ஈரோடு, கோபி ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு மற்றும் கோபி ஐ.டி.ஐ-க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-12 23:00 GMT

கோபிசெட்டிபாளையம்டி.ஜி.புதூர் மற்றும் ஈரோடு காசிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், டெக்ஸ்டைல் வெட்ப்ராசசிங் டெக்னீசியன் தொழில் பிரிவிலும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழில்பிரிவிலும் அரசு இட ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு, சிறப்பு கட்டணம் பணம் இல்லாத பயிற்சியுடன் அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், வரைபட கருவிகள், தையல் கூலியுடன் 2சீருடைகள், காலணி, பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News