ஒரு செக்யூரிட்டி, ஹீரோ ஆகலாம் தெரியுமா? அந்த தன்னம்பிக்கை உங்களுக்கு வேண்டாமா?

ஒரு சாதாரண மனிதன் ஹீரோ ஆவது அவரது தன்னம்பிக்கையில் உள்ளது.

Update: 2022-04-21 11:35 GMT

இட்ரிஸ், 2015ம் ஆண்டில் செக்யூரிட்டியாகவும் 2020ம் ஆண்டில் வங்கி ஆஃபீசராகவும் வங்கி மேனேஜருடன்.

ஒரு மனிதன் படித்திருக்கலாம்.பட்டம் வாங்கி இருக்கலாம். ஆனால் அவனுக்கு தன்னம்பிக்கை அவசியம். என்னால் முடியும் என்கிற வல்லமை இருக்க வேண்டும். இல்லையெனில் வெற்றிபெற முடியாது.

நைஜீரியா நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கும் ஒரு அனுபவமாக அமையும்.

நைஜீரியா நாட்டில் உள்ள ஒரு வங்கியின் மேனேஜர் Ayomide Babalola. இந்த மேனேஜரே இந்த கதையை கூறுகிறார்.கேளுங்கள்.

'எங்கள் வங்கியில் செக்யூரிட்டியாக இட்ரிஸ் என்பவர் 2015ம் ஆண்டில் இருந்து வேலை செய்கிறார். அவர் வாடிக்கையாளர்களை வரவேற்பது முதல் வங்கி பணியாளர்களுக்கு சல்யூட் அடிப்பது வரை அவரது ஸ்டைல் தனித்துவமாக இருக்கும். எல்லோர் மீதும் நல்ல மரியாதையை கடைபிடிப்பவர். அதனால் எனக்கு இட்ரிஸ் மீது ஒரு தனி கவனம் இருந்தது.

செக்யுரிட்டியாக, வங்கி ஆஃபீஸராக இட்ரிஸ் 

2019ம் ஆண்டில் எங்கள் வங்கியில் பணியாற்றிய ஒருவர் பதவி உயர்வில் வேறு வங்கிக்கு சென்றுவிட்டார். அந்த இடத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். அவர்களில் சிறந்தவரை, திறமையானவரை நான் தேர்வு செய்ய வேண்டும்.

அன்று மதியம் உணவு இடைவேளையில் என்னை சந்திப்பதற்கு தயங்கித் தயங்கி செக்யூரிட்டி இட்ரிஸ் வந்தார். 'சார், நான் சொல்வதை தப்பாக நினைக்காதீர்கள். நான் செக்யூரிட்டியாக இருந்தாலும் நானும் ஒரு பட்டதாரி. காலியாக உள்ள பதவிக்கு நானும் அந்த திறனறி தேர்வை எழுதுகிறேன். அந்த வேலையை நான் பெற விரும்புகிறேன் சார்', என்று தைரியமாக கூறினார்.

அவரது திறமையை பாராட்டி,'உங்களால் முடியும் என்றால் நிச்சயமாக திறனறி தேர்வில் கலந்துகொள்ளுங்கள்' என்றேன்.

செக்யூரிட்டி இட்ரிஸ்-ம் திறனறி தேர்வு எழுதினார். ஆன்லைன் தேர்வு. ஏகப்பட்டபேர் தேர்வு எழுதியிருந்தனர்.  தேர்வு முடிவுகள் 2020ம் ஆண்டில் வெளிவந்தது. எங்கே.. உங்களால் யூகிக்க முடிகிறதா? யார் டாப்பர் தெரியுமா? என்னால் நம்பவே முடியவில்லை. நமது செக்யூரிட்டி இட்ரிஸ் தான் 'பெஸ்ட் கேண்டிடேட்' ஆக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வங்கியில் ஆஃபீசர் வேலையும் கிடைத்தது. இன்று அவர் வங்கியில் ஆஃபீசர் பணியில் உள்ளார். செக்யுரிட்டியாக இருந்தவர் வங்கி ஆஃபீசர் ஆகிவிட்டார். அவரது தன்னம்பிக்கையே அவரை வெற்றியடையச் செய்தது. இப்படி அந்த நைஜீரியா வங்கி மேனேஜர் கதையை முடித்தார்.

உங்களிடம் திறமை இருந்தால், எப்போது, ​​எப்படி வாய்ப்பைப் பெறுவது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமேயானால் உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் எப்போதும் உங்கள் சொந்தக் கதையின் ஹீரோவாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

Tags:    

Similar News