை பார்க்கலாம் வாங்க.
உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் முக்கியமானவரான வாரன் பஃபெட், பல ஆண்டுகளாக மக்களுக்கு முதலீட்டு ஐடியாக்கள், நிதி மேலாண்மை ஆலோசனைகளை வழங்கி வருகிறார். வாரன் பஃபெட், தனது முதலீட்டு அறிவுரைகள் மற்றும் தனிப்பட்ட நிதி குறித்த ஆலோசனைகளுக்கு பெயர் பெற்றவர். நிதி மேலாண்மையில் அவரது அணுகுமுறை, பலராலும் பின்பற்றப்படுகிறது.
Financial Management in Tamil
பெரும்பான்மையான ஏழை மக்கள், எப்போதும் ஏழைகளாகவே இருப்பதற்குக் காரணம் அவர்களின் மோசமான நிதி கையாளல் முறைதான் என்கிறார் வாரன் பஃபெட். நிதி மேலாண்மை, முதலீடு பற்றிய அறிவின்மையால் எடுக்கும் மோசமான 10 நிதி முடிவுகள் பற்றி கூறியுள்ளார் வாரன் பஃபெட். பொதுவாக, மக்கள் பணத்தை வீணடிக்கக்கூடிய விஷயங்களைப் பார்க்கலாம்:
1. மதிப்பிழக்கும் சொத்துக்களுக்கான கடனைத் தவிர்க்க வேண்டும்: "செலவுக்குப் பிறகு மிச்சமிருப்பதைச் சேமிக்காதீர்கள். சேமிப்புக்குப் பிறகான மீதியை செலவிடுங்கள்." வாரன் பஃபெட் முதலில் சேமிப்பது மற்றும் கடனைத் தவிர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
குறிப்பாக காலப்போக்கில் மதிப்பை இழக்கும் பொருட்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்கச் சொல்கிறார். இன்று நாம் வாங்கும் செல்போன், வாகனங்கள் உள்ளிட பொருட்களின் மதிப்பு அதன் பிறகு குறையும். அவற்றை கடன் வாங்கி வாங்கிக் கூடாது என்கிறார்
2. அற்பமான செலவுகள்: "உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கினால், விரைவில் உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும்." இது ஒரு பொருளை வாங்கியே ஆக வேண்டும் எனத் தூண்டும் மனக்கிளர்ச்சியால் தேவையற்ற கொள்முதல் செய்வதன் ஆபத்தைப் பற்றி பேசுகிறது.
Financial Management in Tamil
3. அதிக வட்டி கடன்: அதிக வட்டி கொண்ட கடனுக்கு எதிராக பஃபெட் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். கிரெடிட் கார்டுகள் அல்லது கடன்களுக்கு அதிக வட்டி செலுத்துவது நிதி ஆதாரங்களை கணிசமாகக் குறைக்கும்.
4. முதலீடுகளை புறக்கணித்தல்: "ஒருபோதும் ஒரே வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்." வருமானத்தை மட்டும் நம்பாமல் நமது செல்வத்தை உருவாக்க முதலீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார் .
5. ஆடம்பர பழக்கவழக்கங்கள்: வாரன் பஃபெட் தனது சிக்கனமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். அதிக பணம் செலவு செய்து வெளியில் உணவு உண்பது அல்லது ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது போன்ற விலையுயர்ந்த பழக்கங்களைத் தவிர்ப்பது, தேவைக்கு ஏற்றபடி வாழ்வது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
Financial Management in Tamil
6. இன்சூரன்ஸை கைவிடுதல்: இன்சூரன்ஸ் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், இடர் மேலாண்மையின் மதிப்பை பஃபெட் புரிந்துகொள்கிறார். நமக்கென போதுமான காப்பீடு இல்லாதது ஒரு மிக மோசமான தவறு என்கிறார் பஃபெட்.
7. பென்னி வைஸ், பவுண்ட் ஃபூலிஷ்: வாரன் பஃபெட் மதிப்பை நம்புகிறார், மலிவானதை அல்ல. மலிவு என்பதற்காக தரமற்றதைப் பயன்படுத்துவது பெரிய செலவில் இழுத்துக் கொண்டு போய் விடும். சில சமயங்களில், சிறிய விஷயங்களில் அதிக சிக்கனமாக இருப்பது பின்னர் குறிப்பிடத்தக்க செலவுகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்
Financial Management in Tamil
8. நிதி சார்ந்த அறிவின்மை: "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமல் இருப்பதில் இருந்து ஆபத்து உருவாகிறது." பஃபெட்டின் முதலீட்டு வெற்றிக்கு நிதி மற்றும் முதலீடு பற்றிய ஆழ்ந்த புரிதல் தான் காரணமாக இருந்தது.