namakkal news today- JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் Web Designing பயிலரங்கம்
namakkal news today- குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஒருநாள் பயிலரங்கம் நடந்தது.;
namakkal news today- குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கணினிஆய்வகத்தில் " Embedding PHP In HTML And Cyber Security In Critical Infrastructures" என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடந்தது.
JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் இயக்குநர் ஓம்சரவணா ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில்,முதல்வர் டாக்டர். தமிழரசு, பயிலரங்கில் முன்னிலை வகித்தார்.
WTT டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ராஜமுனீஸ்வரன் மற்றும் கோயம்புத்தூர், சி-கியூப் டெக்னாலஜிஸ் மணிமாறன் ஆகியோர் Resource Persons -களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், மாணவர்கள் வலை வடிவமைப்பு (Web Designing) பகுதியில் பரந்த அறிவு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தினர்.
namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.