45 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? விமான ஆணையத்தில் வேலை இருக்கு!
பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., முடித்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விமான ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.;
இதன் விவரம் வருமாறு
Air India Assets Holding Limited எனப்படும், AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Air India Assets Holding Limited (AIAHL) மேலாண்மை பொதுத்துறை நிறுவனம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 10
பணி : Manager, Officer
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE, B.Tech, CA சட்டத்துறையில் முதுநிலை பட்டம், MBA, டிப்ளமோ இவற்றில் பணிக்கேற்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்தந்த பணிக்கேற்ப 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு, 07.12.2021 தேதிக்குள் http://aiaha.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, தங்களது விண்ணப்ப படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Pre-Employment Medical Examination மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.