ஓட்டுநர் உரிமம் வாங்கணுமா..? ஜூன் மாத புதிய அப்டேட்..!

ஜூன் மாதத்தில் இதில் எல்லாம் மாற்றங்கள் வரப்போகுது. அதை தெரிந்து வைத்துக்கொண்டு கொஞ்சம் உஷாராக இருங்க.

Update: 2024-05-29 03:20 GMT

driving license new rules-ஓட்டுநர் உரிமம் புதிய நடைமுறை (கோப்பு படம்)

Driving License New Rules, Aadhaar Card Update,,LPG Cylinder Price

ஜூன் மாதத் தொடக்கத்தில் ஆதார் அட்டை புதுப்பிப்பு வழிகாட்டுதல்கள், எல்பிஜி சிலிண்டர் விலை விபரங்கள் மற்றும் புதிய டிரைவிங் லைசென்ஸ் விதிகள் உட்பட அதன் தொடர்புடைய பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த மாற்றங்கள் பெரும்பாலானவை நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். சில நேரங்களில் நமது வீட்டு பட்ஜெட்டையும் பாதிக்கலாம். ஜூன் 1ம் தேதி முதல் என்னென்ன மாற்றங்கள் நடக்கவுள்ள? அதன் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களில் முக்கியமாக் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

Driving License New Rules

எல்பிஜி சிலிண்டர் விலை

எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் மாதாந்திர விலைத் திருத்த நடைமுறையின் ஒரு பகுதியாக ஜூன் 1 ஆம் தேதி திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலையை திருத்தம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மே மாதம் குறைத்தன. வர்த்தக சிலிண்டர்களின் விலையை மேலும் குறைக்க வாய்ப்புகள் உள்ளன.

Driving License New Rules

புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் பல புதிய ஓட்டுநர் உரிம விதிகளை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, தனிநபர்கள் தனியார் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் சோதனைகளை எடுக்க முடியும். அரசு ஆர்டிஓ அலுவகங்களில் சோதனைகள் கட்டாயம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மட்டுமே ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களின் சோதனைகளை எடுக்க அனுமதிக்கப்படும்.

Driving License New Rules

ஆதார் அட்டை புதுப்பிப்பு

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஜூன் 14-ஆம் தேதி வரை ஆன்லைனில் தங்கள் தகவல்களை ஐடியில் புதுப்பிக்கலாம். மேலும், ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரூ. 50 செலுத்தி பயனர்கள் தங்களின் ஆதார் அட்டையை ஆஃப்லைனில் புதுப்பிக்கலாம் .

Driving License New Rules

வங்கி விடுமுறைகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டரின்படி, வரும் மாதத்தில் அதாவது ஜூன் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த நியமிக்கப்பட்ட விடுமுறைகளில் ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ராஜ சங்கராந்தி மற்றும் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட மாதத்தின் பிற விடுமுறைகள் அடங்கும். 

Tags:    

Similar News