Bank letter format in tamil-வங்கியில் காசோலை புத்தகம் பெற கடிதம் எழுதுவோம் வாங்க..!

கடிதம் என்பது சில அடிப்படை விஷயங்களை புரிய வைக்கவேண்டும். குறிப்பாக அலுவலக கடிதங்களை படிப்பவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி எழுதுவது சிறப்பாக இருக்கும்.

Update: 2023-09-19 05:58 GMT

Bank letter format in tamil-வங்கிக்கான கடிதம் (மாதிரி படம்)

Bank letter format in tamil

ஒரு நிறுவனத்துக்கு அல்லது வங்கிக்கு கடிதம் எழுதுவதற்கு சில அடிப்படை விதிமுறைகளை நாம் பின்பற்றவேண்டும். அதன் அடிப்படையில் கடிதம் எழுதப்பட்டால்தான் நடவடிக்கை எடுப்பதும் விரைவாக இருக்கும். 

நமது நோக்கமும் நிறைவேறவேண்டும்.அதேபோல அவர்களும் எளிதாக நமது நோக்கத்தை அறிதல் வேண்டும். அதற்கேற்ப கடிதம் அமைதல்வேண்டும்.

குறிப்பாக ஒரு நிர்வாகத்தில் கடிதத்தை முழுமையாக படிக்கமாட்டார்கள். அதற்கான அவகாசமும் இருக்காது. அவர்களுக்குத் தேவையான விஷயத்தைமட்டும் எடுத்துக்கொள்வார்கள். அதை நாம் கடிதம் எழுதும்போது அடிக்கோடிட்டு காட்டலாம். பெரும்பாலும் கடிதத்தின் பொருளில் நாம் கடிதம் எழுதுவதின் நோக்கம் குறித்து தெளிவாக குறிப்பிட்டுவிட்டாலே போதுமானது.

Bank letter format in tamil

இன்று ஒரு வங்கிக்கு கடிதம் எழுதும் முறையை நாம் பார்ப்போம். உதாரணமாக இன்று காசோலை புத்தகம் கேட்டு கடிதம் எழுதலாம் வாங்க.

கடிதம்

அனுப்புனர்

                      க.சு.பூங்குன்றன்,

                     2/26 B, காந்தி நகர்,

                     முதல் குறுக்குத்தெரு,

                     கோனேரிப்பட்டி,

                     ராசிபுரம்,

                    நாமக்கல் மாவட்டம்.

பெறுநர்

                   மேலாளர் அவர்கள்,

                   இந்தியன் ஒவர்சீஸ் வங்கி,

                   ராசிபுரம் கிளை.

ஐயா,

                  பொருள் : காசோலைப் புத்தகம் பெறுவது சார்பு.

வணக்கம். நான் மேற்காணும் முகவரியில் வசித்து வருகிறேன். நான் தங்கள் வங்கியின் வாடிக்கையாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். எனது வங்கிக் கணக்கு எண் : 263542.

எனது வங்கிச் சேவைகளை எளிமைப்படுத்திக்கொள்ள எனக்கு காசோலைப்புத்தகம் தேவைப்படுகிறது. அதனால், எனக்கு காசோலைப்புத்தகம் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இவண்,

உண்மையுள்ள,

-கையெழுத்து -

(க.சு.பூங்குன்றன்)


இடம் : ராசிபுரம்

தேதி : 19.09.2023

மொபைல் எண் :

(மேற்காணும் இடமும் தேதியும் "இவண்" என்று கடிதம் முடியும் இடத்தின் வலது ஓரத்தில் எழுதப்படவேண்டும்.)

Bank letter format in tamil

குறிப்பு :

 கடிதத்திற்கான அடிப்படை வழிமுறைகளாவன :

அனுப்புனர்

பெறுநர்

விழித்தல் -அதாவது ஐயா, அம்ம, என்று குறிப்பிடுவது.

பொருள் - கடிதத்தின் நோக்கம்.

கடிதத்தின் உடல் (Body of the letter) - இங்கு நம்மைப்பற்றிய விபரத்தைக் குறிப்பிட்டு நமது தேவை என்ன என்பதை சற்று விரிவாக கூறுதல்.

முடித்தல் - நன்றி கூறுதல்

இவண் அல்லது இப்படிக்கு என்று குறிப்பிட்டு பெயரை அடைப்புக்குறிக்குள் எழுதி பெயருக்கு மேலே கையெழுத்து இடவேண்டும்.

Bank letter format in tamil

1. அனுப்புனர், பெறுநர் எழுதி காற்புள்ளி (கமா ) வைக்கக் கூடாது.

2. முகவரி எழுதும்போது ஒவ்வொரு வரிக்கும் காற்புள்ளி (கமா) வைக்க வேண்டும்.

3. ஐயா என்பதற்கு காற்புள்ளி வைக்கவேண்டும்.

4. பொருள் ஐயா என்பதற்கு கீழே சற்று வலது புறம் நகர்த்தி எழுதப்பட வேண்டும்.

5. பொருள் எழுதி அரைப்புள்ளி (:)அதாவது கோலன் வைக்கவேண்டும்.

6. கடிதத்தை ஒரே பத்தியாக எழுதாமல், இரண்டு பத்திகளாக பிரித்து எழுதுவது கடிதத்தின் நேர்த்தியைக் காட்டும்.

7. நன்றி கூறி காற்புள்ளி வைக்கவேண்டும்.

8. இவண் என்பதிலும் காற்புள்ளி வைக்க வேண்டும்.

9. செல் பேசி எண் இப்போது அவசியம் என்பதால் அதையும் குறிப்பிடலாம்.

நினைவில் கொள்ளவேண்டியவை :

ஒரு அதிகாரி அல்லது அலுவலருக்கு கடிதம் எழுதும்போது அவரது பதவியைத்தான் குறிப்பிடுகிறோம். அதனால் ஒரு பதவிக்கு முன்னால் திரு, திருவாளர் போன்றவை தேவை இல்லை. பெயர் குறிப்பிட்டு எழுதினால் மட்டுமே மரியாதை நிமித்தமாக திரு அல்லது திருமதி குறிப்பிடவேண்டும்.

திரு.இயக்குனர் அவர்கள் என்பது தவறு. இயக்குனர் அவர்கள், திரு.உதயன் அவர்கள், இப்படித்தான் குறிப்பிட வேண்டும்.

மாதிரி கடிதம் பிடிஎஃப் கோப்பாக தரப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/1Yt8r7pdQ2h8uDor6a5eEZSIXzpDW-xGV/view?usp=drive_link

Tags:    

Similar News